3 மாதங்களுக்கு ரீசார்ஜ் கவலை இல்லை.. 2 ஜிபி டேட்டா.. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள்.. இதை ரீசார்ஜ் பண்ணுங்க!
ஏர்டெல் சிம் கார்டு வைத்திருக்கும் கஸ்டமர்களாக இருந்தால், அடுத்த மூன்று மாதங்களுக்கு ரீசார்ஜ் கவலை இல்லாமல் இருக்க ரூ.979 விலை கொண்ட திட்டத்தை கண்ணை மூடிக்கொண்டு ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். வாய்ஸ் கால்கள், டேட்டா, எஸ்எம்எஸ் போக ஓடிடி சந்தாவும் கிடைக்கும்.
ஏர்டெல் ரூ.979 திட்ட விவரங்கள் (Airtel Rs 979 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் டேட்டா சலுகைகளுக்கு பஞ்சம் இருக்காது. ஏனென்றால், நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா மற்றும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited G Data) கிடைக்கிறது. ஆகவே, 4ஜி கஸ்டமர்களாக 2 ஜிபி டேட்டாவை பயன்படுத்தி கொள்ளலாம்.

கூடுதலாக 64 கேபிபிஎஸ் வேகத்தில் போஸ்ட் டேட்டா கிடைக்கும். 5ஜி கஸ்டமர்களாக இருந்தால், முற்றிலும் இலவமாக அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை பயன்படுத்தி கொள்ளலாம். இந்த டேட்டாவுக்கு ஏற்ப ஓடிடி சந்தாவை இந்த திட்டம் கொடுக்கிறது. ஆகவே, ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பிளே (Airtel Xstream Play) சந்தா கிடைக்கிறது.
இதில் சோனிவில் (SonyLIV) உள்ளிட்ட 20+ ஓடிடி ஆப்களின் சந்தாவை பயன்படுத்தி கொள்ளலாம். இதில் லயன்ஸ்கேட் பிளே (Lionsgate Play), ஆஹா (Aha), சாவ்பால் (Chaupal), சன்நெக்ஸ்ட் (SunNxt) உள்ளிட்ட ஓடிடி ஆப்களையும் பயன்படுத்தி கொள்ளலாம். இதை ஒரே ஒடிடி ஆப்பின் கீழ் பயன்படுத்த முடியும்.
இதை ஏர்டெல் மொபைல் நம்பரை வைத்து லாகின் செய்து கொள்ளலாம். ஆகவே, ஓடிடி மற்றும் அதற்கு ஏற்ப அன்லிமிடெட் டேட்டாவை இந்த திட்டத்தில் பயன்படுத்தி கொள்ளலாம். டேட்டாவுக்கு அடுத்து அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) கிடைக்கிறது.
நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ் சலுகையையும் இந்த ப்ரீபெய்ட் திட்டம் கொடுத்துள்ளது. இந்த சலுகைகளே பட்டையை கிளப்பும்படி இருக்கின்றன. ஆனால், இந்த திட்டத்தில் கூடுதலாக பல்வேறு சலுகைகள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. முதலில் அடோப் எக்ஸ்பிரஸ் பிரீமியம் (Adobe Express Premium) சந்தா இருக்கிறது. இதை 12 மாதங்களுக்கு பயன்படுத்தலாம்.
இந்த சந்தாவை தனியாக பெற்றால், ரூ.4,000 செலவு செய்ய வேண்டும். இருப்பினும், முற்றிலும் இலவமாக இந்த திட்டத்தில் கொடுக்கப்படுகிறது. மேலும், வழக்கமாக கிடைக்கும் ப்ரீ ஹெலே டியூன்ஸ் (Free Hello Tunes) மற்றும் ஸ்பேம் ஃபில்டர்கள் கிடைக்கின்றன. இதில் 30 நாட்களுக்கு 1 முறை மட்டுமே டியூனை மாற்ற முடியும்.
இதைவிட கம்மியான விலைக்கு அமேசான் பிரைம் லைட் சந்தாவுடன் மற்றொரு திட்டம் இருக்கிறது. ஆனால், இதில் 56 நாட்கள் மட்டுமே வேலிடிட்டி கிடைக்கும். இருப்பினும், ஓடிடி சலுகைகள் வாரி வழங்கப்பட்டு இருக்கிறது. தினசரி டேட்டாவும் அதிகப்படியாக கிடைக்கும். 5ஜி கஸ்டமர்களாக இல்லாமல் போனாலும், அதிக டேட்டாவை பயன்படுத்தலாம்.
ஏர்டெல் ரூ.838 திட்ட விவரங்கள் (Airtel Rs 838 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தை பெறும் கஸ்டமர்களுக்கு 56 நாட்கள் மட்டுமே வேலிடிட்டி கிடைக்கும். இந்த நாட்கள் முழுவதும் அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை கஸ்டமர்கள் பெற்று கொள்ள முடியும். நாளொன்றுக்கு 3 ஜிபி டேட்டாவும் கிடைக்கும். அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி, ரோமிங் கால்கள் கிடைக்கும்.
நாளொன்ருக்கு 100 எஸ்எம்எஸ்கள் கிடைக்கும். மேலும், அமேசான் பிரைம் லைட் சந்தா 56 நாட்களுக்கு கொடுக்கப்படும். 20+ ஓடிடி ஆப்களுடன் ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பிளே சந்தா கிடைக்கும். ப்ரீ ஹெலோ டியூன்ஸ் மற்றும் ஸ்பேம் பில்டர்கள் கிடைக்கிறது. அடோப் எக்ஸ்பிரஸ் பிரீமியம் சந்தாவும் 12 மாதங்களுக்கு கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications