Home
News

அறக்க பறக்க ரீசார்ஜ்.. அடுத்த 84 நாட்கள்.. லோக்கல், எஸ்டிடி கால்கள்.. 2 ஜிபி டேட்டா.. உடனே இதை பண்ணிடுங்க!

அடுத்த 84 நாட்களுக்கு அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி கால்கள், 2 ஜிபி தினசரி டேட்டா, அன்லிமிடெட் 5ஜி டேட்டா, ஓடிடி சந்தா உள்ளிட்ட சலுகைகளுடன் பெஸ்ட் ஏர்டெல் திட்டம் வேண்டுமானால், இப்போது பார்க்க இருக்கும் திட்டத்தை கண்ணை மூடிக்கொண்டு ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். கூடுதல் சலுகைகளிலும் இந்த திட்டம் பட்டையை கிளப்பி இருக்கிறது.

ஏர்டெல்லில் 84 நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டங்களில் ரூ.979 திட்டம் அதிகமாக ரீசார்ஜ் செய்யப்பட்டு வருகிறது. ஏனென்றால், வழக்கமாக கிடைக்கும் டேட்டா, வாய்ஸ், எஸ்எம்எஸ் சலுகைகளுடன் கூடுதலாக ஓடிடி பண்டில், 5ஜி டேட்டா, அடோப் எக்ஸ்பிரஸ் பிரீமியம் உள்ளிட்ட சலுகைகளும் கொடுக்கப்பட்டு உள்ளன. ரிவார்ட்ஸ்மினி சலுகையும் இதற்கு கிடைக்கிறது.

அறக்க பறக்க ரீசார்ஜ்.. அடுத்த 84 நாட்கள்.. லோக்கல், எஸ்டிடி கால்கள்!

ஏர்டெல் ரூ.979 திட்டம்

அன்லிமிடெட் லோக்கல் & எஸ்டிடி கால்கள் (Unlimited Local & STD Calls) மற்றும் நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்களை இந்த திட்டம் கொடுத்து உள்ளது. மேலும், நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா (Daily 2GB Data) மற்றும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) சலுகைகள் வருகின்றன.

மேலும், 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா (Post Data) வழங்கப்பட்டு உள்ளது. இந்த டேட்டாவை 2 ஜிபி டேட்டா முடிந்த பிறகு பயன்படுத்தி கொள்ளலாம். இது 4ஜி கஸ்டமர்களுக்கு பொருந்த கூடிய டேட்டா சலுகையாக உள்ளது. அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை பெற்றால், போஸ்ட் டேட்டா மற்றும் தினசரி டேட்டா லிமிட் இல்லாமல், பயன்படுத்தி கொள்ளலாம்.

ஆகவே, டேட்டாவில் இந்த திட்டம் பட்டையை கிளப்பி உள்ளது. இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கு 84 நாட்கள் வேலிடிட்டி உள்ளது. இந்த நாட்கள் வரையில் மேற்கண்ட வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ், தினசரி டேட்டா மற்றும் அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை பயன்படுத்தலாம். அதேபோல 84 நாட்களுக்கு ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பிளே (Airtel Xstream Play) சந்தா கொடுக்கப்பட்டு உள்ளது.

ஓடிடி ஆப்கள்

இது ப்ரீ வெர்ஷன் கிடையாது. ஆகவே, சோனிலிவ் (SonyLIV), சன்நெக்ஸ்ட் (SunNxt), லயன்ஸ்கேட் பிளே (Liongate Play), ஆஹா (Aha), சாவ்பால் (Chaupal), ஹோய்சோய் (HoiChoi) உள்ளிட்ட ஓடிடி ஆப்களை அணுகலாம். இப்படி 20+ ஓடிடி ஆப்களின் சந்தா 84 நாட்களுக்கு கிடைக்கிறது. ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பிளே ஆப் டவுன்லோட் செய்தால், அந்த ஒரே ஆப்பில் இவற்றை பயன்படுத்தலாம்.

கூடுதல் சலுகைகள்

வாய்ஸ், டேட்டா, எஸ்எம்எஸ் மற்றும் ஓடிடி சலுகைகளுக்கு அடுத்து முக்கிய சலுகையாக அடோப் எக்ஸ்பிரஸ் பிரீமியம் (Adobe Express Premium) சந்தா கிடைக்கிறது. ஆனால், இது 12 மாதங்களுக்கு பயன்படுத்த கிடைக்கிறது. ஆகவே, 84 நாட்கள் வேலிடிட்டி முடிந்தாலும், தொடர்ந்து அடோப் எக்ஸ்பிரஸ் பிரீமியம் சந்தாவை ப்ரீபெய்ட் கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.

ரிவார்ட்ஸ்மினி சந்தாவை (RewardsMini Subscription) சந்தாவை இந்த திட்டம் கொண்டுள்ளது. ஆகவே, மாதத்துக்கு ரூ.80 மதிப்பில் கேஷ்பேக் பெற்று கொள்ளலாம். மேலும், வழக்கமாக கிடைக்கும் ப்ரீ ஹேலோ டியூன்ஸ் (Free Hello Tunes), இன்கம்மிங் வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ்களில் ஸ்பேம் டிடெக்சன் கொடுக்கப்பட்டு உள்ளது. இவ்வளவு சலுகைகளும் 84 நாட்களுக்கு கொடுக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Airtel Rs 979 Plan Unlimited Local STD Roaming Calls Unlimited 5G Data For 84 Days
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X