Home
News

ஏர்டெல் அதிரடி : 4ஜி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் உடன் ரூ.7,777/-க்கு ஐபோன் 7.!

ஏர்டெல் நிறுவனம் இன்று அதன் ஆன்லைன் ஸ்டோரில் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 7 மற்றும் ஐபோன் 7 பிளஸ் கருவிகளை பட்டியலிட்டுள்ளது.

By Muthuraj

இந்திய வாடிக்கையாளர்களை ஈர்க்கும் முயற்சியில் பார்தி ஏர்டெல் நிறுவனம் தனது ஆன்லைன் ஸ்டோர் மூலம் சமீபத்திய சலுகை ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

ஏர்டெல் அதிரடி : 4ஜி டேட்டா உடன் உடன் ரூ.7,777/-க்கு ஐபோன் 7.!

இந்த சலுகையில் கீழ் பிரீமியம் ஸ்மார்ட்போன்களை மிகவும் மலிவான விலைக்கு வாங்க முடியும் மற்றும் உடனடி கடன் சரிபார்ப்பு மற்றும் நிதியளித்தல் ஆகியவற்றை அதன் சேவையின் கீழ் உள்ள மாதாந்திர திட்டங்களுடன் தொகுத்து வழங்குகிறது.

ஐபோன் 7 மற்றும் ஐபோன் 7 பிளஸ்.!

ஐபோன் 7 மற்றும் ஐபோன் 7 பிளஸ்.!

ஜியோவுடன் கடுமையான போட்டியை நிகழ்த்திக்கொண்டிருக்கும் ஏர்டெல் நிறுவனம் இன்று அதன் ஆன்லைன் ஸ்டோரில் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 7 மற்றும் ஐபோன் 7 பிளஸ் கருவிகளை பட்டியலிட்டுள்ளது.

ரூ.7,777/- என்ற டவுன்பேமண்ட்.!

ரூ.7,777/- என்ற டவுன்பேமண்ட்.!

அதன்கீழ், 32 ஜிபி அளவிலான சேமிப்புத்திறன் கொண்ட ஐபோன் 7 சாதனத்தை ரூ.7,777/- என்ற டவுன்பேமண்ட் செலுத்தி வாங்கிக்கொள்ளலாம் மற்றும் ரூ.2,499/- என்ற மாத தவணையின் கீழ் 24 மாதங்களில் ஐபோனை முழுமையாக உங்களுக்கு சொந்தமாக்கி கொள்ளலாம் என்றும் ஏர்டெல் அறிவித்துள்ளது.

30 ஜிபி தரவு, வரம்பற்ற அழைப்பு.!

30 ஜிபி தரவு, வரம்பற்ற அழைப்பு.!

இந்த மாதாத்திர தவணை கட்டணத்தில், 30 ஜிபி தரவு, வரம்பற்ற அழைப்பு (உள்ளூர், எஸ்டிடி, தேசிய ரோமிங்) மற்றும் கருவி மீதான 'பிஸிக்கல் டேமேஜ்' மற்றும் சைபர் தாக்குதல் பாதுகாப்பை வழங்கும் ஏர்டெல் செக்யூர் தொகுப்பு ஆகியவைகளும் அடங்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நெக்ஸ்ட் ப்ராஜக்ட்.!

நெக்ஸ்ட் ப்ராஜக்ட்.!

ரூ.2000/- கோடி செலவில் நிகழும் ஏர்டெல் நிறுவனத்தின் "நெக்ஸ்ட் ப்ராஜக்ட்" திட்டத்தின் ஒரு பகுதி தான் இந்த ஆன்லைன் ஸ்டோர் என்பதும், இதன் மூலம் அடுத்த 3 ஆண்டுகளில் ஏர்டெல் நிறுவனம் அதன் வாடிக்கையாளர் அனுபவத்தை எளிமையாகவும், செயல்திறன் மிக்கதாகவும் மாற்றுவதற்கு பல அற்புதமான டிஜிட்டல் கண்டுபிடிப்புகள் தொடங்கவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆன்லைன் ஸ்டோர் சேவைகள்.!

ஆன்லைன் ஸ்டோர் சேவைகள்.!

தற்போது இந்தியாவில் மொத்தம் 21 நகரங்களில் ஏர்டெல் நிறுவனத்தின் ஆன்லைன் ஸ்டோர் சேவைகள் கிடைக்கின்றன. மேலும் ஏர்டெல் அதன் ஆன்லைன் ஸ்டோர் டிஜிட்டல் அனுபவத்தை விரிவுபடுத்த ஆப்பிள் இன்க், ஹெச்டிஎப்சி வங்கி, க்ளிக்ஸ் கேப்பிடல், செய்ன்ஸ் டெக்னாலஜிஸ், பிரைட்ஸ்டார் டெலிகம்யூனிகேஷன்ஸ் மற்றும் வல்கன் எக்ஸ்பிரஸ் உடன் கூட்டணியும் கொண்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Airtel's Latest Offer: Get iPhone 7 At Rs. 7,777. Details Here. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X