ரூ.5/- முதல் ரூ.399/- வரை புதிய ஆபர்கள் - "தரலோக்கலுக்கு" இறங்கியது ஏர்டெல்.!

ஜியோவின் ஆக்கிரோஷமான திட்டங்கள், மற்ற பங்குதாரர்கள் தங்கள் சந்தைப்பங்கைப் பாதுகாக்க புதிய திட்டங்களை வழங்கி கொண்டே இருக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளபப்ட்டுள்ளன.

|

கடந்த ஜூலை மாதத்தில், ரிலையன்ஸ் ஜியோ அதன் இரண்டு புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தியது - ரூ.399/- மற்றும் ரூ.349/- திட்டம்.

ரூ.349/- திட்டத்தின் கீழ், ஜியோ அதன் வாடிக்கையாளர்களுக்கு வரம்பற்ற உள்ளூர் மற்றும் எஸ்.டி.டி அழைப்புகளுடன், நாள் ஒன்றுக்கு 1 ஜிபி அளவிலான தரவை 56 நாட்களுக்கு வழங்குகிறது. மறுகையில் உள்ள ரூ.399/- திட்டத்தின் கீழ், வரம்பற்ற உள்ளூர் மற்றும் எல்.டி.டி. அழைப்புகளுடன் சேர்ந்து நாள் ஒன்றுக்கு 1 ஜிபி அளவிலான 4ஜி தரவை 84 நாட்களுக்கு வழங்குகிறது.

ரூ.5 முதல் ரூ.399 வரை புதிய ஆபர்கள்;

பதிலடிக்கு வெளியிடும் எந்தவொரு சலுகைகளையும் சற்றும் கண்டுகொள்ளாத ரிலையன்ஸ் ஜியோவின் ஆக்கிரோஷமான திட்டங்கள், மற்ற பங்குதாரர்கள் தங்கள் சந்தைப்பங்கைப் பாதுகாக்க புதிய திட்டங்களை வழங்கி கொண்டே இருக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளபப்ட்டுள்ளன.

ரூ.399/- மதிப்புள்ள புதிய ரீஜார்ஜ் பேக்

ரூ.399/- மதிப்புள்ள புதிய ரீஜார்ஜ் பேக்

இந்நிலைப்பாட்டில், இந்தியாவின் மிகப்பெரிய தொலைத் தொடர்பு நிறுவனமான ஏர்டெல் அதன் ரூ.399/- மதிப்புள்ள புதிய ரீஜார்ஜ் பேக் ஒன்றை ஜியோவிற்கு எதிராக களமிறங்கியுள்ளது.

ரூ.399/- நன்மைகள்

ரூ.399/- நன்மைகள்

ஏர்டெல் ப்ரீபெய்ட் சந்தாதாரர்களுக்கான இந்த புதிய திட்டத்தின் நன்மைகளை பொறுத்தமட்டில் - வரம்பற்ற உள்ளூர் மற்றும் எஸ்டிடி அழைப்புகளை வழங்குகிறது, உடன் 4ஜி வேகத்திலான 84 நாட்கள் செல்லுபடியாகும் நாள் ஒன்றுக்கு 1 ஜிபி என்ற டேட்டாவும் வழங்குகிறது.

ரூ.149/- ரீசார்ஜ்

ரூ.149/- ரீசார்ஜ்

ஜியோவின் ரூ.399/- ரீசார்ஜ் பேக்கை மட்டுமின்றி இதர ஜியோவின் குறைந்த விலை கட்டண திட்டங்களை எதிர்க்கும் வண்ணம் ஏர்டெல் மேலும் வேறு சில திட்டங்களையும் அறிமுகப்படுத்தியுள்ளது. ஏர்டெல் நிறுவனத்தின் புதிய ரூ.149/- திட்டமானது ஏர்டெல் டூ ஏர்டெல் அழைப்புகள், 4ஜி வேகத்திலான 28 நாட்கள் செல்லுபடியாகும் 2ஜிபி தரவு ஆகிய நன்மைகளை வழங்குகிறது.

ரூ.8/-  ரீசார்ஜ்

ரூ.8/- ரீசார்ஜ்

இதேபோல ஏர்டெல் நிறுவனம் ரூ.5 முதல் ரூ.399/- அதன் பல புதிய திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. ரூ.8/- மதிப்புள்ள ரீசார்ஜ் பேக் ஆனது 56 நாட்களுக்கு ஏர்டெல் உள்ளூர் + எஸ்.டி.டி அழைப்புகளை நிமிடத்திற்கு 30 பைசா என்றவொரு விகிதத்தில் மேற்கொள்ள உதவும்.

ரூ.40/- மற்றும் ரூ.60/- ரீசார்ஜ்

ரூ.40/- மற்றும் ரூ.60/- ரீசார்ஜ்

ரூ.40/- மதிப்புள்ள ஏர்டெல் திட்டமானது, ரூ.35/-க்கான வரம்பற்ற பேச்சு நேரத்தை வழங்கும். மறுபக்கம் ரூ.60/- திட்டமானது ரூ.58/-க்கான வரம்பற்ற பேச்சு நேரத்தை வழங்கும்.

ரூ.5/- ரீசார்ஜ்

ரூ.5/- ரீசார்ஜ்

இருப்பதுலேயே மிகவும் மலிவான திட்டமான ரூ.5/- மதிப்புள்ள ரீசார்ஜ் பேக்கின் கீழ் 7 நாட்கள் செல்லுபடியாகும் 4ஜிபி அளவிலான 3ஜி/4ஜி தரவு கிடைக்கும். இந்த சலுகையானது 4ஜி சிம் மேம்படுத்துதலுக்குப் பிறகு ஒரே முறை மட்டுமே கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ரூ.199/- ரீசார்ஜ்

ரூ.199/- ரீசார்ஜ்

ரூ.199/- மதிப்புள்ள ரீசார்ஜ் பேக்கின் கீழ் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும் வரம்பற்ற உள்ளூர் மொபைல் அழைப்புகள் மற்றும் 1ஜிபி அளவிலான 2ஜி / 3ஜி / 4ஜி தரவு நன்மைகள் கிடைக்கும்.

ரூ.349/- ரீசார்ஜ்

ரூ.349/- ரீசார்ஜ்

ரூ.349/- மதிப்புள்ள ரீசார்ஜ் பேக்கின் கீழ் 28 நாட்களுக்கு செல்லுப்படியாகும் நாள் ஒன்றிக்கு 1ஜிபி அளவிலான தரவுடன் வரம்பற்ற உள்ளூர் மற்றும் எல்.டி.டி. அழைப்புகளை அனைத்து கைபேசிகளுக்கும் வழங்குகிறது. இந்த ரூ.349/- திட்டத்தில் 10% கேஷ் பேக் ஆபர் பெற ஏர்டெல் பேமெண்ட்ஸ் பேங்க் அக்கவுண்ட் ஒன்றை துவங்குவதின் மூலம் பெறலாம்.

Best Mobiles in India

English summary
Airtel's Latest Offer To Counter Jio: Unlimited Calls, 84GB Data At Rs. 399. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X