ஏர்டெல் ரூ.97-திட்டத்தில் 2ஜிபி டேட்டா: வேலிடிட்டி எவ்வளவு நாள் தெரியுமா?
ஏர்டெல் நிறுவனம் தொடர்ந்து பல்வேறு புதிய சலுகைகள் மற்றும் திட்டங்களை அறிவித்த வண்ணம் உள்ளது, அந்த வகையில் இன்று அந்நிறுவனம் ரூ.97-திட்டத்தில் புதிய சலுகைகளை அறிவித்துள்ளது, கண்டிப்பாக இந்த திட்டத்திற்கு அதிக வரவேற்பு
இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அன்லிமிட்டெட் வாய்ஸ் கால்
அதன்படி ஏர்டெல் ரூ.97-திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு 2ஜிபி டேட்டா 14நாட்களுக்கு வழங்கப்படுகிறது, இத்துடன் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவையும் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தெலுங்கான, கர்நாடகா
இந்த புதிய திட்டம் முதற்கட்டமாக ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலுங்கான, கர்நாடகா உள்ளிட்ட வட்டாரங்களில் மட்டும் வழங்கப்படுகிறது. விரைவில் அனைத்து இடங்களுக்கு இந்த சலுகை கிடைக்கும். மேலும் இந்நிறுவனம் இதற்குமுன்பு தமிழகத்திற்கு அறிமுகம் செய்த சிறப்பு ரீசார்ஜ் திட்டங்களைப் பார்ப்போம்.

ஏர்டெல் ரூ.178 பிரீபெய்ட் திட்டம்:
ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.178 பிரீபெய்ட் திட்டத்தில் அன்லிமிடேட் கால் அழைப்புகள் வழங்கப்படுகிறது, குறிப்பாக இந்த திட்டத்தை
28நாட்கள் பயன்படுத்த முடியம். மேலும் 1ஜிபி டேட்டா, 100எஸ்எம்எஸ்,ரோமிங் போன்ற சலுகைகளும் இந்த திட்டத்தில் கிடைக்கும்.

ஏர்டெல் ரூ.495 திட்டம்:
ஏர்டெல் ரூ.495 திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு தினசரி 1.4ஜிபி டேட்டா வீதம் 84நாட்களுக்கு வழங்கப்படுகிறது, பின்பு இலவச கால் அழைப்புகள், 100எஸ்எம்எஸ் போன்ற சலுகைகளும் இந்த திட்டத்தில் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ரூ.597 ப்ரீபெய்ட் திட்டம்:
ஏர்டெல் வழங்கும், இந்த ரூ.597 ப்ரீபெய்ட் திட்டம் FUP வரம்பு இல்லாமல் இந்தியாவுக்குள் அன்லிமிடெட் உள்ளூர், எஸ்டிடி மற்றும் தேசிய
ரோமிங் அழைப்புகளை வழங்குகிறது. இத்துடன் மொத்தமாக இத்திட்டத்தில் 6 ஜிபி டேட்டா சேவையும் வழங்கப்பட்டுள்ளது. இந்த
ப்ரீபெய்ட் திட்டத்துடன் வாடிக்கையாளர்களுக்கு ஒவ்வொரு மாதமும் 300 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது, ஒவ்வொரு 28 நாட்களுக்கும்
எஸ்.எம்.எஸ் சேவை புதுப்பிக்கப்படும். ஏர்டெல் நிறுவனம் வழங்கும் இந்தத் திட்டம் 336 நாட்கள் வேலிடிட்டியுடன் ஏர்டெல் பயனர்கள் ஏர்டெல் டிவி ஆப் மூலம் நேரடி லைவ் டி.வி. மற்றும் உள்ளடக்கப் பயன்பாட்டினை இலவசமாகப் பெறலாம்


Click it and Unblock the Notifications