பட்ஜெட் விலையில் 3 OTT நன்மைகளை வழங்கும் ஏர்டெல்லின் பிரபலமான ப்ரீபெய்ட் திட்டம்.!
ஏர்டெல் நிறுவனம் தொடர்ந்து அசத்தலான திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. அதுவும் ஜியோ நிறுவனத்தை விட ப்ரீபெய்ட் திட்டங்களில் சில கூடுதல் நன்மைகளை வழங்குகிறது. எனவே தான் ஏர்டெல் நிறுவனம் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு திட்டங்களுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் ஏர்டெல் நிறுவனம் தற்போது இந்தியாவில் பல்வேறு நகரங்களில் 5ஜி சேவையை வழங்கிவிட்டது. கூடிய விரைவில் இந்நிறுவனம் இந்தியா முழுவதும் 5ஜி சேவையைக் கொண்டுவரும். சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது 3 ஓடிடி நன்மைகளை பட்ஜெட் விலையில் வழங்கும் ஏர்டெல் நிறுவனத்தின் பிரபலமான ப்ரீபெய்ட் திட்டத்தைப் பார்ப்போம்.

ஏர்டெல் ரூ.999 ப்ரீபெய்ட் திட்டம்-3 ஓடிடி நன்மைகள்
ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.999 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது 3 மாத டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சந்தாவை வழங்குகிறது. பின்பு அமேசான் பிரைம் மெம்பர்ஷிப் 84 நாட்களுக்கு வழங்குகிறது இந்த திட்டம். இதுதவிர எக்ஸ்ஸ்ட்ரீம் ஆப் அணுகல் வழங்குகிறது இந்த ஏர்டெல் ரூ.999 ப்ரீபெய்ட் திட்டம். மொத்தமாக 3 ஓடிடி நன்மைகளை வழங்குகிறது இந்த அசத்தலான ப்ரீபெய்ட் திட்டம்.
ஏர்டெல் ரூ.999 ப்ரீபெய்ட் திட்டத்தின் முக்கிய நன்மைகள்
அதேபோல் ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.999 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 2.5ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். குறிப்பாக வரம்பற்ற அழைப்பு நன்மைகள் தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட நன்மைகளும் இந்த திட்டத்தில் உள்ளது. இதுதவிர இலவச ஹெலோட்டூன்கள் மற்றும் ஃபாஸ்டாக் பரிவர்த்தனைகளில் ரூ. 100 கேஷ்பேக் உள்ளிட்ட பல நன்மைகளை வழங்குகிறது இந்த ஏர்டெல் திட்டம். மேலும் இந்நிறுவனம் கம்மி விலையில் ப்ரீபெய்ட் திட்டங்களைப் பார்ப்போம்.

ஏர்டெல் ரூ.319 திட்டம்
ஏர்டெல் ரூ.319 ப்ரீபெய்ட் திட்டம் தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ், Wynk மியூசிக், இலவச Hellotunes, FASTag-ல் ரூ.100 கேஷ்பேக், அப்பல்லோ 24|7 சர்க்கிள் உள்ளிட்ட பல நன்மைகள் இந்த திட்டத்தில் கிடைக்கிறது. பின்பு இந்த ஏர்டெல் ரூ.319 திட்டத்தின் வேலிடிட்டி ஒரு மாதம் ஆகும்.
ஏர்டெல் ரூ.359 திட்டம்
ஏர்டெல் ரூ.359 ப்ரீபெய்ட் திட்டம் ஏர்டெல் ரூ.359 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ், Xstream mobile app அணுகல், இலவச Hellotunes, FASTag-ல் ரூ.100 கேஷ்பேக், அப்பல்லோ 24|7 சர்க்கிள் உள்ளிட்ட பல நன்மைகள் கிடைக்கிறது. பின்பு இந்த திட்டத்தின் வேலிடிட்டி ஒரு மாதம் ஆகும்.

ஏர்டெல் ரூ.509 திட்டம்
ஏர்டெல் ரூ.509 ப்ரீபெய்ட் திட்டம் மொத்தமாக 60ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ், Wynk மியூசிக், இலவச Hellotunes, FASTag-ல் ரூ.100 கேஷ்பேக், அப்பல்லோ 24|7 சர்க்கிள் உள்ளிட்ட பல நன்மைகள் இந்த திட்டத்தில் கிடைக்கிறது. பின்பு இந்த ஏர்டெல் ரூ.509 திட்டத்தின் வேலிடிட்டி ஒரு மாதம் ஆகும்.
ஏர்டெல் ரூ.199 திட்டம்
ஏர்டெல்.199 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது மொத்தமாக 3ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டம் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், 300 எஸ்எம்எஸ் உள்ளிட்ட நன்மைகளை வழங்குகிறது. இதுதவிர Hellotunes மற்றும் Wynk Music இந்த திட்டத்தில் கிடைக்கும். அதேபோல் ஏர்டெல் ரூ.199 ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டி 30 நாட்கள் ஆகும்.


Click it and Unblock the Notifications








