ரூ.10/-க்கு 1ஜிபி டேட்டா ஏர்டெல் அதிரடி ஆபர், ஜியோவிற்கு பதிலடி.!

|

இது ஏர்டெல் நிறுவனத்தின் வெறும் ட்ரெயிலர் தான். இனிமே தான் மெயின் பிக்சர்லாம் இருக்கிறது - என்பதெல்லாம் ஒருபக்கம் இருக்க, முதலில் ஏர்டெல் நிறுவனத்தின் இந்த சதுரங்க ஆட்ட நகர்வை ரிலையன்ஸ் ஜியோ சமாளிக்குமா என்பதே பெரிய கேள்விக்குறியாக உள்ளது.!

ராகிங் செய்யப்பட்ட சுந்தர் பிச்சை - வெளிப்படுத்திய ஹாஸ்டல் நண்பர்.!ராகிங் செய்யப்பட்ட சுந்தர் பிச்சை - வெளிப்படுத்திய ஹாஸ்டல் நண்பர்.!

ஒருவேளை நீங்கள் ஒரு முன்னாள் ஏர்டெல் வாடிக்கையாளர் என்றால், ஜியோவின் அதிரடியான இலவச சேவைகளுக்கான ஏர்டெல் சேவையை கைவிட்டவர் என்றால், ஜியோவின் இலவச சேவைகள் மார்ச் மாதத்தோடு முடிவடையும் நிலையில் நீங்கள் மீண்டும் ஒருமுறை நீங்கள் ஏர்டெல் சேவையை கைவிட்டது சரிதானா என்று உங்களை யோசிக்க தூண்டும் ஒரு சலுகையை ஏர்டெல் அறிவித்துள்ளது.!

1ஜிபிக்கு ரூ.10/-

1ஜிபிக்கு ரூ.10/-

வரவிருக்கும் ரிலையன்ஸ் ஜியோவின் ப்ரைம் சேவையின் கீழ் நீங்கள் நாள் ஒன்றிற்கு 1 ஜிபி என்ற கணக்கில் மாதத்திற்கு 30 ஜிபி தரவை பெற ரூ.303/- செலுத்த வேண்டும். அதாவது 1ஜிபிக்கு ரூ.10/- என்ற விலை நிர்ணயத்தில் நீங்கள் ஜியோவின் வழக்கமான சேவைகளை அனுபவிக்க முடியும்.

இரண்டு புதிய திட்டங்கள்

இரண்டு புதிய திட்டங்கள்

ஜியோவிற்கு சரியான பதிலடி கொடுக்கும் நோக்கத்திலும், அதன் 100 மில்லியனுக்கும் மேலான பயனர்க்ளுக்கு அதிர்ச்சி அளிக்கும் வண்ணம் இரண்டு புதிய திட்டங்களை கொண்டு வந்துள்ளது.

1ஜிபி ரூ.10/-க்கு

1ஜிபி ரூ.10/-க்கு

அதன்கீழ் கிட்டத்தட்ட சரியாக ஜியோவின் ப்ரைம் சேவைகளுக்கு நிகரான அதாவது 1ஜிபி ரூ.10/-க்கு வழங்கும் வண்ணம் அதன் 3ஜி/4ஜி தரவு கட்டண விலையை குறைத்துள்ளது.

3ஜி/4ஜி டேட்டா

3ஜி/4ஜி டேட்டா

இதுவரை ஏர்டெல் அறிமுகம் செய்த திட்டங்களிலேயே இது தான் மிகவும் மலிவான திட்டமாகும். அதாவது நீங்கள் ரூ.145/- ரீசார்ஜ் செய்வதின் மூலம் 14ஜிபி அளவிலான 3ஜி/4ஜி டேட்டாவை பெறலாம்.

அதே விலை நிர்ணயத்தில்

அதே விலை நிர்ணயத்தில்

இது ஜியோவிற்கு சமமான ஒரு ஆபர் மட்டுமல்ல.ஒருவேளை நீங்கள் ஒவ்வொரு மாதமும் 30ஜிபி அளவிலான தரவை பயன்படுத்த மாட்டீர்கள் என்றால் 1ஜிபி ரூ.10/- என்ற அதே விலை நிர்ணயத்தில் நீங்கள் குறைவான டேட்டா பேக்கையும் தேர்வு செய்து கொள்ள முடியும்.

வரம்பற்ற அழைப்புகள்

வரம்பற்ற அழைப்புகள்

இந்த திட்டமானது டேட்டாவுடன் சேர்த்து வரம்பற்ற ஏர்டெல்- டூ-ஏர்டெல் அழைப்புகளையும் வழங்குகிறது, ஒருவேளை உங்களுக்கு அனைத்து நெட்வொர்க்குகள் உடனான வரம்பற்ற அழைப்புகள் நன்மை வேண்டுமென்றால் நீங்கள் ரூ.349/- பேக் தேர்வு செய்து கொள்ளலாம்.

ஒரு மாதம் செல்லுபடியாகும்

ஒரு மாதம் செல்லுபடியாகும்

இந்த ரூ.349 பேக் ஆனது ரூ145/- பேக் உடன் இணைந்து தொடங்கப்பட்ட மற்றொரு திட்டமாகும். ரூ.249/- திட்டத்தின் கீழ் அனைத்து நெட்வொர்க்குகள் உடனான வரம்பற்ற அழைப்புகள் மற்றும் ஒரு மாதம் செல்லுபடியாகும் 14 ஜிபி அளவிலான 4ஜி தரவை வழங்குகிறது.

சிறப்பான திட்டங்களாகும்

சிறப்பான திட்டங்களாகும்

இந்த இரண்டு புதிய திட்டங்களும் மிகவும் சிறப்பான திட்டங்களாகும் ஏனெனில் இதே சலுகைகளை முன்பு ஏர்டெல் ரூ.1000/-க்கும் அதிகமான விலை பெட்டிகளில் வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

டேட்டா பயன்பாடு வரம்பு

டேட்டா பயன்பாடு வரம்பு

ஆனால் இந்த தரவு பொதிகள் 0.5ஜிபி அல்லது 500எம்பி என்ற டேட்டா பயன்பாடு எல்லை கொண்டவைகள் என்பது குறிப்பிடத்தக்கது. ஜியோ சேவையின் டேட்டா பயன்பாடு வரம்பு நாள் ஒன்றிருக்கு 1ஜிபி என்ற போதிலும் ப்ரைம் சந்தாவை பெற ஆண்டுக்கு ரூ.100/- செலுத்த வேண்டும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

இரண்டு மடங்கு

இரண்டு மடங்கு

உடன் ஆர் ஜியோன் கவரேஜ் சிக்கல் இன்னும் சரியானதாய் தெரியவில்லை. இதற்கிடையில், இந்த மாதம் டிராய் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, சரியாக ஜனவரி மாதம் ஜியோவின் 4ஜி இணைய வேகம் சரிவடைந்துள்ளதாகவும், மறுபக்கம் ஜியோவை விட ஏர்டெல் இரண்டு மடங்கு அதிக வேகத்தை பதிவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கிறது.

"கிட்டத்தட்ட" ஒன்றுதான்

இந்த நொடி முதல் ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகிய இரண்டு சேவைகளும் "கிட்டத்தட்ட" ஒன்றுதான். இனி எந்த சேவையை அணுக விரும்புகிறீர்கள் என்பது உங்களது சொந்த ,முடிவை பொறுத்தது.

மேலும் படிக்க

மேலும் படிக்க

அதுக்கு இலவசமாகவே தந்துடலாமே-மிரண்டுபோன 'ஏர்டெல்' சுனில் மிட்டல்.!

Best Mobiles in India

Read more about:
English summary
Airtel's new plan gives 14GB 4G data at Rs 145, matches Jio Prime's data rates. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X