அடடா.. இந்த Airtel ரீசார்ஜ் போதுமே.. 84 நாட்களுக்கு வேலிடிட்டி.. 2 ஜிபி டேட்டா.. வாய்ஸ் கால்கள்.. ஓடிடி சந்தா!
ஏர்டெல் கஸ்டமர்களுக்கு 84 நாட்கள் முழுவதும் அன்லிமிடெட் டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மட்டுமல்லாமல், 22 ஓடிடி ஆப்களும் மேலான சந்தா போன்ற சலுகைகளை ரூ.979 ப்ரீபெய்ட் திட்டம் கொடுக்கிறது. இதில் டேட்டா, வாய்ஸ், எஸ்எம்எஸ் மட்டுமல்லாமல், ஏஐ சாட்பாட் சந்தா ரிவார்ட்ஸ்மினி சந்தா போன்ற கூடுதல் சலுகைகளும் வாரி வழங்கப்பட்டு இருக்கின்றன. இந்த ஏர்டெல் ப்ரீபெய்ட் திட்டத்தின் முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
இந்த ப்ரீபெய்ட் திட்டத்தின் ஓடிடி சந்தாவே கஸ்டமர்களுக்கு அதிகப்படியாக இருக்கும். ஏனென்றால், ஏர்டெல்லில் மட்டுமே கிடைக்கும் எக்ஸ்ட்ரீம் பிளே பிரீமியம் சந்தா இந்த திட்டத்துக்கு கிடைக்கிறது. இதில் சோனிலிவ் (SonyLIV), லயன்ஸ்கேட் பிளே (Liongates Play), ஈராஸ் நவ் (Eros Now) சன்நெக்ஸ்ட் (SunNXT) உள்ளிட்ட ஓடிடி ஆப்கள் பயன்படுத்த கிடைக்கின்றன.

இதுபோக சாவ்பால் (Chaupal), ஆஹா (Aha), ஹோய்சோய் (Hoichoi), சோஷியல் ஸ்வாக் (Social Swag), ராஜ் டிஜிட்டல் டிவி (Raj Digital TV), டாகுபே (Docubay), டாலிவுட்பிளே (Dollywood Play), அல்ட்ரா (Ultra), சாவ்பால் (Chaupal), கான்ச்சா லங்கா (Kanccha Lanka), கிளிக் (Klikk), ஷார்ட்ஸ் டிவி (Shorts TV), ஹங்கமா (Hungama), மனோரமா மேக்ஸ் (Manorama Max) ஆப்களின் சந்தாவும் கிடைக்கிறது.
மேலும், லயன்ஸ்கேட் பிளே (Lionsgate Play), எபிக் ஆன் (Epic On), ஃபேன் கோட் (Fan Code), டாலிவுட்பிளே (Dollywood Play) மற்றும் நம்ம ஃபிளிக்ஸ் (Namma Flix) ஆகிய ஓடிடி ஆப்களையும் இந்த எக்ஸ்ட்ரீம் பிளே பிரீமியம் பண்டிலின் கீழ் பயன்படுத்தி கொள்ள முடியும். இந்த எக்ஸ்ட்ரீம் பிளே பிரீமியம் ஆப், மொபைல் மற்றும் டிவிகளிலும் பயன்படுத்த கிடைக்கிறது.
இந்த ஓடிடி சந்தாவுக்கு ஏற்ப டேட்டா சலுகைகளை பெற்று கொள்ள முடிகிறது. அதாவது, 22 ஓடிடிகளுக்கும் மேலாக கிடைத்தால், அதற்கு அன்லிமிடெட் டேட்டா இருந்தால் மட்டுமே கட்டுப்படியாகும். ஆகவே, இதில் அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) சலுகை கொடுக்கப்பட்டு இருக்கிறது. இதுபோக நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டாவும் கிடைக்கிறது.
இந்த 2 ஜிபி டேட்டா 4ஜி வேகத்தில் கொடுக்கப்படும். இந்த டேட்டாவுக்கு பிறகும் 64 கேபிபிஎஸ் வேகத்தில் தொடர்ந்து டேட்டா கிடைக்கும். ஆகவே, ஓடிடிக்கும் டேட்டாவுக்கும் இந்த திட்டத்தில் எந்த குறையும் இருக்காது. இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கு 84 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது, ஆகவே, இந்த நாட்களில் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local) & எஸ்டிடி (STD) கால்கள் வருகிறது.
இதுபோக ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகையும் கொடுக்கப்படுகிறது. மேலும், வழக்கம்போல நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ் சலுகைகை இந்த திட்டம் கொடுத்துள்ளது. இந்த சலுகைகள் போக ரிவார்ட்ஸ்மினி சந்தா (Rewards Mini Subscription) கொடுக்கப்பட்டு இருக்கிறது. 30 நாட்களுக்கு ஒருமுறை மாற்றும்படி ப்ரீ ஹலோ டியூன்ஸ் (Free Hello Tunes) கிடைக்கிறது.
கால்கள் மற்றும் எஸ்எம்எஸ்களில் ஸ்பேம்களை அலெர்ட் செய்ய கூடுதல் கட்டணம் லைவ் அலெர்ட் சலுகை கிடைக்கிறது. இறுதியாக அண்மையில் சேர்க்கப்பட்ட பெர்ப்லெக்ஸிடி ப்ரோ ஏஐ (Perplexity Pro AI) சந்தாவும் இந்த திட்டத்துக்கு கொடுக்கப்படுகிறது. ஆனால், இதற்கு 12 மாதங்கள் சந்தா கிடைக்கும். ஆகவே, திட்டத்தின் வேலிடிட்டி முடிந்தவுடன் அடுத்த திட்டத்துக்கு செல்லுங்கள்.


Click it and Unblock the Notifications








