Home
News

அதான் ஏர்டெல்! இனிமே 4G டேட்டாவுக்கு ரூ.11 ரீசார்ஜ்.. 5G-க்கு ரூ.51 முதல் திட்டம்.. மொத்த திட்டங்கள் இதுதான்!

ஏர்டெல் கஸ்டமர்களுக்கு ரீசார்ஜ் கட்டண அதிகரிப்புக்கு பிறகு கிடைக்கும் டேட்டா திட்டங்கள் பற்றி தெரிந்திருக்க வேண்டும். ஏனென்றால், 4ஜி டேட்டா திட்டங்கள் (4G Data Plans) மட்டுமல்லாமல், 5ஜி டேட்டா திட்டங்களையும் (5G Data Plans) பார்தி ஏர்டெல் (Bharti Airtel) நிறுவனம் களமிறக்கி இருக்கிறது. ஆகவே, இந்த 4ஜி மற்றும் 5ஜி திட்டங்களை பற்றி தெரிந்தால் மட்டுமே கஸ்டமர்கள் தங்களுக்கான லாபத்துடன் திட்டத்தை தேர்வு செய்து கொள்ள முடியும். இந்த திட்டங்கள் குறித்த விவரம் இதோ.

ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியாவின் கட்டண உயர்வுக்கு பிறகு எந்த திட்டங்களை ரீசார்ஜ் செய்தாலும் அதில் இருக்கும் சலுகைகள் என்ன? என்பதை அலசி ஆராய்ந்து பார்க்க வேண்டி இருக்கிறது. ஆகவே, பார்தி ஏர்டெல் நிறுவனத்தில் இருக்கும் 4ஜி டேட்டா திட்டங்களை பார்க்கையில் ரூ 11 மதிப்பில் இருந்து திட்டங்கள் தொடங்குகின்றன.

அதான் ஏர்டெல்! இனிமே 4G டேட்டாவுக்கு ரூ.11 ரீசார்ஜ்.. 5G-க்கு ரூ.51!

இந்த ரூ 11 மதிப்புள்ள டேட்டா திட்டத்தில் 1 மணி நேரத்துக்கு அன்லிமிடெட் டேட்டா சலுகை கிடைக்கிறது. இருப்பினும், 10 ஜிபி வரையில் மட்டுமே பயன்படுத்த முடியும். 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா சலுகை கிடைக்கிறது. ரூ 22 மதிப்பிலான திட்டத்தில் 1 ஜிபி டேட்டா சலுகை மற்றும் 1 நாள் வேலிடிட்டி வருகிறது. இதற்கு போஸ்ட் டேட்டா சலுகை கிடையாது.

அதேபோல ரூ 33 மதிப்பிலான திட்டத்தில் 2 ஜிபி டேட்டா சலுகையும், 1 நாள் வேலிடிட்டியும் வருகிறது. போஸ்ட் டேட்டா சலுகை இதிலும் கிடையாது. ரூ 49 மதிப்பிலான டேட்டா திட்டத்தில் அன்லிமிடெட் டேட்டா சலுகை 1 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது. அதிகபட்சமாக 20 ஜிபி டேட்டாவை பயன்படுத்தலாம். இந்த திட்டத்துக்கு 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா சலுகை வருகிறது.

ரூ 77 மதிப்பிலான டேட்டா திட்டத்தில் 5 ஜிபி டேட்டா சலுகை மட்டுமே கிடைக்கிறது. ஆனால், ஆக்டிவ் திட்டத்தின் வேலிடிட்டி நாட்கள் வரையில் இந்த டேட்டாவை பயன்படுத்தலாம். இதற்கு போஸ்ட் டேட்டா சலுகை வழங்கப்படவில்லை. அதிகபட்ச டேட்டா சலுகையுடன் ரூ 99 மதிப்பிலான டேட்டா திட்டம் கிடைக்கிறது. 2 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது.

இந்த நாட்களில் 20 ஜிபி டேட்டாவை பயன்படுத்தி கொள்ளலாம். 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா சலுகையும் பெற்று கொள்ளலாம். மேற்கண்ட திட்டங்கள் 4ஜி சேவைக்கான டேட்டா திட்டங்களாகும். இப்போது 5ஜி டேட்டா திட்டங்களை பார்க்கலாம். ஏனென்றால், தினசரி 1 ஜிபி மற்றும் 1.5 ஜிபி டேட்டா திட்டங்களுக்கே அன்லிமிடெட் 5ஜி டேட்டா சேவை கிடைக்கிறது.

ஏர்டெல்லின் 5ஜி டேட்டா திட்டங்களை பார்க்கையில், மூன்று திட்டங்கள் இருக்கிறது. இவை 4ஜி திட்டங்களை போலல்லாமல், கூடுதல் விலைக்கே அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. ஆரம்ப விலை திட்டமே ரூ 51 மதிப்பில் தொடங்குகிறது. அதேபோல அதிகபட்சம் ரூ 151 மதிப்பிலும் 5ஜி டேட்டா திட்டம் இருக்கிறது.

ஆகவே, முதலில் கிடைக்கும் ரூ 51 மதிப்பிலான திட்டத்தில் 3 ஜிபி டேட்டா சலுகை கிடைக்கிறது. அடுத்து இருக்கும் ரூ 101 மதிப்பிலான திட்டத்தில் 6 ஜிபி டேட்டா கொடுக்கப்படுகிறது. இறுதியாக ரூ 151 மதிப்பிலான டேட்டா திட்டத்தில் 9 ஜிபி டேட்டா கிடைக்கிறது. இந்த 3 திட்டங்களுக்கும் ஆக்டிவ் திட்டத்தின் வேலிடிட்டி கிடைக்கிறது.

ஆகவே, எப்படி பார்த்தாலும் இந்த திட்டங்கள் நல்ல சலுகை கொண்டாதவே இருக்கின்றன. இப்போதைக்கு 5ஜி சேவை இலவமாக கிடைக்கிறது. தினசரி 1 ஜிபி மற்றும் 1.5 ஜிபி டேட்டா திட்டங்களில் டேட்டா தீர்ந்த பிறகு இந்த திட்டங்களை ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். போட்டி நிறுவனமான ஜியோ 5ஜி டேட்டா திட்டங்களை கொண்டுவரவில்லை.

More from GizBot

Best Mobiles in India

English summary
Airtel Rs 99 Plan Offers 40GB Data 2 Days Validity Check Rs 11 Rs 22 Rs 33 Rs 49 Rs 77 Data Vouchers
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X