Home
News

ஒரே ஒரு Airtel ரீசார்ஜ்.. 20 OTT சந்தா.. 84 நாட்கள் வேலிடிட்டி.. தினமும் 2ஜிபி டேட்டா.. வாய்ஸ் கால்கள்..

ஜியோ நிறுவனத்துக்கு போட்டி கொடுக்கும் வகையில் அவ்வப்போது ப்ரீபெய்ட் திட்டங்களில் சலுகைகளை வழங்க வருகிறது ஏர்டெல் (airtel) நிறுவனம். அதேபோல் இந்நிறுவனம் பட்ஜெட் விலை திட்டங்களில் அதிக நன்மைகளை வழங்குகிறது. எனவே தான் இந்நிறுவனத்தின் ப்ரீபெய்ட் திட்டங்களில் ரீசார்ஜ் செய்ய பலர் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.

சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது ரூ.1000-க்கு கீழ் 84 நாட்கள் வேலிடிட்டி மற்றும் அதிக ஓடிடி நன்மைகளை வழங்கும் ப்ரீபெய்ட் திட்டம் ஒன்றை வைத்துள்ளது ஏர்டெல். இங்கே அந்த திட்டத்தின் விலை மற்றும் நன்மைகளை சற்று விரிவாகப் பார்க்கலாம்.

ஒரே ஒரு Airtel ரீசார்ஜ்.. 20 OTT சந்தா.. 84 நாட்கள் வேலிடிட்டி..

ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.979 ப்ரீபெய்ட் திட்டம் (Airtel Rs 979 prepaid plan) ஆனது தினசரி 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. குறிப்பாக 84 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது இந்த அசத்தலான திட்டம். ஆகவே நீங்கள் இந்த ஏர்டெல் ரூ.979 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 168ஜிபி டேட்டா கிடைக்கும்.

ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே (airtel xstream play) சந்தா இந்த திட்டத்தில் கிடைக்கிறது. இதன் மூலம் சோனிலிவ் (SonyLIV), லயன்ஸ்கேட் பிளே (Liongates Play), ஈராஸ் நவ் (Eros Now) சன்நெக்ஸ்ட் (SunNXT), சாவ்பால் (Chaupal), ஆஹா (Aha), ஹோய்சோய் (Hoichoi), சோஷியல் ஸ்வாக் (Social Swag) போன்ற 20க்கும் மேற்பட்ட ஓடிடி சந்தாவை பெறமுடியும்.

அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) & ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) நன்மையை வழங்குகிறது இந்த ஏர்டெல் ரூ.979 ப்ரீபெய்ட் திட்டம். அதேபோல் இந்த திட்டத்தில் தினமும் 100 எஸ்எம்எஸ் நன்மை வழங்கப்படும். இதுதவிர பல்வேறு நன்மைகள் இந்த ஏர்டெல் திட்டத்தில் கிடைக்கிறது.

அதாவது அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data), rewards mini subscription, ப்ரீ ஹாலோடியூன்ஸ் (Free Hellotunes), பெர்ப்லெக்ஸிடி ப்ரோ ஏஐ (Perplexity Pro AI) உள்ளிட்ட நன்மைகளும் இந்த ஏர்டெல் திட்டத்தில் உள்ளது. ஒருவேளை 56 நாட்கள் வேலிடிட்டி எதிர்பார்க்கும் பயனர்கள் ஏர்டெல் ரூ.838 ப்ரீபெய்ட் திட்டத்தை தேர்வு செய்வது நல்லது.

ஏர்டெல் ரூ.838 ப்ரீபெய்ட்திட்டம் (Airtel Rs 838 prepaid Plan) ஆனது தினமும் 3ஜிபி டேட்டாவை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 56 நாட்கள் ஆகும். எனவே நீங்கள் இந்த ஏர்டெல் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 168ஜிபி டேட்டா கிடைக்கும்.

ஒரே ஒரு Airtel ரீசார்ஜ்.. 20 OTT சந்தா.. 84 நாட்கள் வேலிடிட்டி..

56 நாட்களுக்கு அமேசான் பிரைம் மெம்பர்ஷிப் (amazon prime membership) சந்தா வழங்குகிறது ரூ.838 திட்டம். இதுதவிர ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே (Airtel Xstream Play) சந்தாவும் இந்த திட்டத்தில் உள்ளது. குறிப்பாக இந்த எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே சந்தா மூலம் 20-க்கும் மேற்பட்ட ஓடிடி ஆப்ஸ்களை பயன்படுத்த முடியும்.

மேலும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை ஏர்டெல் ரூ.838 திட்டத்தில் வழங்கப்படுகிறது. தினமும் 100 எஸ்எம்எஸ், அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data), ப்ரீ ஹாலோடியூன்ஸ் (Free Hellotunes), பெர்ப்லெக்ஸிடி ப்ரோ ஏஐ (Perplexity Pro AI) உள்ளிட்ட நன்மைகள் இதில் வழங்கப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Airtel Rs.979 prepaid plan offers 20 OTT subscriptions, 84 days validity and unlimited benefits
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X