Home
News

Airtel SIM இருக்கா.. இனி செலவு ரூ.1000 ஆகும்.. ஆனால், 1 சிம் கார்டு இல்ல.. 3 சிம் கார்டுக்கு வேலிடிட்டி வருது!

ஒரே செலவுல 3 சிம் கார்டுகளுக்கு ரீசார்ஜ் செய்ய முடிந்தால் எப்படி இருக்கும்? அதிலும் வாய்ஸ் கால்கள், டேட்டா, ஓடிடி சலுகைகள் கிடைத்தால், ரீசார்ஜ் செய்ய சொல்லவா வேண்டும். அப்படியான சலுகைகளுடன் ஏர்டெல் நிறுவனம், ஒரு போஸ்ட்பெய்ட் (Postpaid) திட்டத்தை வைத்துள்ளது.

போஸ்ட்பெய்ட் கஸ்டமர்களுக்கு மட்டுமே இந்த திட்டம் கிடைக்கிறது. ரூ.999 விலை கொண்டுள்ள இந்த போஸ்ட்பெய்ட் திட்டத்தில் 1 பிரைமரி சிம் கார்டு மற்றும் 2 பேமிலி சிம் கார்டுகளுக்கு சலுகைகளை பெற்று கொள்ளலாம். வாய்ஸ் கால்கள் முதல் ஓடிடி சந்தா வரையில் கிடைக்கிறது.

Airtel SIM இருக்கா.. இனி செலவு ரூ.1000 ஆகும்.. ஆனால், 3 சிம் கார்டு!

ஏர்டெல் ரூ.999 திட்ட விவரங்கள் (Airtel Rs 999 Plan Details): 3 சிம் கார்டுகளுக்கும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) கிடைக்கும். இந்த போஸ்ட்பெய்ட் திட்டத்தில் கிடைக்கும் டேட்டாவுக்கு தினசரி லிமிட் கொடுக்கப்படவில்லை.

அன்லிமிடெட் 4ஜி டேட்டா (Unlimited 4G Data) மற்றும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஆகவே, போஸ்ட் டேட்டா தேவைப்படாது. அதேபோல 4ஜி ஸ்மார்ட்போன் வைத்திருந்தாலும், அன்லிமிடெட் டேட்டா கிடைக்கும். 5ஜி ஸ்மார்ட்போன் இருந்தாலும் அன்லிமிடெட் டேட்டா கிடைக்கும்.

ஆகவே, தினசரி லிமிட் இல்லாமல், அன்லிமிடெட் டேட்டாவை கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். குறிப்பாக ப்ரீபெய்ட் கஸ்டமர்களுக்கு கிடைக்காத ஃபாஸ்ட் லேன் டெக்னாலஜி (Fast Lane Technology) கொண்ட 5ஜி சிலைசிங் (5G Slicing) கிடைக்கிறது. ஆகவே, டேட்டா வேகம் பிரீமியமாக இருக்கும்.

நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்கள் வழக்கம் போலவே கொடுக்கப்பட்டு இருக்கின்றன. ஓடிடி மற்றும் மியூசிக் ஆப்களின் சந்தாவை இந்த போஸ்ட்பெய்ட் திட்டம் கொடுத்துள்ளது. அமேசான் பிரைம் வீடியோ (Amazon Prime Video) சந்தாவை பெற்று கொள்ளலாம். இந்த சந்தாவை 6 மாதங்களுக்கு பயன்படுத்தி கொள்ளலாம்.

ஆப்பிள் டிவி (Apple TV) சந்தா மட்டுமல்லாமல், ஆப்பிள் மியூசிக் (Apple Music) சந்தா கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஜியோஹாட்ஸ்டார் மொபைல் (JioHotstar Mobile) சந்தாவும் கொடுக்கப்பட்டு உள்ளது. இதை 1 வருடத்துக்கு பயன்படுத்தி கொள்ளலாம். இந்த ஓடிடிகள் போக பிரத்யேக ஓடிடி சந்தாவும் கொடுக்கப்படுகிறது.

அதாவது, ஏர்டெல் கஸ்டமர்களுக்கு மட்டுமே கிடைக்கும், ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பிளே பிரீமியம் (Airtel Xstream Play Premium) சந்தா கொடுக்கப்பட்டு உள்ளது. கூகுள் பிளே ஸ்டோரில் கிடைக்கும் இந்த ஒரே ஆப் வழியாக பல்வேறு ஓடிடி ஆப்களை அணுக முடியும். கூகுள் ஒன் (Google One) வழியாக 100 ஜிபிக்கு கிளவுட் ஸ்டோரேஜ் கிடைக்கும்.

ஆகவே, கிட்டத்தட்ட பிரீமியம் ஓடிடிகள் பேக் செய்யப்பட்டுள்ளது தெரிகிறது. இதற்கு ஏற்ப டேட்டாவும் அன்லிமிடெட் சலுகையில் கிடைக்கிறது. கூடுதல் சலுகையில் அடோப் எக்ஸ்பிரஸ் பிரீமியம் (Adobe Express Premium) சந்தா கிடைக்கிறது. 12 மாதங்களுக்கு கொடுக்கப்படுகிறது. ப்ரீ ஹெலோ டியூன்ஸ் (Free Hello Tunes) உள்ளது.

மேலும், ப்ளூ ரிப்பன் பேக் (Blue Ribbon Bag) கிடைக்கிறது. இந்த திட்டத்தின் விலை ரூ.999ஆக இருந்தாலும், ஜிஎஸ்டி கட்டணம் கூடுதலாக இருக்கும். ஆகவே, விலை கொஞ்சம் கூடுதலாக இருக்கலாம். ஒரே ரீசார்ஜ் வழியாக 3 சிம் கார்டுகளுக்கு சலுகை கிடைப்பதால், இது வரவேற்பு பெற்ற திட்டமாகவே இருக்கிறது.

Best Mobiles in India

English summary
Airtel Rs 999 Plan With GST Per Month For 3 SIM Cards 5G Slicing Check Postpaid Family Plan
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X