அறக்க பறக்கும் ரீசார்ஜ்.. மாதாந்திரம் ரூ.333 போதும்.. 84 நாட்கள் வேலிடிட்டி.. 20 ஓடிடி சந்தா.. 2.5ஜிபி டேட்டா!
ஏர்டெல்லில் இருக்கும் ஒட்டுமொத்த ஓடிடி பிரியர்களையும் தட்டித்தூக்கும்படி அமேசான் பிரைம் வீடியோ, சோனிலிவ் உள்ளிட்ட 20+ ஓடிடி ஆப்களின் சந்தா மட்டுமல்லாமல், 84 நாட்கள் வேலிடிட்டி, அன்லிமிடெட் வாய்ஸ் மற்றும் 2.5 ஜிபி டேட்டாவானது வெறும் ரூ.999 ப்ரீபெய்ட் திட்டத்தில் கிடைக்கிறது.
ஏர்டெல் ரூ 999 திட்ட விவரங்கள் (Airtel Rs 999 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தை பெறும் வாடிக்கையாளர்களுக்கு தினசரி டேட்டா, வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ் போன்ற பேசிக் சலுகைகள் மட்டுமல்லாமல், அன்லிமிடெட் 5ஜி டேட்டா, 20+ ஓடிடி ஆப்களின் சந்தா உள்ளிட்ட கூடுதல் சலுகைகளும் கொடுக்கப்படுகிறது.

ஆகவே, இந்த திட்டத்தில் நாளொன்றுக்கு 2.5 ஜிபி டேட்டா, 100 எஸ்எம்எஸ் சலுகைகள் கிடைக்கிறது. அதேபோல அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி & ரோமிங் வாய்ஸ் கால்கள் சலுகையும் பெற்று கொள்ளலாம். ஆகவே, மொத்தமாக 210 ஜிபி டேட்டாவை வாடிக்கையாளர்கள் பயன்படுத்தலாம். இதுபோக அன்லிமிடெட் 5ஜி டேட்டா சலுகையும் கிடைக்கிறது.
இந்த 5ஜி டேட்டாவுக்கு கூடுதல் கட்டணம் கிடையாது. ஆனால், ஏர்டெல் 5ஜி சேவை கிடைக்கும் பகுதிகளில் ஆஃபர் பெறும் வாடிக்கையாளர்களுக்கே இந்த சலுகை பொருந்தும். இந்த ப்ரீபெய்ட் திட்டத்தின் ஓடிடி சலுகைகளை பார்க்கையில், 84 நாட்களுக்கான அமேசான் பிரைம் வீடியோ (Amazon Prime Video) சந்தா கொடுக்கப்படுகிறது.
இதுபோக ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பிளே (Airtel Xstream Play) சந்தாவின் கீழ் சன் நெக்ஸ்ட் (Sun NXT), சோனிலிவ் (Sony LIV), லயன்ஸ்கேட்பிளே (Lionsgate Play), சவ்பால் (Chaupal), ஹோய்சோய் (Hoichoi), ஃபேன்கோட் (FanCode), மனோரமா மேக்ஸ் (ManoramaMax), ஷீமாரூமி (ShemarooMe), ஆல்ட் பாலாஜி (Alt Balaji), அல்ட்ரா (Ultra) உள்ளிட்ட ஆப்கள் வருகிறது.
இதில் ஈராஸ்நவ் (ErosNow), எபிக்ஆன் (EPICon), டாக்குபே (Docubay), நம்மபிளிக்ஸ் (Namma Flix), கிளிக் (Klikk) உள்ளிட்ட 20+ ஓடிடி ஆப்களையும் பயன்படுத்தி கொள்ளலாம். இவ்வளவு சலுகைகளும் போக அப்பல்லோ 24|7 சர்க்கிள் (Apollo 24|7 Circle) மெம்பர்ஷிப், வின்க் மியூசிக் (Wynk Music), ப்ரீ ஹெலோ டியூன்ஸ் (Free Hellotunes) சலுகை வருகிறது.
அதுமட்டுமல்லாமல், ரிவார்ட்ஸ்மினி சப்ஸ்கிரிப்ஷன் (RewardsMini Subscription) கிடைக்கிறது. இந்த திட்டத்துக்கு 84 நாட்களுக்கு வேலிடிட்டி பெற்று கொள்ளலாம். ஆகவே, 3 மாதங்களுக்கு 20+ ஓடிடி, 2.5 ஜிபி தினசரி டேட்டா சலுகை வேண்டுமானால், இந்த ப்ரீபெய்ட் திட்டத்தை ரீசார்ஜ் செய்து கொள்ளுங்கள். இதைவிட கம்மி விலையில் மற்றொரு திட்டம் இருக்கிறது.
ஏர்டெல் ரூ 699 திட்ட விவரங்கள் (Airtel Rs 699 Plan Details): முந்தைய ப்ரீபெய்ட் திட்டத்தை போலவே இதிலும் அதிகப்படியான ஓடிடி சலுகைகள் கிடைக்கிறது. இந்த திட்டத்தில் தினசரிக்கு 3 ஜிபி டேட்டா கொடுக்கப்படுகிறது. ஆகவே, அதிகப்படியான டேட்டா பிரியர்களுக்கு இந்த திட்டம் பக்காவான தேர்வாக இருக்கும்.
ஆனால், இந்த திட்டத்தில் 56 நாட்கள் மட்டுமே வேலிடிட்டி கிடைக்கிறது. ஆகவே, ஏர்டெல் வாடிக்கையாளர்கள் மொத்தமாக 168 ஜிபி டேட்டாவை பயன்படுத்தி கொள்ளலாம். இதுபோக முந்தைய திட்டத்தை போலவே 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா மற்றும் ஏர்டெல் 5ஜி சேவை ஏரியாக்களில் அன்லிமிடெட் 5ஜி டேட்டா சலுகை கொடுக்கப்படுகிறது.
அதேபோல தினசரிக்கு 100 எஸ்எம்எஸ்களையும், அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்களையும் இந்த திட்டத்திலும் செய்து கொள்ளலாம். இதுபோக அமேசான் பிரைம் வீடியோ சந்தா மற்றும் ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பிளேவின் கீழ் 20+ ஓடிடி சந்தா கிடைக்கிறது. மேலும், அப்பல்லோ 24|7 சர்க்கிள் மெம்பர்ஷிப், வின்க் மியூசிக், ப்ரீ ஹெலோ டியூன்ஸ் சலுகை கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








