OTT வேணுமா.. மாதாந்திரம் ரூ.333 கட்டணம்.. 20+ ஓடிடி சந்தா.. 2.5GB டேட்டா.. அன்லிமிடெட் வாய்ஸ்!
ஏர்டெல் கஸ்டமர்களுக்கு நெட்ஃபிளிக்ஸ், அமேசான் பிரைம் வீடியோ, டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் போன்ற ஓடிடிகளின் சலுகைகள் கிடைக்கும் 3 திட்டங்களின் முழு விவரங்கள் இங்கே கொடுக்கப்படுள்ளன. 84 நாட்கள் வேலிடிட்டியில் டேட்டா, அன்லிமிடெட் 5ஜி போன்ற பல்வேறு சலுகைகளை இவை கொண்டுள்ளன.
ஏர்டெல் ரூ 869 திட்ட விவரங்கள் (Airtel Rs 869 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் டேட்டா (Data), கால்கள் (Calls), எஸ்எம்எஸ் (SMS), ஓடிடி (OTT), அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) சலுகைகள் மட்டுமல்லாமல், கூடுதல் சலுகைகளும் (Extra Benefits) வழங்கப்படுகின்றன.

இந்த திட்டத்தை பெறும் கஸ்டமர்களுக்கு நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் 2 ஜிபி டேட்டா சலுகை கொடுக்கப்படுகிறது. 2 ஜிபிக்கு பிறகு 64 கேபிபிஎஸ் வேகத்தில் அன்லிமிடெட் டேட்டா சலுகையை பெறலாம். அதேபோல ஏர்டெல் 5ஜி சேவை கிடைக்கும் பகுதிகளில் இலவசமாக அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை பயன்படுத்தலாம்.
அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் சலுகைகள் கொடுக்கப்படுகிறது. கூடுதல் சலுகைகளாக, அப்பல்லோ 24|7 சர்க்கிள் (Apollo 24|7 Circle), வின்க் மியூசிக் (Wynk Music), ப்ரீ ஹலோ டியூன்ஸ் (Free Hellotunes) மற்றும் ரிவார்ட்ஸ் மினி சந்தா (RewardsMini Subscription) கிடைக்கிறது.
அதுமட்டுமல்லாமல், ரூ.149 மதிப்பிலான டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மொபைல் (Disney+Hotstar Mobile) சந்தா வழங்கப்படுகிறது. இந்த சந்தாவை 3 மாதங்களுக்கு ஏர்டெல் கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். இந்த ஹாட்ஸ்டார் ஓடிடி திட்டத்துக்கு 84 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது.
ஏர்டெல் ரூ 999 திட்ட விவரங்கள் (Airtel Rs 999 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் முந்தைய திட்டத்தின் சலுகைகள் மட்டுமல்லாமல், கூடுதல் டேட்டா (Extra Data) மற்றும் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் பிளே (Airtel Xstream Play) ஓடிடி சலுகையும் கொடுக்கப்படுகிறது.
இந்த திட்டத்தில் நளொன்றுக்கு 2.5 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி, ரோமிங் வாய்ஸ் கால்கள் மற்றும் 100 எஸ்எம்எஸ் சலுகைகள் வழங்கப்படுகின்றன. முந்தைய திட்டத்தை போலவே அன்லிமிடெட் 5ஜி டேட்டா, அப்பல்லோ 24|7 சர்க்கிள் மற்றும் வின்ங்க் மியூசிக் சலுகைகள் வருகின்றன.
இதுபோக ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் பிளே சந்தாவின் கீழ் சோனிலிவ், ஈராஸ் நவ் போன்ற 20+ ஓடிடி ஆப்களின் சந்தா கொடுக்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், அமேசான் பிரைம் வீடியோ (Amazon Prime Video) சந்தா கிடைக்கிறது. இந்த திட்டத்துக்கும் 84 நாட்கள் வேலிடிட்டி வருகிறது. இதற்கான மாதாந்திர செலவானது, ரூ.333ஆக இருக்கிறது.
ஏர்டெல் ரூ 1499 திட்ட விவரங்கள் (Airtel Rs 1499 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தை ரீசார்ஜ் செய்தால் தினசரி 3 ஜிபி டேட்டா சலுகையை பயன்படுத்தி கொள்ளலாம். மொத்தமாக 252 ஜிபி டேட்டாவை பெற்று கொள்ளலாம். அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால் சலுகை, தினசரி 100 எஸ்எம்எஸ் சலுகை கிடைக்கிறது.
முந்தைய திட்டங்களை போலவே ஏர்டெல் அன்லிமிடெட் 5ஜி டேட்டா, அப்பல்லோ 24|7 சர்கிள், ப்ரீ ஹலோட்யூன்ஸ் மற்றும் வின்க் மியூசிக் ஆகியவற்றின் சலுகைகளை பயன்படுத்தி கொள்ளலாம். இதுபோக 3 மாதங்களுக்கான நெட்பிளிக்ஸ் பேஸிக் (Netflix Basic) சந்தா கிடைக்கிறது. இந்த நெட்பிளிக்ஸ் திட்டத்துக்கு 84 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








