தரைமட்ட விலைக்கு இறங்கிய Airtel.. தினமும் ரூ.5 மட்டுமே செலவு.. 6 மாதத்திற்கு 1 முறை மட்டும் ரீசார்ஜ்.. எப்படி?
உங்களிடம் ஏர்டெல் சிம் (Airtel SIM Card) இருக்கிறதா? அப்படியானால் உங்களுக்கு ஒரு நற்செய்தி இப்போது வெளியாகியுள்ளது. இந்திய தொலைத்தொடர்பு துறையில் (Indian Telecom Industry) நடைபெறும் கடுமையான போட்டியை சமாளித்து, மீண்டும் முன்னிலை டெலிகாம் நிறுவனமாக உருமாற ஏர்டெல் (Airtel) நிறுவனம் இப்போது போராடி வருகிறது. இதன் காரணமாக மக்களை தன்வசம் ஈர்க்கும் வகையிலான பல புதிய சலுகைகள், அதிக நன்மைகள் கொண்ட புதிய மலிவு விலை திட்டங்களென்று பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வரிசையில் மிகவும் மலிவு விலை 2 அட்டகாசமான திட்டங்களை ஏர்டெல் தற்போது அறிவித்துள்ளது.
இந்திய டெலிகாம் துறையில் ஏர்டெல் நிறுவனத்திற்கு கடுமையான போட்டியாளராக இத்தனை நாட்கள் இருந்து வந்தது என்னவோ ஜியோ (Jio) நிறுவனம் தான் என்றாலும், கடந்த ஜூலை 3ம் தேதி தனியார் டெலிகாம் நிறுவனங்களான ஜியோ, ஏர்டெல் (Airtel), வோடபோன் ஐடியா (Vodafone Idea) போன்ற நிறுவனம் சொல்லி வைத்தது போல, ஒன்றின் பின் ஒன்றாக அவற்றின் ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பைட் திட்டங்களின் விலையை 15% உயர்த்தியது.

தரைமட்ட விலைக்கு இறங்கிய Airtel.. மிகமிக மலிவு விலையில் 2 புதிய ரீசார்ஜ் திட்டங்கள்:
இதனால், மக்கள் கடுப்பாகி அரசுக்கு சொந்தமான பிஎஸ்என்எல் (BSNL) நெட்வொர்க்கிற்கு மாறத் துவங்கிவிட்டனர். பிஎஸ்என்எல் நெட்வொர்க்கிற்கு தாவிய பயனர்களின் பலர் ஏர்டெல் மற்றும் ஜியோ சிம் பயனர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு மேல் மக்கள் ஏர்டெல் நெட்வொர்க்கில் இருந்து வேறெந்த நெட்வொர்க்கிற்கும் செல்லக்கூடாது என்பதனால், நிறுவனம் பல புதிய திட்டங்களை மலிவு விலையில் அள்ளிவீசி வருகிறது.
ஏர்டெல் ரூ.155 திட்டம் (Airtel Rs 155 Plan):
இந்த வரிசையில் தற்போது ஏர்டெல் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள புதிய திட்டம் தான் ஏர்டெல் ரூ.155 திட்டம் (Airtel Rs 155 Plan). இந்த திட்டம் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும் வேலிடிட்டியை கொண்டுள்ளது. இந்த செல்லுபடியாகும் காலத்தில், இத்திட்டத்தின் பயனர்கள் அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் நன்மையை அனுபவிக்கலாம். இத்துடன் தினமும் 100 எஸ்எம்எஸ் (SMS) நன்மையையும் அனுபவிக்கலாம். இந்த திட்டம் ஏர்டெல் அன்லிமிட்டெட் 5ஜி டேட்டா நன்மையை வழங்குகிறது.
ஏர்டெல் ரூ. 999 திட்டம் (Airtel Rs 999 Plan):
இந்த திட்டத்துடன் மிகமிக மலிவு விலையில் நீண்ட கால திட்டத்தை வழங்க ஏர்டெல் நிறுவனம் இப்போது முன்வந்துள்ளது. இந்த நோக்கத்துடன் தினசரி வெறும் 5.55 ரூபாய் செலவில் 180 நாட்களுக்கு செல்லுபடியாகும் ஒரு புதிய திட்டத்தை ஏர்டெல் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இத்திட்டம் ஏர்டெல் ரூ. 999 திட்டம் (Airtel Rs 999 Plan) என்ற பெயருடன் வருகிறது. இந்த திட்டத்தின் நன்மைகளை பற்றி இப்போது பார்க்கலாம்.
முன்பே சொன்னது போல, இந்த திட்டம் 180 நாட்களுக்கு செல்லுபடியாகும் வேலிடிட்டியை வழங்குகிறது. அதாவது முழுமையாக 6 மாத காலத்திற்கு இந்த திட்டம் செல்லுபடியாகும் மக்களே. இந்த திட்டம் அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் நன்மையுடன் தினமும் 100 எஸ்எம்எஸ் (SMS) நன்மையை வழங்குகிறது. இந்த திட்டமும் மேற்கூறியது போல அன்லிமிடெட் 5ஜி டேட்டா நன்மையை வழங்குகிறது. கூடுதல் விபரங்களுக்கு ஏர்டெல் தேங்க்ஸ் ஆப்ஸ் (Airtel Thanks Apps) பார்வையிடுங்கள்.


Click it and Unblock the Notifications








