Jioவை தூக்கி சாப்பிடும் Airtel: தனித்துவமான 2 ரீசார்ஜ் திட்டங்கள்.. இதுதான் பெஸ்ட்!

|

பாரதி ஏர்டெல் இன் இந்த இரண்டு ப்ரீபெய்ட் திட்டங்களுடன் ஜியோ நிறுவனத்தால் கூட போட்டியிட முடியாது. அதிக வாடிக்கையாளர்களை கவரவும், தங்களது வாடிக்கையாளர்களை தக்க வைக்கவும் தொலைத் தொடங்பு நிறுவனங்கள் போட்டிப் போட்டுக் கொண்டு இருக்கின்றன. இதன் ஒரு பகுதியாக ஏர்டெல் எடுத்த நடவடிக்கை தான் இது.

5ஜி சேவை விரைவில் அறிமுகம்..

5ஜி சேவை விரைவில் அறிமுகம்..

இந்தியாவில் 5ஜி சேவை விரைவில் அறிமுகமாகும் என்பது முடிவு செய்யப்பட்டு விட்டது. வழக்கமான ஓட்டத்துக்கு நடுவில் ஒரு புதுமை கிடைக்கிறது என்ற போது அதை மையமாக வைத்து முன்னேற நினைப்பது வழக்கம். அதன்படி ஏர்டெல் நிறுவனம் இந்த வாய்ப்பை பயன்படுத்தத் தொடங்கி இருக்கிறது.

இந்தியாவை பொறுத்தவரை அதிக வாடிக்கையாளர்களுடன் முதல் தொலைத் தொடர்பு நிறுவனமாக இருப்பது ஜியோ தான். இரண்டாவது இடத்தில் ஏர்டெல் இருக்கிறது. முன்னேற்றத்துக்கான நடவடிக்கையை ஏர்டெல் எடுக்கத் தொடங்கி உள்ளது.

இரண்டு ரீசார்ஜ் திட்டங்கள்..

இரண்டு ரீசார்ஜ் திட்டங்கள்..

இந்தியாவின் இரண்டாவது பெரிய தொலைத் தொடர்பு நிறுவனமாக இருக்கும் பாரதி ஏர்லெட் ஆனது ஜியோ மற்றும் வோடபோன் ஐடியா (Vi) நிறுவனங்களால் போட்டியிட முடியாத இரண்டு ரீசார்ஜ் திட்டங்களை கொண்டிருக்கிறது.

டேட்டா, வாய்ஸ் காலிங், எஸ்எம்எஸ்..

டேட்டா, வாய்ஸ் காலிங், எஸ்எம்எஸ்..

தனித்துவமான பல ரீசார்ஜ் திட்டங்களை தொலைத் தொடர்பு நிறுவனங்கள் அறிமுகம் செய்து வருகின்றன. அதன்படி ஏர்டெல் இன் இந்த இரண்டு ரீசார்ஜ் திட்டங்கள் முற்றிலும் தனித்துவமாக இருக்கிறது.

குறிப்பிடப்பட்டுள்ள இரண்டு ரீசார்ஜ் திட்டங்களும் டேட்டா, வாய்ஸ் காலிங், எஸ்எம்எஸ் மற்றும் ஓடிடி என பல நன்மைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது.

பாரதி ஏர்டெல் இன் தனித்துவமான இரண்டு ரீசார்ஜ் திட்டங்களின் விவரங்களை பார்க்கலாம்.

ஏர்டெல் ரூ.699 திட்டம்

ஏர்டெல் ரூ.699 திட்டம்

பாரதி ஏர்டெல் ரூ.699 திட்டத்தை தினசரி 3ஜிபி டேட்டா, வரம்பற்ற குரல் அழைப்பு மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் நன்மைகளை வழங்குகிறது. இந்த திட்டமானது மொத்தம் 56 நாட்களுக்கு செல்லுபடியாகும்.

இந்த திட்டத்தின் கீழ் இலவசமாக அமேசான் பிரைம் மெம்பர்ஷிப் வழங்கப்படுகிறது. கூடுதலாக இந்த திட்டத்தில் எக்ஸ்ட்ரீம் மொபைல் பேக் நன்மையும் 56 நாட்களுக்கு கிடைக்கும்.

Xstream மொபைல் பேக்..

Xstream மொபைல் பேக் மூலமாக பயனர்கள் LionsgatePlay, SonyLIV, ErosNow, Hoichoi மற்றும் ManoramaMax போன்ற சேனல்களின் அணுகலை பெறலாம்.

அதேபோல் ஏர்டெல் தேங்க்ஸ் பயன்பாட்டின் கீழ் மூன்று மாதங்களுக்கு Apollo 24|7 சந்தா, FASTag இல் ரூ.100 கேஷ்பேக், இலவச ஹெலோட்யூன்கள் மற்றும் Wynk Music அணுகலும் இலவசமாக கிடைக்கிறது.

இரண்டாவது ரீசார்ஜ் திட்டம்..

இரண்டாவது ரீசார்ஜ் திட்டம்..

அந்த இரண்டாவது திட்டம் ஏர்டெல் இன் ரூ.999 ரீசார்ஜ் திட்டமாகும். ஏர்டெல் நிறுவனம் ரூ.999 ரீசார்ஜ் திட்டத்தில் 84 வேலிடிட்டியை வழங்குகிறது.

இந்த திட்டமானது தினசரி 2.5 ஜிபி டேட்டா, வரம்பற்ற குரல் அழைப்பு மற்றும் 100 எஸ்எம்எஸ் நன்மைகளை வழங்குகிறது.

இந்த திட்டமானது 84 நாட்களுக்கு இலவச அமேசான் பிரைம் மெம்பர்ஷிப் உடன் வருகிறது.

எக்ஸ்ட்ரீம் மொபைல் பேக் சந்தா..

இந்த திட்டத்திலும் எக்ஸ்ட்ரீம் மொபைல் பேக் வழங்கப்படுகிறது. 84 நாட்களுக்கும் இந்த சேவை கிடைக்கும். ஏர்டெல் பேமெண்ட்ஸ் வங்கியின் ரிவார்ட்ஸ்மினி சந்தாவும் இந்த திட்டத்தில் கூடுதல் கட்டணமின்றி இணைக்கப்பட்டிருக்கிறது.

அதேபோல் ஏர்டெல் தேங்க்ஸ் பயன்பாட்டின் கீழ் மூன்று மாதங்களுக்கு Apollo 24|7 சந்தா, FASTag இல் ரூ.100 கேஷ்பேக், இலவச ஹெலோட்யூன்கள் மற்றும் Wynk Music அணுகலும் இலவசமாக கிடைக்கிறது. பிற எந்த நிறுவனங்களும் வழங்காத அமேசான் பிரைம் சந்தா இதில் வழங்கப்படுகிறது.

தனித்துவமான சலுகைகள்..

தனித்துவமான சலுகைகள்..

இந்த இரண்டு திட்டங்களிலும் தனித்துவமான அமேசான் பிரைம் உள்ளிட்ட பல்வேறு விலைமதிப்பற்ற சந்தா நன்மைகள் வழங்கப்படுகிறது.

அதேபோல் அதிகளவிலான டேட்டாவும் இந்த திட்டங்களில் கிடைக்கிறது. இந்த விலையில் இத்தனை சலுகைகளுடன் ஜியோ, விஐ நிறுவனங்களில் எந்தவித திட்டங்களும் இல்லை என்பது கவனிக்கத்தக்க ஒன்று.

Best Mobiles in India

English summary
Airtel's best recharge plans that even Jio can't compete with

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X