இறங்கி அடிக்கும் ஏர்டெல்.. வெறும் ரூ.99 போதும்.. அன்லிமிடெட் டேட்டா.. 48 மணி நேரம் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
ஜியோ (Jio) நிறுவனத்துக்கு நிகராக வாடிக்கையாளர்களை மிரளவிடும்படி ஏர்டெல் (Airtel) நிறுவனம் டேட்டா திட்டங்களை வைத்திருக்கிறது. அதில், 1 நாள் மட்டும் 2 நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டங்கள் மிகப்பெரும் வரவேற்பு பெற்றுவருகின்றன. இந்த திட்டங்கள் குறித்த முழு விவரம் இதோ.
இப்போதெல்லாம், டெலிகாம் வாடிக்கையாளர்களுக்கு வாய்ஸ் கால் சலுகை எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்கு டேட்டா சலுகையும் முக்கியமாக மாறிவிட்டது. அவர்கள் ரீசார்ஜ் செய்யும் திட்டத்தின் டேட்டாவே போதாமல் இருக்கிறது. இதனால், அவர்கள் கூடுதல் டேட்டா திட்டங்களை (Data Plans) ரீசார்ஜ் செய்ய தொடங்கி விட்டனர்.

இவர்களின் தேவைக்கு ஏற்ப டெலிகாம் நிறுவனங்களும் அவ்வப்போது, அதிரடி டேட்டா திட்டங்களை அறிமுகம் செய்து வருகின்றன. அந்த வரிசையில், ஏர்டெல் நிறுவனம் ரூ.19 முதல் ரூ.99 வரையில் பட்டையை கிளப்பும் சலுகைகளை கொண்ட நான்கு டேட்டா திட்டங்களை வைத்திருக்கிறது. இவை பற்றிய விவரம் பின்வருமாறு.
ஏர்டெல் ரூ 19 திட்ட விவரங்கள் (Airtel Rs 19 Plan Details): ஏர்டெல்லில் வாடிக்கையாளர்களுக்கு மிகவும் மலிவான விலையில் கிடைக்கும் டேட்டா திட்டம் இதுவாகும். இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்தால், உங்களுக்கு 1 ஜிபி டேட்டா சலுகை கொடுக்கப்படுகிறது. இதற்கு 1 நாள் வேலிடிட்டியும் கிடைக்கிறது. இந்த 1 ஜிபிக்கு பின்பு, 1 எம்பிக்கு 50 பைசா வசூலிக்கப்படுகிறது.
ஏர்டெல் ரூ 29 திட்ட விவரங்கள் (Airtel Rs 29 Plan Details): இந்த திட்டத்துக்கும் 1 நாள் வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது. அதோடு 2 ஜிபி டேட்டாவை வாடிக்கையாளர்கள் பயன்படுத்தி கொள்ள முடியும். இந்த 2 ஜிபி டேட்டாவுக்கு பிறகு முந்தைய திட்டத்தை போலவே 1 எம்பிக்கு 50 பைசா வசூலிக்கப்படும்.

ஏர்டெல் ரூ 49 திட்ட விவரங்கள் (Airtel Rs 49 Plan Details): ஏர்டெல் வாடிக்கையாளர்களில் ஒரு நாளுக்கு 3 அல்லது 4 ஜிபிக்கும் அதிகமான டேட்டா சலுகை தேவைப்படும் நபர்கள் மட்டும் இந்த திட்டத்தை தேர்வு செய்து கொள்ளுங்கள். இது அதிகப்படியான டேட்டாவை கொடுக்கிறது.
இந்த டேட்டா திட்டத்தை ரீசார்ஜ் செய்தால், நீங்கள் 6 ஜிபி டேட்டா சலுகையை பயன்படுத்தி கொள்ள முடியும். இந்த திட்டத்துக்கு 1 நாள் மட்டுமே வேலிடிட்டி வழங்கப்படுவதால், அதற்கு ஏற்ப பயன்பாட்டை உறுதி செய்து கொள்ளுங்கள். இந்த டேட்டா திட்டத்திலும் 6 ஜிபிக்கு பிறகு 1 எம்பிக்கு 50 பைசா கட்ட வேண்டும்.
ஏர்டெல் ரூ 99 திட்ட விவரங்கள் (Airtel Rs 99 Plan Details): இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்தால், உங்களுக்கு 2 நாட்களுக்கு (48 மணி நேரம்) அன்லிமிடெட் டேட்டா சலுகை கொடுக்கப்படுகிறது. இருப்பினும், ஒரு நாளுக்கு 20 ஜிபி டேட்டாவை அதிகபட்சமாக பயன்படுத்தி கொள்ளலாம்.
இந்த 20 ஜிபிக்கு மேலும் அன்லிமிடெட் டேட்டாவை பயன்படுத்த முடியும். அதாவது ஃபேர் யூசேஜ் பாலிசி (Fair Usage Policy) அடிப்படையில், 20 ஜிபிக்கு மேல் பயன்படுத்தும் டேட்டாவுக்கு 64 கேபிபிஎஸ் வேகம் மட்டுமே வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கப்படும். இந்த திட்டம் ஓடிடி பிரியர்களுக்கு மிக சிறந்த திட்டமாக இருக்கிறது.

இந்த 4 திட்டங்களுக்கும் பேஸ் ப்ரீபெய்ட் திட்டம் (Base Prepaid Plan) ஆக்டிவாக இருக்க வேண்டும். அதாவது, ஒரு மாதத்துக்கோ அல்லது மூன்று மாதத்துக்கோ ஏர்டெல் வாடிக்கையாளர்கள் ரீசார்ஜ் செய்து வைத்திருந்தால், இந்த திட்டங்களை அவர்கள் கூடுதல் டேட்டா திட்டமாக பயன்படுத்தி கொள்ள முடியும்.


Click it and Unblock the Notifications








