Home
News

ஏர்டெல் விடாபிடி.. வெறும் ரூ.99 போதும்.. அன்லிமிடெட் டேட்டா.. 2 நாட்கள் வேலிடிட்டி.. அறக்க பறக்கும் ரீசார்ஜ்!

ஜியோ வாடிக்கையாளர்களை வியக்க வைக்கும் விதமாக ஏர்டெல் நிறுவனம், வெறும் ரூ.99 விலையில் அன்லிமிடெட் டேட்டா திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரை முன்னிட்டு, தனது வாடிக்கையாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது. இந்த திட்டம் குறித்த விவரம் இதோ.

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரை முன்னிட்டு, ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel) போன்ற முன்னணி டெலிகாம் (Telecom) நிறுவனங்கள், பட்டையை கிளப்பும் திட்டங்களை அறிமுகம் செய்து வருகின்றன. முன்னதாக, ஜியோ நிறுவனம், வெறும் ரூ 311 திட்டத்தில் 90 நாட்களுக்கான டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் சந்தாவை கொடுத்து அதன் வாடிக்கையாளர்களை உச்சுக் கொட்ட செய்தது.

வெறும் ரூ.99 போதும்.. அன்லிமிடெட் டேட்டா.. 2 நாட்கள் வேலிடிட்டி!

இதற்கு துளியும் குறைவில்லாமல், ரூ 99 திட்டத்தை அறிவித்து, தனது வாடிக்கையாளர்களை கொண்டாட்டத்தின் உச்சிக்கு கொண்டு சென்றுள்ளது ஏர்டெல் நிறுவனம். இந்த திட்டத்தோடு ரூ 49 விலையில் கிடைக்கும் மற்றொரு டேட்டா திட்டமும் நல்ல சலுகைகளுடன் கிடைக்கிறது. இந்த திட்டங்களில் வேலிடிட்டி, டேட்டா விவரங்கள் பின்வருமாறு.

ஏர்டெல் ரூ 99 திட்ட விவரங்கள் (Airtel Rs 99 Plan Details): இந்த திட்டத்தில் டேட்டா சலுகை மட்டுமே கொடுக்கப்படும். இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்தால், உங்களுக்கு 2 நாட்கள் முழுவதும் (48 மணி நேரம்) அன்லிமிடெட் டேட்டா சலுகை கொடுக்கப்படும்.

அதோடு ஃபேர் யூசேஜ் பாலிசியின் (Fair Usage Policy) அடிப்படையில், ஒரு நாளைக்கு 20 ஜிபி ஒதுக்கப்படுகிறது. இந்த 20 ஜிபிக்கு மேல் டேட்டாவை பயன்படுத்தினால் 64 கேபிபிஎஸ் வேகத்தில் மட்டுமே டேட்டா கிடைக்கும். இருப்பினும், தொடர்ந்து அன்லிமிடெட் டேட்டாவை பயன்படுத்திக் கொள்ள முடியும்.

அதாவது, முதல் நாளில் 20 ஜிபியை பயன்படுத்திவிட்டால், 64 ஜிபியாக வேகம் குறையும். அதன் பின்பு அடுத்த நாளில் மீதம் உள்ள 20 ஜிபிக்கான டேட்டா வேகம் அதிகரிக்கப்பட்டு விடும். இதுவொரு அன்லிமிடெட் டேட்டா திட்டம் மட்டுமே என்பதால், ஏற்கனவே உங்களிடம் ப்ரீபெய்ட் திட்டம் ஆக்டிவாக இருக்க வேண்டும்.

ஆகவே, இந்த திட்டத்தை கூடுதல் டேட்டா திட்டமாகவே பயன்படுத்திக் கொள்ள முடியும். கிரிக்கெட் மட்டுமல்லாமல், ஓடிடி (OTT) மற்றும் ஆன்லைன் கேமிங் (Online Gaming) போன்றவற்றுக்கும் இந்த அன்லிமிடெட் டேட்டா திட்டம் மிகுந்த பலன்களை தரக்கூடியதாக இருக்கும். இதேபோல ரூ 49 விலையில் கிடைக்கும் மற்றொரு டேட்டா திட்டம் குறித்து, இப்போது பார்ப்போம்.

ஏர்டெல் ரூ 49 திட்ட விவரங்கள் (Airtel Rs 49 Plan Details): இந்த திட்டத்தில் அன்லிமிடெட் டேட்டா கிடையாது. மொத்தமாக 6 ஜிபி டேட்டா வழங்கப்படும். இந்த டேட்டாவை ஒரு நாள் (24 மணி நேரம்) முழுவதும் பயன்படுத்திக் கொள்ள முடியும். மொத்தமாக டேட்டா கிடைப்பதால், எப்போது வேண்டுமானாலும் முழு டேட்டாவை பயன்படுத்தலாம்.

ஒருவேளை உங்களுக்கு வேலிடிட்டி அதிகமாகவும், கூடுதல் சலுகைகளும் வேண்டுமானால், ரூ 148 விலையில் கிடைக்கும் டேட்டா திட்டத்தை தேர்வு செய்யலாம். இந்த திட்டத்தில் 15 ஜிபி டேட்டா வழங்கப்படும். இந்த டேட்டாவை உங்களது ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டி முடியும் வரையில் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

அதுமட்டுமல்லாமல், ஓடிடி சலுகைகளும் கிடைக்கும். ஆகவே, ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பிளே (Airtel Xstream Play) சலுகையின் கீழ் கிடைக்கும், சோனி லிவ் (Sony LIV), லயன்கேட்ஸ் பிளே (Liongates Play), ஈராஸ் நவ் (Eros Now), மனோரமா மேக்ஸ் (Manorama Max) உள்ளிட்ட 15 ஓடிடி தளங்களில் சந்தா கிடைக்கும். இப்படி கிரிக்கெட் தொடரை முன்னிட்டு, ஜியோவுக்கு நிகராக விடாபிடியாக திட்டங்களை கொடுக்கிறது, ஏர்டெல் நிறுவனம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Airtel Rs 99 Plan Offers Unlimited Data Two Days Validity 20GB FUP Here Data Pack Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X