Home
News

அடேங்கப்பா வேலை செய்த Airtel.. ஒரே பிளான் 22 இலவச OTT சேனல்.. 84 நாளுக்கு தினமும் 2GB டேட்டா.. எந்த திட்டம்?

அடேங்கப்பா! என்ட்ரி வியக்கும் வகையில், ஏர்டெல் (Airtel) நிறுவனம் இப்போது இந்தியாவில் புதிய ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. உங்கள் கையில் உள்ள ஸ்மார்ட்போனை (Smartphone) ஒரு குட்டி டிவியாக (TV) மாற்றும் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தை நிறுவனம் இப்போது அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய ஏர்டெல் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம் (Airtel Prepaid Recharge Plan) ஒன்றல்ல, இரண்டல்ல மொத்தம் 22 வகையான OTT சேனல் சந்தாவை இலவசமாக வழங்குகிறது. இந்த திட்டம் 84 நாட்களுக்கு தினமும் 2GB டேட்டாவை தடையில்லாமல் வழங்குவதோடு, இன்னும் ஏராளமான நன்மைகளை வழங்குகிறது.

இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான பாரதி ஏர்டெல் நிறுவனம், இப்போது மக்கள் ஈர்க்கும் வகையில் ஒரு அட்டகாசமான மற்றும் ஆடம்பரமான நன்மைகளை தொகுத்து ஒரே திட்டத்தில் வழங்கும் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் பிளானை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய திட்டம் ஏர்டெல் ரூ. 979 திட்டம் (Airtel Rs 979 Plan) என்ற பெயருடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அடேங்கப்பா வேலை செய்த Airtel.. ஒரே பிளான் 22 இலவச OTT சேனல்..

ஏர்டெல் ரூ. 979 திட்டம் (Airtel Rs 979 Plan):
இந்த புதிய ஏர்டெல் ரூ. 979 திட்டம் (Airtel Rs 979 Plan) திட்டம் மொத்தமாக 84 நாட்களுக்கு செல்லுபடியாகும் ஒரு நீண்ட கால திட்டமாகும். ஏறக்குறைய, இந்த திட்டம் உங்களுக்கு 3 மாதங்களுக்கான வேலிடிட்டி காலத்தை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த 84 நாள் காலத்திற்குள் உங்களுக்கு முழுமையான அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் நன்மையை ஏர்டெல் நிறுவனம் வழங்குகிறது.

இத்துடன், இந்த திட்டம் தினசரி செல்லுபடியாகும் 2GB டேட்டா நன்மையை வழங்குகிறது. இதன் மூலம் உங்களுக்கு மொத்தமாக 168GB டேட்டா கிடைக்கிறது. 2GB டேட்டா போதாதே என்று நினைப்பவர்களுக்கு, ஏர்டெல் நிறுவனம் கூடுதல் நன்மையை இத்திட்டத்துடன் வழங்குகிறது. அது தான், ஏர்டெல்லின் அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G data) நன்மை. உங்கள் ஏரியாவில் ஏர்டெல் 5ஜி (Airtel 5G) அணுக கிடைக்கிறது என்றால் இந்த நன்மை உங்களுக்கானது.

அடேங்கப்பா! ஒரே பிளான் 22 இலவச OTT சேனல்.. Airtel 84 நாளுக்கு தினமும் 2GB டேட்டா:

உங்களிடம் 5ஜி மொபைல் இருக்கிறதென்றால், இலவசமாக இந்த அன்லிமிடெட் டேட்டாவை நீங்கள் அனுபவிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திட்டத்தின் மற்றொரு சிறப்பான நன்மை என்றால், இத்துடன் இலவசமாக கிடைக்கும் 22 வகையான வெவ்வேறு OTT சேனல்களுக்கான சந்தா தான் என்று கூட நாம் கூறலாம். OTT சந்தாவை இப்போது மக்கள் பெரியளவில் பயன்படுத்துகிறார்கள் என்பதால், ஏர்டெல் இத்தகைய நன்மையை இத்திட்டத்துடன் இணைத்துள்ளது.

இந்த 22 வகையான OTT சேனைகளில் Sony LIV, Lionsgate Play, Aha, Chaupal, Hoichoi, and SunNxt போன்ற உள்ளடக்கங்கள் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரே கல்லில் மூன்று மாங்காய் என்பது போல, இந்த திட்டம் ஒரே பிளானில் அன்லிமிடெட் வாய்ஸ் கால், அன்லிமிடெட் டேட்டா மற்றும் 22 வகையான OTT சேனல் நன்மைகளை வழங்குகிறது. உண்மையில் இதுவொரு பெஸ்ட் எண்டெர்டைன்மெண்ட் திட்டமாக திகழ்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Airtel Rs 979 Plan With 22 OTT Free Channel Daily 2GB Data Unlimited 5G Data and Voice Calls For 84 Days
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X