ஒரே Airtel ரீசார்ஜ்.. 3 சிம்களுக்கு அன்லிமிடெட் வாய்ஸ்.. 150 ஜிபி டேட்டா.. ஓடிடி சந்தா.. கூடுதல் கட்டணம் இல்ல!
ஏர்டெல் (Airtel) கஸ்டமர்களுக்கு ஒரே ரீசார்ஜ் மூலம் கூடுதல் கட்டணம் இல்லாமல் 3 சிம் கார்டுகளுக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் (Unlimited Voice Calls) சலுகை கிடைக்கிறது. இதுபோக லம்ப்-சம் டேட்டா, எஸ்எம்எஸ், ஓடிடி போன்ற எக்கச்சக்க சலுகைகள் வாரி வழங்கப்பட்டுள்ளன. இதில் பிரைமரி சிம் கார்டு மற்றும் 2 ப்ரீ சிம் கார்டுகள் கணக்கில் எடுத்து கொள்ளப்படும். அமேசான் பிரைம், ஜியோஹாட்ஸ்டார் போன்ற முன்னணி ஓடிடி ஆப்களும் இதில் கிடைக்கின்றன. இந்த போஸ்ட்பெய்ட் திட்டத்தின் விவரங்கள் இதோ.
ஏர்டெல் ரூ 999 போஸ்ட்பெய்ட் திட்ட விவரங்கள் (Airtel Rs 999 Postpaid Plan Details): இந்த போஸ்ட்பெய்ட் திட்டத்தில் டேட்டா, வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ் சலுகைகள் மட்டுமல்லாமல், ஓடிடி சந்தா, மியூசிக் சந்தா மற்றும் ஏர்டெல் கஸ்டமர்களுக்கு பிரத்யேகமாக கிடைக்கும் சலுகைகளும் வருகின்றன. இந்த திட்டத்தை பெறும் கஸ்டமர்கள் 2 சிம் கார்டுகளை ஆட்-ஆன் செய்து கொள்ளலாம்.

அதாவது, பிரைமரி சிம் கார்டு போக 2 சிம் கார்டுகளை இலவசமாக ஆட் செய்து கொள்ளலாம். அந்த சிம் கார்டுகளும் வாய்ஸ் கால்கள் சலுகை கொடுக்கப்படும். ஆகவே, மூன்று சிம் கார்டுகளுக்கும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை கிடைக்கிறது. ஆனால், டேட்டா சலுகை அப்படி கிடைக்காது.
பிரைமரி சிம் கார்டுக்கு 90 ஜிபி டேட்டாவும், 2 சிம் கார்டுகளுக்கு தலா 30 ஜிபி டேட்டாவும் கொடுக்கப்படுகிறது. அதேபோல ஏர்டெல் கஸ்டமர்கள் நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்களை செய்து கொள்ளலாம். இந்த சலுகைகளுக்கு அடுத்த ஏகப்பட்ட சலுகைகள் இருக்கின்றன. இவை பிரைமரி சிம் கார்டுக்கு மட்டுமே பொருந்தும். என்னென்ன சலுகைகள் இருக்கின்றன?
இந்த போஸ்ட்பெய்ட் திட்டத்தில் 6 மாதங்களுக்கான அமேசான் பிரைம் மொபைல் சந்தா (Amazon Prime Mobile Subscription) சந்தா கொடுக்கப்படுகிறது. 1 வருடத்துக்கான ஜியோஹாட்ஸ்டார் மொபைல் சந்தா (JioHotstar Mobile Subscription) கிடைக்கிறது. இதுபோக ஆப்பிள் டிவி பிளஸ் (Apple TV+) மற்றும் ஆப்பிள் மியூசிக் (Apple Music) சந்தாவானது கொடுக்கப்படுகிறது.
இந்த பிரீமியம் ஓடிடி சந்தா மட்டுமல்லாமல், ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பிளே பிரீமியம் சந்தா (Airtel Xstream Play Premium Subscription) கிடைக்கிறது. இந்த பிரீமியம் சந்தா மூலம் சன்நெக்ஸ்ட் (Sun NXT), சோனி லிவ் (Sony LIV), ஈராஸ்நவ் (ErosNow), லயன்ஸ்கேட்ஸ் பிளே (Lionsgate Play), ஷார்ட்ஸ் டிவி (Shorts TV), மனோரமா மேக்ஸ் (ManoramaMax), ஹோய்சோய் (Hoichoi) ஓடிடிகளை பெறலாம்.
மேலும், பேன்கோட் (FanCode), ஷீமாரூமீ (ShemarooMe), ஆஹா (Aha), ஸ்டேஜ் (Stage), ஹங்கமா (Hungama), கிளிக் (Klikk), டாலிவுட் பிளே (Dollywood Play), ஆல்ட் பாலாஜி (Alt Balaji), அல்ட்ரா (Ultra), சாவ்பால் (Chaupal), ராஜ் டிஜிட்டல் (Raj Digital), எபிக் ஆன் (EPICon), பிளேபிளிக்ஸ் (Playflix), டாகுபே (Docubay), கே டிராமா (K-Drama), கான்ச்சா லங்கா (Kanccha Lannka) ஆப்களும் கிடைக்கின்றன.
இதுவரையில் பார்த்த வாய்ஸ் கால்கள், டேட்டா, எஸ்எம்எஸ், ஓடிடி சலுகைகள் போக அப்பல்லோ 24/7 சர்க்கிள் (Apollo 24/7 Circle) மெம்பர்ஷிப், ப்ரீ ஹாலோடியூன்ஸ் (Free Hellotunes), விஐபி சர்வீஸ் (VIP Service) மற்றும் ப்ளூ ரிப்பன் பேக் (Blue Ribbon Bag) போன்ற ஏர்டெல் கஸ்டமர்களுக்கு மட்டுமே கிடைக்கும் பிரத்யேக சலுகைகளை இந்த போஸ்ட்பெய்ட் திட்டம் கொடுக்கிறது.


Click it and Unblock the Notifications