அறிமுகம் : ஏர்டெல் ரூ.448/- ரீசார்ஜ்; எவ்வளவு டேட்டா.? எத்தனை நாள் வேலிடிட்டி.?
இந்த புதிய திட்டமானது ஜியோவின் ரூ.399/- ரீசார்ஜ் திட்டத்தை எதிர்கொள்ளும் வண்ணம் நன்மைகளை கொண்டுள்ளது.
ஜியோவின் புரட்சி புயலில் சிக்கினாலும் பார்தி ஏர்டெல், இந்தியாவில் முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனங்களில் ஒன்றாக தன்னை தக்கவைத்துக்கொள்ள தவறவில்லை. அதற்கு அடித்தளமான காரணம் - அவ்வப்போது நிறுவனம் அறிமுகம் செய்யும் (ஜியோ பாணியிலான) ரீசார்ஜ் திட்டங்கள் தான்.!

அப்படியாக தற்போது ஏர்டெல் நிறுவனம் அதன் சந்தாதாரர்களுக்கான புதிய கட்டணத் திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது. வழக்கம் போல ஜியோவை மனதிற்கொண்டு வெளியான இந்த புதிய திட்டமானது ஜியோவின் ரூ.399/- ரீசார்ஜ் திட்டத்தை எதிர்கொள்ளும் வண்ணம் நன்மைகளை கொண்டுள்ளது.

70 நாட்கள் செல்லுபடியாகும்
புதிதாக அறிமுகமாகியுள்ள ஏர்டெல் ரூ.448/- கட்டணத் திட்டத்தின் கீழ் வரம்பற்ற உள்ளூர் மற்றும் தேசிய அழைப்பு நன்மைகளுடன் நாள் ஒன்றிற்கு 1ஜிபி அளவிலான டேட்டா மற்றும் 100 எஸ்எம்எஸ் ஆகிய நன்மைகளை பெறலாம். மேலும், இந்த பேக் 70 நாட்கள் செல்லுபடியாகும்.

எல்லா ஸ்மார்ட்போனிற்கும் (3ஜி, 4ஜி) பொருந்தும்.!
இந்த புதிய ஏர்டெல் திட்டத்தின் சிறப்பான பகுதி என்னவென்றால், இது எல்லா பயனர்களுக்கும் பொருந்தும் அவர்கள் என்ன (3ஜி அல்லது 4ஜி) ஸ்மார்ட்போன் வைத்திருக்கிறார்கள் என்பது ஒரு பொருட்டே அல்ல. வழக்கமாக ஏர்டெல் நிறுவனத்தின் சில திட்டங்கள் 4ஜி சந்தாதாரர்களுக்கு மட்டுமே என்று அறிவிக்கப்படும். ஆனால் இந்த திட்டம் அந்த வரம்புகளை பெறவில்லை.

குரல் அழைப்புகளுக்கான வரம்பு.!
குரல் அழைப்புகளை பொறுத்தமட்டில், ஒரு நாளைக்கு 300 நிமிடங்கள் மற்றும் வாரத்திற்கு 1200 நிமிடங்கள் ஏன வரம்பை இந்த திட்டம் கொண்டிருக்கிறது. தரவு என்று வரும்போது, ஒரு நாளைக்கு 1 ஜிபி அளவிலான வரம்பை கொண்டுள்ளது அதை மீறினால், தரவு வேகம் 64கேபிபிஎஸ் ஆகக் குறைக்கப்படும்.

ஜியோவை விட சற்று குறைவான அளவிலேயே நன்மை.!
இருந்தாலும் கூட ஜியோவின் ரூ.399/- திட்டத்துடன் ஒப்பிடும்போது இந்த புதிய ஏர்டெல் திட்டமானது சற்று குறைவான அளவிலேயே நன்மைகளை வழங்குகிறது. ஜியோவின் ரூ.399/- திட்டமானது ஜியோம்யூசிக், ஜியோடிவி, ஜியோசினிமாமற்றும் பல பயன்பாடுகளை உள்ளடிக்கிய பிரீமியம் சந்தாவை வழங்குகிறது.

இந்த திட்டத்தில் உள்ள பிராதன குறை.!
இந்த திட்டம் 4ஜி ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு மட்டுமே என்ற வரம்புகளை மீறினாலும் கூட அனைத்து ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கும் செல்லுபடியாகாது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திட்டம் உங்களுக்கு கிடைக்குமா என்பது சார்ந்த விவரங்களை அறிய உங்களின் மைஏர்டெல் பயன்பாட்டை அணுகவும்.


Click it and Unblock the Notifications