180 நாட்களுக்கு செல்லுபடி; வாய்ஸ் + டேட்டா + எஸ்எம்எஸ் நன்மைகள்; ஏர்டெல் அதிரடி.!

ஏர்டெல் வலைத்தளத்தின்படி, இதன் அழைப்பி நன்மைகளுக்கு எந்த தினசரி அல்லது வாராந்திர வரம்பும் இல்லை. ஆக ஏர்டெல் ரூ.995/- ஆனது உண்மையிலேயே வரம்பற்றது.

|

ஏகப்பட்ட பட்ஜெட் விலையிலான காம்போ (டேட்டா + வாய்ஸ் + எஸ்எம்எஸ்) திட்டங்களையும், வருடாந்திர (பெரும்பாலும் அன்லிமிடெட்) திட்டங்களையும் அறிமுகம் செய்துவிட்ட நிலைப்பாட்டில் பார்தி ஏர்டெல் நிறுவனமானது அதன் புதிய நீண்ட கால திட்டமொன்றை அறிமுகம் செய்துள்ளது.

இந்தியாவின் மிகப்பெரிய டெலிகாம் நிறுவனமான பார்தி ஏர்டெல் தற்போது அறிமுகம் செய்துள்ள திட்டத்தின் மதிப்பு ரூ.995/- ஆகும். இந்த திட்டத்தின் நன்மைகள் என்னென்ன.? செல்லுபடிக்காலம் என்ன.? என்பதையும் ஏர்டெல் வழங்கும் இன்னும் பல சிறந்த திட்டங்களை பற்றிய தகவல்களை விரிவாக காண்போம்.

செல்லுபடி

செல்லுபடி

ஏர்டெல் ரூ.995/- ஆனது 180 நாட்களுக்கு செல்லுபடியாகும், அதாவது 6 மாத காலத்திற்கு செல்லுபடியாகும். நன்மைகளை பொறுத்தமட்டில் ரூ.995/- வரம்பற்ற உள்ளூர் மற்றும் எஸ்டிடி அழைப்புகளை தேசிய ரோமிங் அழைப்பு நன்மைகளுடன் சேர்த்தே வழங்குகிறது

அனைத்து கைபேசிகளுக்கும் பொருந்தும்

அனைத்து கைபேசிகளுக்கும் பொருந்தும்

ஏர்டெல் வலைத்தளத்தின்படி, இதன் அழைப்பி நன்மைகளுக்கு எந்த தினசரி அல்லது வாராந்திர வரம்பும் இல்லை. ஆக ஏர்டெல் ரூ.995/- ஆனது உண்மையிலேயே வரம்பற்றது. மேலும் இந்த திட்டமானது அனைத்து கைபேசிகளுக்கும் பொருந்தும் என்றும் கூறியுள்ளது.

மொத்தம் 18000 எஸ்எம்எஸ்கள்

மொத்தம் 18000 எஸ்எம்எஸ்கள்

வாய்ஸ் நன்மைகள் மட்டுமின்றி இந்த திட்டத்துடன் மாதம் 1ஜிபி அளவிலான 3ஜி / 4ஜி தரவு பயன்படும் கிடைக்கும். உடன் இந்த ரீசார்ஜ் பேக்கின்கீழ் தினமும் 100 எஸ்எம்எஸ் நன்மையையும் கிடைக்கும். அதாவது ரூ.995/- செல்லுபடியாகும் காலத்தில் மொத்தம் 18000 எஸ்எம்எஸ்கள் கிடைக்குமென்று அர்த்தம்.

தமிழ்நாடு வட்டத்தில்

தமிழ்நாடு வட்டத்தில்

டெலிகாம்இன்ஃபோ.காம் வலைத்தளத்தின்படி, முதலில் இந்த வாய்ப்பானது ​​தமிழ்நாடு வட்டத்தில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு செல்லுபடியாகிறது. பின்னர் தெலுங்கானா, தில்லி என்சிஆர் மற்றும் கர்நாடகாவிலும் கிடைக்கின்றது. வட்டத்திற்கு ஏற்றப்படி செல்லுபடியாகும் காலத்தில் சில மாற்றங்கள் இருக்கலாமென எதிர்பார்க்கப்படுகிறது.

நாள் ஒன்றிற்கு 1ஜிபி

நாள் ஒன்றிற்கு 1ஜிபி

உங்களுக்கு நீண்டகால குரல் அழைப்பு தேவைப்படும் அதே சமயத்தில் அதிக டேட்டா தேவையில்லை என்றால் ரூ.995/- ஒரு சிறந்த திட்டமாகும். ஒருவேளை டேட்டா தேவைப்பட்டால் செல்லுபடியாகும் நாள் ஒன்றிற்கு 1ஜிபி அளவிலான டேட்டாவை வழங்கும் ரூ.193/- என்கிற டேட்டா ஆட்-ஆன் திட்டத்தை ரூ.995/- உடன் நீங்கள் சேர்க்கலாம்.

வரம்பற்ற அழைப்பு மற்றும் எஸ்எம்எஸ்

வரம்பற்ற அழைப்பு மற்றும் எஸ்எம்எஸ்

மறுபுறம் நீங்கள் தினசரி அளவில் டேட்டா வழங்கும் தரவுத் திட்டத்தை தேடுகிறீர்களானால், ஏர்டெல் ரூ.999/- ஒரு தர்க்கரீதியான தேர்வாகும். இந்த திட்டம் வரம்பற்ற அழைப்பு மற்றும் எஸ்எம்எஸ் நன்மைகளுடன் சேர்த்து 60ஜிபி அளவிலான டேட்டாவை வழங்கும்.

Translate English to Tamil In your Mobile Easily (GIZBOT TAMIL)
ஒரே நாளில் கூட பயன்படுத்தலாம்

ஒரே நாளில் கூட பயன்படுத்தலாம்

இருப்பினும், இந்த திட்டம் 90 நாட்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும் ரூ,995/- போல 180 நாட்களுக்கு செல்லுபடியை கொண்டிருக்கவில்லை. ரூ.999/-ல் டேட்டா பயன்பாடு வரம்பு இல்லை என்பதால், மொத்தமாக கிடைக்கும் 60ஜிபி அளவிலான டேட்டாவை மொத்தம் 90 நாட்களுக்கும் பயன்படுத்தலாம் அல்லது ஒரே நாளில் கூட பயன்படுத்தலாம்.

உள்ளூர், எஸ்டிடி மற்றும் வெளிச்செல்லும் தேசிய ரோமிங்

உள்ளூர், எஸ்டிடி மற்றும் வெளிச்செல்லும் தேசிய ரோமிங்

உடன் இந்த ரூ.999/- ஆனது உள்ளூர், எஸ்டிடி மற்றும் வெளிச்செல்லும் தேசிய ரோமிங் உடன் வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகள் மற்றும் நாள் ஒன்றிற்கு 100 எஸ்எம்எஸ்களையும் வழங்குகிறது. அதாவது ரூ.999/- செல்லுபடியாகும் காலத்தில் மொத்தம் 9000 எஸ்எம்எஸ்கள் கிடைக்குமென்று அர்த்தம்.

ரூ.193/- மற்றும் ரூ.49

ரூ.193/- மற்றும் ரூ.49

பிப்ரவரி 22 அன்று ரிலையன்ஸ் ஜியோ மற்றும் அதன் மலிவான கட்டணத் திட்டங்களை எதிர்கொள்ளும் முனைப்பின்கீழ், பார்தி ஏர்டெல் நிறுவனமானது அதன் ரூ.193/- மற்றும் ரூ.49/- என்கிற புதிய திட்டத்தை அறிவித்தது. இவைகள் ஆட்-ஆன் திட்டங்ளாகும்.

பல பிரபலமான ஏர்டெல் வட்டாரங்களில்

பல பிரபலமான ஏர்டெல் வட்டாரங்களில்

ஆரம்பத்தில் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ஏர்டெல் ப்ரீபெய்ட் பயனாளர்களுக்கு மட்டுமே ரீசார்ஜ் செய்ய கிடைத்தது. ஆனால் தற்போது, கடந்த சில தினங்களாகவே ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, தில்லி மற்றும் பல பிரபலமான ஏர்டெல் வட்டாரங்களில் இந்த திட்டங்கள் ரீசார்ஜ் செய்ய திறந்து விடப்பட்டுள்ளது.

6ஜிபி அளவிலான கூடுதல் டேட்டா

6ஜிபி அளவிலான கூடுதல் டேட்டா

முதலில், ஏர்டெல் நிறுவனத்தின் டேட்டா ஆட்-ஆன் திட்டங்களானது ரிலையன்ஸ் ஜியோவின் ஆட்-ஆன் திட்டங்களில் இருந்து வேறுபடுகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள். ரிலையன்ஸ் ஜியோவானது ரூ.11/- முதல் ரூ.101/- வரையிலான கூடுதல் டேட்டா தொகுப்புகளை கொண்டுள்ளதுடன், ஒரு நிலையான அளவு தரவை வழங்குகிறது. எடுத்துக்காட்டாக, ஜியோவின் ரூ.101/- ஆட்-ஆன் ஆனது 6ஜிபி அளவிலான கூடுதல் தரவை கொடுக்கிறது.

ஆட்-ஆன் திட்டத்தை ரீசார்ஜ் செய்தால்

ஆட்-ஆன் திட்டத்தை ரீசார்ஜ் செய்தால்

ஆனால் ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகியவற்றின் ஆட்-ஆன் பொதிகளின் செயல்பாடு ஒன்றுதான். அதாவது இவைகள் நிறுவனத்தின் வரம்பற்ற காம்போ திட்டங்களுடன் செல்லுபடியாகும். உதாரணமாக, நீங்கள் ஜியோ ரூ.198/- திட்டத்தில் இருந்துகொண்டு ரூ.101/- ஆட்-ஆன் திட்டத்தை ரீசார்ஜ் செய்தால் உங்களுக்கு கூடுதலாக 6 ஜிபி கிடைக்கும் மற்றும் அது ரூ.198 திட்டத்தின் செல்லுபடியாகும் காலம் வரை நீடிக்கும்.

ஒரு நாளைக்கு 2.4 ஜிபி

ஒரு நாளைக்கு 2.4 ஜிபி

மறுகையில் ஏர்டெல் நிறுவனத்திடம் உள்ள ரூ.193/- திட்டமானது பிரதான ரீசார்ஜ் திட்டத்தின் டேட்டா நன்மையுடன் கூடுதலாக நாள் ஒன்றிற்கு 1ஜிபி அளவிலான டேட்டாவை வழங்குகிறது. எடுத்துக்காட்டிற்கு, 90 நாட்களுக்கும் நாள் ஒன்றிற்கு 1.4 ஜிபி தரவு நன்மையை வழங்கும் ரூ.509- என்கிற ஏர்டெல் ப்ரீபெய்ட் காம்போ திட்டத்தில் நீங்கள் உள்ளீர்கள் என்றால் உங்களுக்கு 90 நாட்களுக்கும் ஒரு நாளைக்கு 2.4 ஜிபி தரவு கிடைக்கும்.

ப்ரீபெய்ட் காம்போ

ப்ரீபெய்ட் காம்போ

இதே போன்று ஏர்டெல் நிறுவனத்தின் வரம்பிற்குட்பட்ட ப்ரீபெய்ட் காம்போ திட்டங்களான ரூ.199, ரூ.349, ரூ.399/- மற்றும் ரூ.448/- ஆகிய அனைத்திற்கும் இது ஆட்-ஆன் திட்டங்கள் பொருந்தும். பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் மிகச்சிறந்த திட்டங்களில் ஒன்ரா ரூ.193/- ஆட்-ஆன் பார்க்கப்படுகிறது.

ஏர்டெல் ரூ.49/- டேட்டா ஆட் ஆன்-பேக் விவரங்கள்

ஏர்டெல் ரூ.49/- டேட்டா ஆட் ஆன்-பேக் விவரங்கள்

இந்த கூடுதல் தரவு வழங்கும் திட்டமானது, ரூ.193/- ஐ போல் நாள் ஒன்றிற்கு கூடுதலாக 1ஜிபி டேட்டாவை
வழங்காமல், பிரதான ரீசார்ஜ் செல்லுபடியாகும் மொத்த காலத்திற்கும் 1ஜிபி அளவிலான கூடுதல் டேட்டாவை வழங்கும். மேலும் பல டெலிகாம் அப்டேட்ஸ்களுக்கு தமிழ் கிஸ்பாட் வலைத்தளத்துடன் இணைந்திருக்கவும்.

Best Mobiles in India

English summary
Airtel Rs 995 Prepaid Plan Unveiled to Offer Unlimited Calls, 100 SMS Per Day for 180 Days. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X