Home
News

Airtel போட்ட போடு.. மாதாந்திரம் ரூ.326-க்கு 84 நாட்கள் வேலிடிட்டி.. 21+ ஓடிடி சந்தா.. அன்லிமிடெட் வாய்ஸ் கால்!

பார்தி ஏர்டெல் (Bharti Airtel) கஸ்டமர்கள் அறக்க பறக்கும் விதமாக டேட்டா மற்றும் ஓடிடி சலுகைகளை வாரி வழங்கும்படியான ப்ரீபெய்ட் திட்டம் (Prepaid Plan) களமிறங்கி இருக்கிறது. கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்கு வாய்ஸ் கால்கள் தொடங்கி அன்லிமிடெட் 5ஜி டேட்டா வரையில் எல்லா சலுகைகளையும் இந்த திட்டம் பேக் செய்து கொடுத்துள்ளது. மூன்று மாதங்களுக்கு ஒரு முறை ரீசார்ஜ் செய்யும் கஸ்டமர்களில் ஓடிடி மற்றும் டேட்டா அடிப்படையில் திட்டங்கள் தேடுவோருக்கு இந்த திட்டம் பக்கா தேர்வாக இருக்கும்.

ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio), பார்தி ஏர்டெல், வோடபோன் ஐடியா (Vodafone Idea) போன்ற முன்னணி டெலிகாம் (Telecom) நிறுவனங்களின் கட்டண உயர்வுக்கு பிறகு மாதாந்திர செலவு அதிகரித்துவிட்டது. இதனால், கூடுதல் சலுகைகளுடன் கிடைக்கும் 3 மாதங்கள் அல்லது அதற்கு மேல் வேலிடிட்டி கொண்ட திட்டங்களுக்கு கஸ்டமர்கள் முக்கியத்துவம் கொடுக்கின்றனர்.

Airtel போட்ட போடு.. மாதாந்திரம் ரூ.326-க்கு 84 நாட்கள் வேலிடிட்டி!

ஆகவே, இப்போது ஏர்டெல்லிலும் 3 மாதங்கள் வேலிடிட்டி கொண்ட திட்டங்களுக்கு மவுசு ஏற்பட்டுள்ளது. இவர்களில் அதிகப்படியான டேட்டா மற்றும் ஓடிடி ஆப்களின் சந்தாவை விரும்பும் கஸ்டமர்கள் ஏர்டெல் ரூ 979 திட்டத்துக்கே செல்கின்றனர். ஏனென்றால், 5ஜி டேட்டா மற்றும் 22 ஓடிடி ஆப்களின் சந்தாவை இந்த ப்ரீபெய்ட் திட்டம் கொடுத்து மிரள விட்டுள்ளது.

ஏர்டெல் ரூ 979 திட்ட விவரங்கள் (Airtel Rs 979 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் எல்லாமே அதிகப்படியான சலுகைகளாகவே இருக்கின்றன. 84 நாட்களுக்கு வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது. இந்த நாட்களில் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்களை (Roaming Voice Calls) ஏர்டெல் கஸ்டமர்கள் செய்து கொள்ளலாம்.

அதேபோல தினசரிக்கு 2 ஜிபி டேட்டாவை பயன்படுத்த முடியும். ஆகவே, 84 நாட்களுக்கு மொத்தமாக 168 ஜிபி டேட்டா கிடைக்கிறது. மேலும், 64 கேபிபிஎஸ் வேகத்தில் போஸ்ட் டேட்டா கிடைக்கிறது. இதை 2 ஜிபி தினசரி டேட்டா முடிந்த பிறகு பயன்படுத்தலாம். இதுபோக ஏர்டெல் அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Airtel Unlimited 5G Data) சலுகை கிடைக்கிறது.

இந்த டேட்டாவை 5ஜி சேவை கிடைக்கும் பகுதிகளில் பயன்படுத்தி கொள்ளலாம். இந்த சலுகைகளுக்கு அடுத்தப்படியாக ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் பிளே பிரீமியம் (Airtel Xstream Play Premium) சந்தா கிடைக்கிறது. ஆகவே, 22 ஓடிடி ஆப்களை ஏர்டெல் கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். இதில் சோனிலிவ் (Sony LIV), சன்நெக்ஸ்ட் (Sun NXT) சந்தா வருகிறது.

மேலும், லயன்ஸ்கேட் பிளே (Lionsgate Play), சாவ்பால் (Chaupal), எபிக்ஆன் (EPICon), டாகுபே (Docubay), பிளேஃபிளக்ஸ் (Playflix), ஆஹா (Aha), ஸ்டேஜ் (Stage), கன்ச்சா லங்கா (Kanccha Lannka), ஹோய்சோய் (Hoichoi), ஃபேன்கோட் (FanCode), மனோரமாமேக்ஸ் (ManoramaMax), ஷீமாரூமீ (ShemarooMe), ஆல்ட்பாலாஜி (Alt Balaji), அல்ட்ரா (Ultra), ஈராஸ்நவ் (ErosNow) கிடைக்கிறது.

நம்மஃபிளிக்ஸ் (Namma Flix), ஹங்கமா (Hungama), கிளிக் (Klikk), ராஜ் டிஜிட்டல் (Raj Digital), ஷார்ட்ஸ் டிவி (Shorts TV) மற்றும் டாலிவுட் பிளே (Dollywood Play) ஆகிய ஆப்களின் சந்தாவையும் பயன்படுத்தலாம். இதுபோக ஏர்டெல்லின் பிரத்யேகமான ரிவார்ட்ஸ்மினி சந்தா (Rewards Mini Subscription) மற்றும் விங்க் மியூசிக் (Wynk Music) சந்தா கிடைக்கிறது.

மேலும், அப்பல்லோ 24/7 சர்க்கிள் மெம்பர்ஷிப் (Apollo 24/7 Circle Membership) கிடைக்கிறது. இந்த மெம்பர்ஷிப்பை மூன்று மாதங்களுக்கு பயன்படுத்தி கொள்ளலாம். அதேபோல ப்ரீ ஹலோ டியூன்ஸ் (Free Hello Tunes) சலுகை கிடைக்கிறது. ஆகவே, மாதத்துக்கு வெறும் ரூ.326 செலவில் மேற்கண்ட அனைத்து சலுகைகளையும் பெற்று கொள்ளலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Airtel Rs 979 Plan With Unlimited Voice Calls 2GB Daily Data 22 OTT Subscriptions 84 Days Validity
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X