Home
News

ஏர்டெல்லுக்கு கும்பிடு.. வெறும் ரூ.99 போதும்.. 24 மணி நேரம் அன்லிமிடெட் டேட்டா.. அறக்க பறக்கும் ரீசார்ஜ்!

ஜியோ நிறுவனத்தையே மிரள வைக்கும்படி, ஏர்டெல் (Airtel) நிறுவனம் வெறும் ரூ.99 விலையில் புதிய அன்லிமிடெட் டேட்டா திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. ரூ.98 திட்டத்தில் அதிகபட்சமாக 5ஜிபி டேட்டாவை மட்டுமே வழங்கிவந்த நிலையில், இந்த திட்டத்தின் அறிவிப்பு மிகப்பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

ஏர்டெல் நிறுவனத்தின் டேட்டா பேக்குகள் ஜியோவை விட சற்று கூடுதல் விலைக்கே நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. அதாவது, குறைந்தபட்சமாக 1 ஜிபி டேட்டா வேண்டுமென்றால், ஜியோவில் ரூ.15க்கு கிடைக்கிறது. ஆனால், ஏர்டெல்லில் ரூ.19க்கு மட்டுமே 1 ஜிபி டேட்டா கிடைக்கிறது. இப்படி அனைத்து டேட்டா பிளான்களிலும் ஜியோவுடன் ஒப்பிடுகையில் கூடுதலாக 4 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.

ஏர்டெல்லுக்கு கும்பிடு.. வெறும் ரூ.99 போதும்.. 24 மணி நேரம் டேட்டா!

இதனால், ஆன்லைன் கேமிங் மற்றும் ஓடிடியை அதிகமாக பயன்படுத்தும் ஏர்டெல் வாடிக்கையாளர்கள், டேட்டா பேக்குகளுக்கு கூடுதலாக செலவும் செய்யும்படி இருந்தது. ஆகவே, டேட்டா பேக்குகளில் சலுகைகள் வேண்டி வாடிக்கையாளர்கள் மத்தியில் கோரிக்கைகள் எழுந்தன. இந்த சூழலில், டெலிகாம் நிறுவனங்கள் சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆஃபர்களை அறிவித்து வருகின்றன. அந்த வரிசையில், ஏர்டெல் நிறுவனம் அதிரடியான புதிய டேட்டா பிளானை அறிவித்துள்ளது.

ஏர்டெல் ரூ 99 திட்ட விவரங்கள் (Airtel Rs 99 Plan Details): இந்த திட்டம் மூலம் டேட்டா சலுகை மட்டுமே வழங்கப்படும். இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்தால், நீங்கள் ஒரு நாள் முழுவதும் (24 மணி நேரம்) அன்லிமிடெட் டேட்டாவை பயன்படுத்திக் கொள்ளலாம்.

இருப்பினும், ஃபேர் யூசேஜ் பாலிசி (Fair Usage Policy) அடிப்படையில், 30 ஜிபி அதிகபட்சமாக ஒதுக்கப்படும். ஆனால், இந்த 30 ஜிபிக்கு மேலும் அன்லிமிடெட் டேட்டாவை பயன்படுத்தலாம். அதாவது 30 ஜிபிக்கு மேல் பயன்படுத்தும் டேட்டாவுக்கு 64 கேபிபிஎஸ் வேகம் மட்டுமே கிடைக்கும்.

இந்த அன்லிமிடெட் டேட்டா திட்டத்தை ரீசார்ஜ் செய்ய வேண்டும் என்றால், ஏற்கனவே உங்களது ப்ரீபெய்ட் திட்டம் ஆக்டிவாக இருக்க வேண்டும். அதாவது, ஒரு மாதத்துக்கோ, மூன்று மாதத்துக்கோ ரீசார்ஜ் செய்திருக்கும் பட்சத்தில், கூடுதலாக இந்த டேட்டா திட்டத்தை பயன்படுத்திக் கொள்ள முடியும்.

அதே போல, இந்த திட்டத்தில் டேட்டா வேகம் அதிகரித்து வழங்கப்படுகிறது. ஆகவே, ஏர்டெல் 5ஜி ஏரியாவில் இல்லையென்றாலும், அதிவேக இன்டர்நெட்டை பயன்படுத்திக் கொள்ள முடியும். ஓடிடி (OTT), ஆன்லைன் கேமிங் (Online Gaming), வீடியோ டவுன்லோட் மற்றும் அப்லோட் போன்றவற்றுக்கு, இந்த அன்லிமிடெட் டேட்டா திட்டம் மிகுந்த பயனுள்ளதாக இருக்கும்.

ஏர்டெல்லில் ரூ.100 க்கும் கீழ் 5 டேட்டா திட்டங்கள் இருக்கின்றன. இதில் எந்த திட்டங்களிலும், இதுபோன்ற அன்லிமிடெட் டேட்டா வழங்கப்படவில்லை. இந்த நேரத்தில் அந்த டேட்டா திட்டங்கள் குறித்து தெரிந்து கொள்வது நல்லது. ரூ.19 டேட்டா திட்டத்தில் 1 ஜிபி டேட்டா கிடைக்கிறது.

இதற்கும் 24 மணி நேரம் வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது. ரூ.29 டேட்டா திட்டத்தில் 2 ஜிபி டேட்டா கிடைக்கிறது. இதற்கு ஒரு நாள் வேலிடிட்டி கிடைக்கிறது. ரூ.49 டேட்டா திட்டத்தில் 6 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இந்த டேட்டாவுக்கும் 24 மணி நேர வேலிடிட்டி மட்டுமே கொடுக்கப்படுகிறது.

ரூ.58 டேட்டா திட்டத்தில் 3 ஜிபி டேட்டா கிடைக்கிறது. இந்த டேட்டாவை உங்களது ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டி முடியும் வரை பயன்படுத்திக் கொள்ள முடியும். ரூ.65 திட்டத்தில் 4 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இந்த திட்டத்துக்கும் ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டி சலுகை கிடைக்கிறது. ரூ.98 டேட்டா திட்டத்தில் 5 ஜிபி டேட்டா கிடைக்கிறது.

இந்த திட்டத்தையும் ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டி முடியும் வரை பயன்படுத்தலாம். இந்த டேட்டா திட்டங்களை வைத்து பார்க்கும்போது, ரூ.100க்கும் கீழ் அதிகபட்சமாகவே 5 ஜிபி டேட்டா மட்டுமே கிடைக்கிறது. ஆனால், இப்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள ரூ.99 டேட்டா திட்டம் 30 ஜிபி டேட்டா வழங்குவது மட்டுமல்லாமல், அதற்கு பின்பும் குறைவான வேகத்தில் அன்லிமிடெட் டேட்டாவை வழங்குகிறது. ஆகவே, இது மிகுந்த பலன் கொண்ட திட்டம் என்பதில் சந்தேகமில்லை.

More from GizBot

Best Mobiles in India

English summary
Airtel Rs 99 Plan Comes With Unlimited Data One Day Validity 30GB FUP Here Data Pack Benefits
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X