Home
News

Airtel பயனர்களே: இந்த 4 ப்ரீபெய்ட் திட்டங்களை மட்டும் மிஸ் பண்ணாதீங்க: அப்படி என்ன இருக்கு?

ஜியோ, வோடபோன் ஐடியா நிறுவனங்களுக்கு போட்டி கொடுக்கும் வகையில் பல அசத்தலான திட்டங்கள் மற்றும் சலுகைகளை அறிவித்து கொண்டே இருக்கிறது ஏர்டெல் நிறுவனம். குறிப்பாக ஜியோ நிறுவனத்தை விட சில ப்ரீபெய்ட் திட்டங்களில் கூடுதல் நன்மைகளை வழங்குகிறது ஏர்டெல் நிறுவனம்.

தற்போது ஜியோ நிறுவனத்தை போலவே பட்ஜெட் விலையில் ஓடிடி நன்மைகளை வழங்கும் ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளது ஏர்டெல் நிறுவனம். அதாவது ஏர்டெல் நிறுவனம் ரூ.399, ரூ. 499, ரூ.839, ரூ.3359 ஆகிய ப்ரீபெய்ட் திட்டங்களில் ஓடிடி நன்மைகளை வழங்குகிறது. அதுவும் இந்த நான்கு திட்டங்களில் மூன்று திட்டங்கள் 3 மாதங்களுக்கான Disney+Hotstarசந்தா வழங்குகிறது. பின்பு ரூ.3359 ப்ரீபெய்ட் திட்டம் மட்டும் ஒரு வருடத்திற்கு Disney+Hotstar சந்தா வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Airtel பயனர்களே: இந்த 4 ப்ரீபெய்ட் திட்டங்களை மட்டும் மிஸ் பண்ணாதீங்க

ஏர்டெல் ரூ.399 ப்ரீபெய்ட் திட்டம் தினசரி 2.5ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட நன்மைகளும் இந்த திட்டத்தில் கிடைக்கிறது. இதுதவிர ஏர்டெல் ரூ.399 ப்ரீபெய்ட் திட்டத்தில் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைல் சந்தாவின் மூன்று மாதங்களுக்கு அணுகல், Xstream App, ஃபாஸ்டாக் பரிவர்த்தனைகளில் ரூ. 100 கேஷ்பேக் , அப்பல்லோ 24|7 சர்க்கிள் உள்ளிட்ட பல நன்மைகள் கிடைக்கிறது. பின்பு இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும்.

ஏர்டெல் ரூ.499 ப்ரீபெய்ட் திட்டம் தினசரி 3ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். மேலும் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் வழங்குகிறது இந்த அசத்தலான திட்டம். குறிப்பாக டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைல் சந்தாவின் மூன்று மாதங்களுக்கு அணுகல், Xstream App, அப்பல்லோ 24|7 சர்க்கிள், ஃபாஸ்டாக் பரிவர்த்தனைகளில் ரூ. 100 கேஷ்பேக், விங்க் மியூசிக் பிரீமியம், இலவச ஹெலோட்யூன்ஸ் போன்ற சலுகைகள் இந்த திட்டத்தில் உள்ளன.

Airtel பயனர்களே: இந்த 4 ப்ரீபெய்ட் திட்டங்களை மட்டும் மிஸ் பண்ணாதீங்க

ஏர்டெல் ரூ.839 ப்ரீபெய்ட் திட்டம் தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். மேலும் வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட நன்மைகள் இந்த புதிய திட்டத்தில் கிடைக்கிறது. பின்பு இந்த ரூ.839 ப்ரீபெய்ட் திட்டத்தில் மூன்று மாதங்களுக்கு டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைல் சந்தாவைப் பெறமுடியும். இதுதவிர Airtel Thanks நன்மைகளையும் வழங்குகிறது இந்த ரூ.839 ப்ரீபெய்ட் திட்டம்.

ஏர்டெல் ரூ.3359 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 2.5ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ், உள்ளிட்ட பல நன்மைகள் இந்த திட்டத்தில் கிடைக்கிறது. அதேபோல் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஒரு வருட சந்தாவை வழங்குகிறது இந்த அசத்தலான திட்டம். குறிப்பாக ஏர்டெல் ரூ.3359 ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டி 365 நாட்கள் ஆகும். இதுதவிர Airtel Thanks நன்மைகளையும் வழங்குகிறது இந்த ரூ.3359 ப்ரீபெய்ட் திட்டம்.

Airtel பயனர்களே: இந்த 4 ப்ரீபெய்ட் திட்டங்களை மட்டும் மிஸ் பண்ணாதீங்க

அதேபோல் ஏர்டெல் நிறுவனம் தற்போது பல்வேறு நகரங்களில் 5ஜி சேவையை அறிமுகம் செய்துவிட்டது. கூடிய விரைவில் இந்தியா முழுவதும் இந்நிறுவனம் 5ஜி சேவையை வழங்கும். குறிப்பாக இந்நிறுவனத்தின் 5ஜி சேவை மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது என்றே கூறலாம். பின்பு ஏர்டெல் நிறுவனம் விரைவில் பல புதிய திட்டங்களை அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Airtel's 4 prepaid plans that offer Disney+ Hotstar subscription at budget prices : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X