Home
News

Jio-க்கு காரணம் தேவை.. Airtel-க்கு காரணமே தேவையில்லை.. 10GB இலவச டேட்டா.. அட்டகாச நன்மையை வழங்கி அசத்தல்..

ஜியோ (Jio) நிறுவனம், அதன் 8வது ஆண்டு சிறப்பு கொண்டாட்டத்தை முன்னிட்டு அதன் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் பயனர்களுக்கு பல சலுகைகள் அடங்கிய நன்மைகளை இலவசமாக வழங்கி அசத்தியது. செப்டம்பர் 5, 2024 ஆம் தேதி முதல் துவங்கி செப்டம்பர் 10, 2024 ஆம் தேதி வரை 10GB டேட்டாவை இலவசமாக வழங்குவதாக ஜியோ அறிவித்தது. ஜியோ அதன் அனுவல் ஆஃபரை அறிவித்த அடுத்த நாளில் ஏர்டெல் நிறுவனம் அதன் சிறப்பு பண்டிகை கால கொண்டாட்ட நன்மையை அறிவித்துள்ளது. இப்போது ஜியோ மட்டுமல்ல ஏர்டெல் நிறுவனமும் கூட 10GB இலவச டேட்டாவை வழங்குகிறது.

ஜியோ நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக 10GB டேட்டா நன்மை, 10 OTT சேனல்களுக்கான அணுகல் இலவச அணுகல், ஸ்மோட்டோ கோல்டு மெம்பர்ஷிப்பிற்கான இலவச சந்தா போன்றவற்றை ஜியோ அதன் வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதாக அறிவித்தது. இந்த இலவசங்களை ஜியோ நிறுவனம் அதன் ஜியோ ரூ. 899 திட்டம், ஜியோ ரூ. 999 திட்டம் மற்றும் ஜியோ ரூ. 2599 திட்டத்திற்கு மேலான விலை கொண்ட திட்டங்களுக்கு மட்டும் வழங்குகிறது.

Jio-க்கு காரணம் தேவை.. Airtel-க்கு காரணமே தேவையில்லை.. 10GB ஃப்ரீ

Jio-க்கு காரணம் தேவை.. Airtel-க்கு காரணமே தேவையில்லை.. இலவச 10GB டேட்டா:

ஜியோ நிறுவனம் அதன் 8வது ஆண்டு விழாவை கொண்டாடும் நோக்கத்தில் அதன் வாடிக்கையாளர்களுக்கு இலவசங்களை வாரி வழங்கியது. ஆனால், ஏர்டெல் நிறுவனம் ஒரு படி மேலே சென்று, ஜியோவுக்கு காரணம் தேவை, ஆனால் எங்களுக்கு அப்படி எதுவும் தேவையில்லை. பண்டிகைக்கு முன்பாகவே பண்டிகை கால சிறப்பு சலுகை என்ற (Airtel festive offer on prepaid plans) பெயரில் நாங்களும் இலவசங்களை அள்ளி-அள்ளி வழங்குவோம் என்று நிரூபித்துள்ளது.

ஏர்டெல் (Airtel) நிறுவனம் இப்போது அதன் வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் இலவச டேட்டா நன்மை மற்றும் ஸ்பெஷல் வவுச்சர் நன்மைகளை வழங்க துவங்கியுள்ளது. இந்த இலவச நன்மைகளை பெற ஏர்டெல் பயனர்கள் ஏர்டெல் ரூ. 979 திட்டம், ஏர்டெல் ரூ. 1092 திட்டம் மற்றும் ஏர்டெல் ரூ. 3599 திட்டம் போன்ற திட்டங்களை குறிப்பிட்ட காலத்திற்குள் ரீசார்ஜ் செய்பவர்களுக்கு இலவசங்களை வழங்கும் என்று அறிவித்துள்ளது.

ஏர்டெல் நிறுவனத்தின் இந்த சிறப்பு பண்டிகை கால இலவச சலுகை, செப்டம்பர் 6, 2024 ஆம் தேதி முதல் துவங்கி, செப்டம்பர் 11, 2024 ஆம் தேதி வரை மட்டுமே பயன்படுத்த கிடைக்குமென்று ஏர்டெல் நிறுவனமும் அறிவித்துள்ளது. இந்த காலத்திற்குள் ஏர்டெல் ரூ. 979 திட்டம் (Airtel Rs 979 Plan), ஏர்டெல் ரூ. 1092 திட்டம் (Airtel Rs 1092 Plan) மற்றும் ஏர்டெல் ரூ. 3599 திட்டம் (Airtel Rs 3599 Plan) ரீசார்ஜ் செய்பவர்களுக்கு மட்டுமே கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

என்னென்ன இலவசங்களை இப்போது நீங்கள் பெறலாமா?

இந்த திட்டத்துடன் எல்லா பயனர்களுக்கும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேற்கூறிய மூன்று திட்டங்களும் தினசரி 2GB டேட்டா நன்மையுடன் வருகிறது. ஏர்டெல் ரூ. 979 திட்டம் மற்றும் ஏர்டெல் ரூ. 1092 திட்டம் 98 நாட்கள் செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் வருகிறது. ஏர்டெல் ரூ. 3599 திட்டம் 365 நாள் செல்லுபடியாகும் வேலிடிட்டியுடன் வருகிறது. இதில் ரூ. 1092 திட்டம் மட்டும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் நன்மையை வழங்குகிறது.

இது 3 மாத காலத்திற்கு செல்லுபடியாகும். இந்த ஏர்டெல் திட்டங்கள் உடன் கிடைக்கும் இலவச ஸ்பெஷல் நன்மையை பற்றி பேசுகையில், இது 22+ OTT நன்மையுடன் வருகிறது. இதில் Sony LIV, Lionsgate Play, Aha, Chaupal, Hoichoi, SunNxt மற்றும் பல சேனல்களுக்கான அணுகல் மற்றும் Xstream Premium சந்தா போன்றவற்றை வழங்குகிறது.

இத்துடன் கூடுதலாக 10GB எக்ஸ்ட்ரா டேட்டா கூப்பன் வழங்கப்படுகிறது. இது 28 நாட்களுக்கு செல்லுபடியாகும். கூடுதலாக, 3 மாத Apollo 24|7 Circle சந்தா, ரிவர்ட்ஸ் மினி சந்தா, இலவச ஹெலோ டியூன்ஸ் போன்றவற்றையும் ஏர்டெல் வழங்குகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Airtel Rs 979 Plan Rs 1092 Plan and Rs 3599 Plan Gets Free 10GB Data Benefits In India
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X