நம்பவே முடியல.. அள்ளித்தரும் Airtel.. ஒரே பிளான்.. இலவச WiFi ரௌட்டர், 22 OTT, 3300GB டேட்டா.. எந்த திட்டம்?
உங்களிடம் ஏர்டெல் சிம் கார்டு (Airtel SIM Card) இருக்கிறதா? இல்லாவிட்டாலும் சரி, உங்கள் வீட்டிற்கு நீங்கள் சூப்பர் ஸ்பீட் வேகத்தில் இணைய (Super Speed Data Plan) வசதியை வழங்கும் ஒரு பெஸ்டான வைஃபை (Best Wi-Fi Plan) திட்டத்தை தேடுகிறீர்களா? அப்படியானால், இந்த பதிவு முழுக்க முழுக்க உங்களுக்கானது தான். இதுவரை எந்தவொரு தொலைத்தொடர்பு நிறுவனமும் வழங்காத குறைந்த விலையில் 200 Mbps ஸ்பீட் வேகத்தில் (200 Mbps Speed Internet), ஏர்டெல் நிறுவனம் புதிய பிராட்பேண்ட் திட்டத்தை (Airtel Broadband Plan) அறிமுகம் செய்துள்ளது.
உங்கள் வீட்டில் இருக்கும் வைஃபை வேகம் போதவில்லை என்றாலோ, அல்லது புதிதாக ஒரு வைஃபை இணைப்பை நீங்கள் வாங்க திட்டமிட்டாலோ, நீங்கள் இந்த ஏர்டெல் பிராட்பேண்ட் திட்டத்தை தேர்வில் வைத்துக்கொள்ளலாம். பார்தி ஏர்டெல் தனது வாடிக்கையாளர்களுக்கு பல 200 Mbps வேக பிராட்பேண்ட் திட்டங்களை வழங்குகிறது. இந்த திட்டங்களை பார்தி ஏர்டெல் இணையதளத்தில் பிராட்பேண்ட் பிரிவின் கீழ் நீங்கள் இப்போது காணலாம்.

ஒரே பிளானில் அள்ளித்தரும் Airtel.. இலவச WiFi ரௌட்டர், 22 OTT சேனல், 3300GB டேட்டா:
ஏர்டெல் பயனர்கள் மட்டுமின்றி யார் வேண்டுமானாலும் இந்த திட்டங்களை வாங்கி பயன்பெறலாம். உங்களுக்கு ஒரு தரமான பிராட்பேண்ட் சேவை வேண்டுமென்றால், ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஃபைபர் (Airtel Xstream Fiber) சேவையை நீங்கள் தேர்வு செய்யலாம். இது இப்போது நாடு முழுவதும் அதன் சேவைகளை விரைவாக விரிவுபடுத்துகிறது. ஃபைபர் பயன்படுத்த முடியாத பகுதிகளில், ஏர்டெல் 5G நெட்வொர்க்குகள் (Airtel 5G) மூலம் இயங்கும் ஏர்டெல் ஏர்ஃபைபர் (Airtel AirFiber) சேவைகளை வழங்குகிறது.
ஏர்டெல் நிறுவனம் இப்போது அதன் பட்டியலின் கீழ் இரண்டு 200 எம்பிபிஎஸ் வேக பிராட்பேண்ட் திட்டங்களை வழங்குகிறது. இரண்டும் திட்டங்களும் ஏறக்குறைய ரூ. 100 வித்தியாசத்துடன் வருகிறது மற்றும் இதன் நன்மைகள் மிகவும் வேறுபட்டவையாக இல்லாமல் சிறிய வேறுபாடுகளுடன் இருக்கிறது. இதில் மலிவு விலை விருப்பமாக ஏர்டெல் ரூ. 999 பிராட்பேண்ட் பிளான் (Airtel Rs 999 Broadband Plan) திட்டம் திகழ்கிறது.
பாரதி ஏர்டெல் ரூ. 999 திட்டம் (Bharti Airtel Rs 999 Plan):
இந்த பாரதி ஏர்டெல் ரூ. 999 திட்டம் (Bharti Airtel Rs 999 Plan) ஒரு 200 Mbps வேகம் கொண்ட பிராட்பேண்ட் திட்டமாகும். இந்த திட்டம் 200 Mbps வேகத்துடன் பல சிறந்த நன்மைகளை அதன் பயனர்களுக்கு வழங்குகிறது. இந்த திட்டம் 22+ OTT சேனல்களுக்கான சந்தாவை இலவசமாக வழங்குகிறது. இதில் அமேசான் பிரைம் (Amazon Prime) மற்றும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் (Disney+ Hotstar) போன்ற OTT அணுகலும் கிடைக்கிறது.
இந்த நன்மைகள் அனைத்தும் ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பிளே (Airtel Xstream Play) இலவச நன்மையோடு கிடைக்கிறது. இந்த திட்டத்துடன் உங்களுக்கு மொத்தமாக 3.3TB டேட்டா நன்மை கிடைக்கிறது. அதாவது மொத்தமாக 3300GB டேட்டா நன்மை பயன்படுத்த கிடைக்கிறது. இந்த திட்டத்தை 3 மாதம், 6 மாதம் மற்றும் 12 மாத சந்தாவாக தேர்வு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு வைஃபை ரௌட்டர் இலவசமாக கிடைக்கிறது. இன்ஸ்டாலைசேஷன் கட்டணமும் இலவசமாக வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications