ஏர்டெல்லுக்கு கும்பிடு.. வெறும் ரூ.99 போதும்.. 40ஜிபி டேட்டா.. அறக்க பறக்கும் ரீசார்ஜ்.. வேலிடிட்டி?
ஜியோ நிறுவனத்திற்குப் போட்டி கொடுக்கும் வகையில் அவ்வப்போது புதிய திட்டங்கள் மற்றும் சலுகைகளை அறிவித்த வண்ணம் உள்ளது ஏர்டெல் நிறுவனம். குறிப்பாக ஏர்டெல் நிறுவனம் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்த ஒவ்வொரு ப்ரீபெய்ட் திட்டங்களுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ஏர்டெல் நிறுவனம் ஒரு முக்கியமான ப்ரீபெய்ட் திட்டத்தின் நன்மைகளை மாற்றி உள்ளது. அதாவது ஏர்டெல் ரூ.99 ப்ரீபெய்ட் திட்டத்தில் தான் தற்போது நன்மைகள் மாற்றப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் ஏர்டெல் நிறுவனம் ரூ.99 ப்ரீபெய்ட் திட்டத்தை (டேட்டா பேக்) அறிமுகம் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

முதலில் ஏர்டெல் ரூ.99 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது 30ஜிபி வரை வரம்பற்ற டேட்டா நன்மையை வழங்கியது. பின்பு இந்த திட்டம் 1 நாள் மட்டும் வேலிடிட்டி வழங்கி வந்தது. அதேபோல் நீங்கள் இந்த திட்டத்தில் 30ஜிபி அதிவேக டேட்டாவை பயன்படுத்திய பிறகு 64 கேபிபிஎஸ் வேகத்தில் இணையத்தைப் பயன்படுத்தலாம்.
இந்நிலையில் ரூ.99 ப்ரீபெய்ட் திட்டம் திருத்தப்பட்டுள்ளது. அதாவது ஏர்டெல் பயனர்கள் தற்போது இந்த ஏர்டெல் ரூ.99 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் 2 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். ஆனால் தற்போது இந்த திட்டம் ஒரு நாளைக்கு 20ஜிபி வரம்பற்ற டேட்டா நன்மையை வழங்குகிறது. எனவே இரண்டு நாட்களுக்கும் சேர்த்து மொத்தமாக 40ஜிபி டேட்டா இந்த திட்டத்தில் கிடைக்கும்.
குறிப்பாக ரூ.99 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது ஒரு டேட்டா பேக் ஆகும். எனவே இந்த டேட்டா பேக்கை பயன்படுத்த நீங்கள் எதாவது ஒரு அடிப்படை ப்ரீபெய்ட் திட்டத்தை ரீசார்ஜ் செய்து வைத்திருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளவும். மேலும் ஏர்டெல் நிறுவனம் வழங்கும் சில அசத்தலான ப்ரீபெய்ட் திட்டங்களை இப்போது பார்ப்போம்.
ஏர்டெல் ரூ.499 ப்ரீபெய்ட் திட்டம் தினசரி 3ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் பயனர்களுக்கு 3 மாதங்களுக்கு டிஸ்னி + ஹாட்ஸ்டார் சந்தா கிடைக்கும். அதேபோல் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ், ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் பிளே அணுகல், அப்பல்லோ 24|7 சர்க்கிள், விங்க் மியூசிக் பிரீமியம், இலவச ஹெலோட்யூன்ஸ் உள்ளிட்ட பல சலுகைகள் கிடைக்கிறது.
ஏர்டெல் ரூ.699 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 3ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 56 நாட்கள் ஆகும். மேலும் இந்த திட்டம் 56 நாட்களுக்கு அமேசான் ப்ரைம் சப்ஸ்க்ரிப்ஷனை வழங்குகிறது. அதேபோல் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ், ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் பிளே அணுகல், அப்பல்லோ 24|7 சர்க்கிள், விங்க் மியூசிக் பிரீமியம், இலவச ஹெலோட்யூன்ஸ் உள்ளிட்ட பல சலுகைகள் கிடைக்கிறது.

ஏர்டெல் ரூ.839 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். மேலும் இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் பயனர்களுக்கு 3 மாதங்களுக்கு டிஸ்னி + ஹாட்ஸ்டார் சந்தா கிடைக்கும். இதுதவிர வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ், ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் பிளே, அப்பல்லோ 24|7 சர்க்கிள், விங்க் மியூசிக் பிரீமியம், இலவச ஹெலோட்யூன்ஸ் உள்ளிட்ட பல நன்மைகளை வழங்குகிறது இந்த ரூ.839 ப்ரீபெய்ட் திட்டம்.
அதேபோல் ஏர்டெல் நிறுவனம் இந்த ஆண்டு இறுதியில் பல அசத்தலான திட்டங்களை அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக ஏர்டெல் நிறுவனத்தின் ப்ரீபெய்ட் திட்டங்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது.


Click it and Unblock the Notifications








