Home
News

அறக்க பறக்கும் ரீசார்ஜ்.. ரூ.250 போதும்.. 30GB டேட்டா.. அன்லிமிடெட் வாய்ஸ்.. 2 ஓடிடி சந்தா.. பக்கா பிளான்!

வெறும் ரூ.250 செலவில் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், தினசரி டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் சலுகை மட்டுமல்லாமல், இலவசமாக அமேசான் பிரைம், ஹாட்ஸ்டார் சப்ஸ்கிரிப்ஷனும் கிடைத்தால், எப்படி இருக்கும்? இந்த சலுகைகள் ஏர்டெல்லின் ரூ.999 திட்டத்தில் (Airtel Rs 999 Plan) கிடைக்கிறது.

இன்று, ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் மக்களுக்கு வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ்கள் மற்றும் மொபைல் டேட்டா மட்டுமே போதுமானதாக இருப்பதில்லை. அவர்களிடையே ஓடிடி தளங்களின் மோகமும் அதிகரித்து விட்டது. ஆகவே, மொபைல் ரீசார்ஜ் செய்யும் போதே ஓடிடி தளங்களின் சப்ஸ்கிரிப்ஷனையும் செய்வதை வாடிக்கையாக வைத்து வருகின்றனர்.

ரூ.250 போதும்.. 30GB டேட்டா.. 2 ஓடிடி சந்தா.. ஏர்டெல் பக்கா பிளான்!

இதனால், ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel), வோடபோன் ஐடியா (Vodafone Idea) போன்ற முன்னணி டெலிகாம் நிறுவனங்கள் தங்களது ரீசார்ஜ் திட்டங்களில் ஓடிடி சலுகைகளையும் வழங்க தொடங்கிவிட்டன. இதுபோன்ற ஓடிடி திட்டங்களில் ஒரு சிம் கார்டுக்கு மட்டுமே சலுகைகள் வழங்கப்பட்டுவந்த நிலையில், இப்போது ஒரே ரீசார்ஜில் 5 சிம் கார்டுகளுக்கு டேட்டா, வாய்ஸ், எஸ்எம்எஸ் மற்றும் ஓடிடி சலுகைகள் கொடுக்கப்படுகின்றன.

இது மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுவரும் நிலையில், அந்த திட்டங்களின் விலையை டெலிகாம் நிறுவனங்கள் கணிசமாக குறைத்தும் இருக்கின்றன. அதாவது, நீங்கள் 30 நாட்களுக்கான டேட்டா, கால்கள், எஸ்எம்எஸ் மற்றும் ஓடிடி சலுகைக்கான செலவை ஒரு சிம் கார்டுக்கு செய்தால், அது நிச்சயம் ரூ.500க்கும் மேல் சென்றுவிடும்.

அதுவே நீங்கள் 4 சிம் கார்டுகளுக்கு ரீசார்ஜ் செய்தால் விலை கூட இருந்தாலும், ஒருவருக்கு ரூ.250 மட்டுமே செலவாகும். இதுபோன்று வெறும் ரூ.250 செலவில் ஜியோ நிறுவனமே அதிரும்படி பக்காவான சலுகைகளை ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.999 மதிப்புள்ள போஸ்ட்பெய்ட் திட்டம் வழங்குகிறது. இதன் முழு விவரம் பின்வருமாறு.

ஏர்டெல் ரூ.999 திட்ட விவரங்கள் (Airtel Rs 999 Plan Details): இந்த போஸ்ட்பெய்ட் திட்டத்தை ரீசார்ஜ் செய்தால், ஒரு பிரைமரி சிம் மற்றும் 3 குடும்ப உறுப்பினர்களின் சிம் கார்டுகளுக்கு டேட்டா (Data), வாய்ஸ் கால் (Voice Call), எஸ்எம்எஸ் (SMS) மற்றும் ஓடிடி (OTT) நன்மைகள் கிடைக்கும்.

அந்த வகையில், பிரைமரி சிம் கார்டுக்கு 100 ஜிபி டேட்டா, நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ், அன்லிமிடெட் வாய்ஸ் கால் சலுகைகள் வழங்கப்படும். அதேபோல குடும்ப சிம் கார்டுகளுக்கு தலா 30 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் 100 எஸ்எம்எஸ் சலுகைகள் கொடுக்கப்படும். இந்த 100 எஸ்எம்எஸ்களுக்கு மேல் அனுப்பினால் கூடுதலாக 10 பைசா வசூலிக்கப்படும்.

மேலும், 2 முன்னணி ஓடிடி தளங்களின் சப்ஸ்கிரிப்ஷனும் கிடைக்கிறது. அதாவது, இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்தால், 6 மாதங்களுக்கான அமேசான் பிரைம் வீடியோ (Amazon Prime Video) சப்ஸ்கிரிப்ஷன் மற்றும் ஒரு வருடத்துக்கான டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் (Disney+ Hotstar) மொபைல் சப்ஸ்கிரிப்ஷன் கிடைக்கும். இதற்கு நீங்கள் கூடுதலாக பணம் செலவழிக்க வேண்டியது கிடையாது.

அதுமட்டுமல்லாமல், ஹேண்ட்செட் புரொடெக்‌ஷன் (Handset Protection), ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் மொபைல் பேக் (Airtel Xstream Mobile Pack) மற்றும் விங்க் மியூசிக் பிரீமியம் (Wynk Music Premium) சப்ஸ்கிரிப்ஷனும் கிடைக்கும். இந்த திட்டத்தில் அதிகபட்சமாக 9 சிம் கார்டுகளை இணைந்துக் கொள்ளலாம். ஆனால், 3 சிம் கார்டுகளுக்கு மேல் இணைத்தால் கூடுதலாக ரூ.299 வசூலிக்கப்படும்.

இந்த திட்டத்தின் வேலிடிட்டி 30 நாட்களாகும். ஆகவே, ரூ.250 செலவில் மாதம் முழுக்க டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ் மட்டுமல்லாமல், ஓடிடி சப்ஸ்கிரிப்ஷனும் கிடைக்கிறது என்றால், இது லாபம் தரக்கூடிய திட்டமாகவே தோன்றுகிறது. இந்த திட்டத்துக்கான பில் மாத கடைசியில் வசூலிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Airtel Rs 999 Plan Comes With 100GB Data, 4 SIM Connections, Amazon Prime, Hotstar Subscription
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X