ஒரே Airtel ரீசார்ஜ்.. இனி 3 சிம் கார்டுகளுக்கு வேலிடிட்டி.. அன்லிமிடெட் வாய்ஸ்.. 150ஜிபி டேட்டா.. ஓடிடி சந்தா!
ஏர்டெல் (Airtel) நிறுவனத்தின் போஸ்ட்பெய்ட் கஸ்டமர்கள், ஒரேவொரு ரீசார்ஜ் மூலம் 3 சிம் கார்டுகளுக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால்களை பெற்று கொள்ள முடியும். இதுபோக பிரைமரி சிம் கார்டுக்கு 90 ஜிபி டேட்டா, 6 மாதங்களுக்கு அமேசான் பிரைம் வீடியோ, 1 வருடத்துக்கு ஜியோஹாட்ஸ்டார், ஒரு வருடத்துக்கான பெர்ப்லெக்ஸிடி ஏஐ ப்ரோ போன்ற நம்ப முடியாத சலுகைகள் கிடைக்கின்றன. இந்த போஸ்ட்பெய்ட் திட்டத்தின் முழு விவரங்களை இப்போது பார்க்கலாம்.
ஏர்டெல் ரூ 999 போஸ்ட்பெய்ட் திட்ட விவரங்கள் (Airtel Rs 999 Postpaid Plan Details): இந்த திட்டத்தை பெறும் கஸ்டமர்களுக்கு 1 பிரைமரி சிம் கார்டு மற்றும் 2 பேமிலி சிம் கார்டுகளுக்கு சலுகைகள் கிடைக்கும். இதில் கூடுதலாக ஆட் செய்யப்படும் பேமிலி சிம் கார்டுக்கு எந்த கட்டணமும் கிடையாது. இலசமாக ஆட் செய்து கொள்ளலாம். ஆனால், அந்த சிம் கார்டுகளுக்கு டேட்டா குறைவாக கிடைக்கும்.

அதாவது, பிரைமரி சிம் கார்டுக்கு 90 ஜிபி டேட்டா கொடுக்கப்படுகிறது என்றால், பேமிலி சிம் கார்டுகளுக்கு தலா 30 ஜிபி டேட்டா மட்டுமே கொடுக்கப்படும். ஆகவே, மொத்தமாக 150 ஜிபி டேட்டாவை இந்த திட்டத்தில் பெற்று கொள்ளலாம். ஆனால். அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமி்ங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை மூன்று சிம் கார்டுகளுக்கும் கிடைக்கும்.
100 எம்எஸ்எஸ் சலுகையை இந்த ஏர்டெல் போஸ்ட்பெய்ட் திட்டம் கொடுக்கிறது. இந்த டேட்டா, வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகள் போல ஏகப்பட்ட கூடுதல் சலுகைகள் இதில் கிடைக்கின்றன. ஓடிடி மட்டுமல்லாமல், கூகுள் ஒன், ஆப்பிள் மியூசிக், ப்ளூ ரிப்பன் பேக் மற்றும் பெர்ப்லெக்ஸிடி ஏஐ ப்ரோ போன்ற பல்வேறு சலுகைகள் வாரி வழங்கப்பட்டு இருக்கின்றன.
ஓடிடி சலுகைகளை பார்க்கையில், அமேசான் பிரைம் (Amazon Prime) சந்தா 6 மாதங்களுக்கு கிடைக்கிறது. ஆப்பிள் டிவிபிளஸ் (Apple TV+) சந்தா மற்றும் ஆப்பிள் மியூசிக் (Apple Music) சந்தா கொடுக்கப்படுகிறது. மேலும், ஜியோஹாட்ஸ்டார் மொபைல் சந்தா (JioHotstar Mobile Subscription) ஒரு வருடத்துக்கு கொடுக்கப்படுகிறது. ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பிளே பிரீமியம் (Airtel Xstream Play Premium) கிடைக்கிறது.

இதன் மூலம் பிரீமியம் அல்லாத மற்றும் அதிக ஓடிடி பிரியர்கள் விரும்பும்டியான 10-க்கும் மேற்பட்ட ஓடிடி பண்டில் கிடைக்கிறது. இந்த ஓடிடி சலுகைகள் போக கூகுள் ஒன் (Google One) சலுகை கிடைக்கிறது. இதன் மூலம் 100 ஜிபிக்கான கிளவுட் ஸ்டோரேஜ் (Cloud Storage) சலுகையை பெற்று கொள்ளலாம். மேலும் ப்ளூ ரிப்பன் பேக் (Blue Ribbon Bag), ஃபிராடு டிடெக்சன் மற்றும் ஸ்பேம் அலெர்ட் சலுகை உள்ளது.
இறுதியாக பெர்ப்லெக்ஸிடி ஏஐ ப்ரோ (Perplexity Pro AI) சாட்பாடின் சந்தா 12 மாதங்களுக்கு கிடைக்கிறது. இது அண்மையில் சேர்க்கப்பட்ட சலுகையாகும். முற்றிலும் இலவசமா ஏர்டெல் கஸ்டமர்களுக்கு கிடைக்கிறது. இவ்வளவு சலுகைகளும் போக வழக்கமாக கிடைக்கும் ப்ரீ ஹலோ டியூன்ஸ் (Free Hello Tunes), அப்பல்லோ 24/7 சர்க்கிள் (Apollo 24|7 Circle) சந்தாவையும் இந்த திட்டம் கொடுக்கிறது.
இப்படி ஒரோவொரு திட்டத்தில் நம்ப முடியாத சலுகைகளை கொடுக்கிறது. இந்த ஏர்டெல் போஸ்ட்பெய்ட் திட்டம் எப்படி பார்த்தாலும், அதிக லாபம் கொடுப்பதாகவே இருக்கிறது. ஏனென்றால், மூன்று சிம் கார்டுகளுக்கு ஒரே நேரத்தில் சேவையை கொடுக்கிறது. அதேபோல பிரீமியம் ஓடிடிகளை 6 மாதங்களுக்கு கொடுக்கிறது. போஸ்பெய்ட் கஸ்டமர்களுக்கு இது நல்ல ஆப்ஷனாக இருக்கிறது.


Click it and Unblock the Notifications








