84 நாளுக்கு அன்லிமிடெட் 5G இலவசம்.. வாய்ஸ் கால், SMS, 15+ OTT சந்தா.. எல்லாமே ஒரே Airtel திட்டத்தில்..
இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனங்களில் ஒன்றான பார்தி ஏர்டெல் (Bharti Airtel), இப்போது ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் பிளே (Airtel Xstream Play) இன் OTT (ஓவர்-தி-டாப்) நன்மையுடன் வரும் இரண்டு ப்ரீபெய்ட் திட்டங்களை 84 நாள் செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் கொண்டுவந்துள்ளது.
ஏர்டெல் (Airtel) வழங்கும் இந்த 2 ப்ரீபெய்ட் திட்டங்களும் இப்போது சூப்பர் நன்மையுடன் வருகிறது. இவை தினசரி அதிவேக டேட்டா நன்மையை தருவதோடு, இரண்டு திட்டங்களுடனும் இணைந்த ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் பிளேயின் பலனும் இப்போது கிடைக்கிறது என்பது சிறப்பான விஷயமாகும். ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே OTT சேவைக்கான அனுகலை வழங்குகிறது.

ஏர்டெல் ட்ரூலி அன்லிமிடெட் 5ஜி இலவச நன்மை (Airtel Truely Unlimited 5G Free Benefits):
இதைத் தவிர இந்தத் திட்டங்களின் மற்றொரு சிறப்பம்சம் என்னவென்றால், பயனர்கள் ஏர்டெல்லில் இருந்து ட்ரூலி அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் நன்மையை பெறுவதோடு, ட்ரூலி அன்லிமிடெட் 5ஜி டேட்டா சலுகையையும் இலவசமாக பெறுகிறார்கள். தெரியாதவர்களுக்கு, ஏர்டெல்லின் ரூ. 239 விலைக்கு மேல் உள்ள ஒவ்வொரு ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் திட்டத்துடன் இந்த இலவச 5ஜி நன்மை கிடைக்கும்.
ஏர்டெல்லின் ரூ. 455 மற்றும் ரூ. 1799 ப்ரீபெய்ட் திட்டங்களைத் தவிர மற்ற எல்லா திட்டங்களிலும் வரம்பற்ற 5ஜி டேட்டா சலுகையை நிறுவனம் வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. சரி, இப்போது நாம் பார்க்கவிருக்கும் 84 நாள் வேலிடிட்டி உடன் இருக்கும் 2 திட்டங்களின் விபரங்களை பற்றி பார்க்கலாம். இந்த இரண்டு திட்டங்கள் ரூ. 999 மற்றும் ரூ. 839 விலையில் வருகிறது.
பார்தி ஏர்டெல்லின் ரூ 999 ப்ரீபெய்ட் திட்டம் (Bharti Airtel Rs 999 Prepaid Plan):
இரண்டு ப்ரீபெய்ட் திட்டங்களும் சற்று விலையுயர்ந்த திட்டங்களின் வகைக்குள் அடங்கும். முதலில் பாரதி ஏர்டெல் வழங்கும் ரூ. 999 ப்ரீபெய்ட் திட்டத்தை பற்றி பார்க்கலாம். பார்தி ஏர்டெல்லின் ரூ 999 ப்ரீபெய்ட் திட்டம் 84 நாட்கள் செல்லுபடியாகும் வேலிடிட்டியுடன் வருகிறது. இந்த திட்டத்தில் ட்ரூலி அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் நன்மை உள்ளது.
இது தினசரி 2.5 ஜிபி டேட்டாவுடன் தினசரி 100 எஸ்எம்எஸ் (SMS) நன்மையுடன் வருகிறது. குறிப்பிட்டுள்ளபடி, இது எக்ஸ்ட்ரீம் பிளே (Xstream Play) இன் OTT நன்மை மற்றும் ட்ரூலி அன்லிமிடெட் 5G டேட்டாவுடன் வருகிறது. Xstream Play சந்தா 15+ OTT இயங்குதளங்களுக்கான அணுகலுடன் வருகிறது. இவை அனைத்தும் ஒரே எக்ஸ்ட்ரீம் உள்நுழைவின் கீழ் உள்ளது. இந்தத் திட்டத்தில் பிற நன்மைகள் எதுவும் இல்லை.
ஏர்டெல் ரூ 839 ப்ரீபெய்ட் திட்டம் (Airtel Rs 839 Prepaid Plan):
ஏர்டெல்லின் ரூ.839 ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா, வரம்பற்ற குரல் அழைப்பு மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் நன்மை போன்றவை கிடைக்கிறது. இந்த திட்டமும் அன்லிமிடெட் 5G டேட்டா நன்மையுடன், ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பிளே (Xstream Play) சந்தாவுடன் வருகிறது. இத்துடன் 3 மாதங்களுக்கு Disney+ Hotstar மொபைலுக்கான இலவச சந்தாவும் கிடைக்கிறது. இதன் வேலிடிட்டியும் 84 நாட்கள் ஆகும்.
இந்த திட்டத்தில் கூடுதல் செலவில்லாமல் தொகுக்கப்பட்ட எக்ஸ்ஸ்ட்ரீம் பிளே சந்தாவை வழங்குகிறது. இதை ஏர்டெல் வாடிக்கையாளர்கள் தனியாக வாங்க விரும்பினால், மாதத்திற்கு ரூ.149 முதல், வருடத்திற்கு ரூ.1499 என்ற விலையில் வாங்க கிடைக்கிறது. இது வரம்பற்ற 5G டேட்டா சலுகையில், வாடிக்கையாளர்கள் வீடியோ உள்ளடக்கத்தை மேடையில் தடையின்றி ஸ்ட்ரீம் செய்ய அனுமதிக்கிறது.


Click it and Unblock the Notifications








