Just In
- 8 hrs ago
மூன்று அதிநவீன ஸ்மார்ட்வாட்ச் மாடல்களை கம்மி விலையில் இறக்கிவிட்ட Fire Boltt.!
- 11 hrs ago
அமேசானில் வேலை வீட்டில் இருந்தே வருமானமா? இங்க வாங்க தம்பி.! கொத்தாக தூக்கிய போலீஸ்!
- 11 hrs ago
ஆதார் கார்ட் பயனர்கள் அனைவருக்கும் இது கட்டாயம்! UIDAI வெளியிட்ட புது அறிவிப்பு.! என்ன தெரியுமா?
- 12 hrs ago
64எம்பி ரியர் கேமரா, சூப்பர் பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் பட்டைய கிளப்பும் iQOO போன்: அறிமுக தேதி இதுதான்!
Don't Miss
- Movies
சூர்யா 42 படத்தின் தலைப்பு இதுதானா.. ஒர்க்அவுட் ஆகுமா ‘வி’ சென்டிமெண்ட்!
- Sports
ஆரம்பமே இந்தியாவுக்கு நெருக்கடி கொடுத்த நியூசி.. உம்ரான் அதிரடி நீக்கம்.. பிளேயிங் லெவன் மாற்றம்
- News
எல்லையில் வாலாட்டும் சீனாவுக்கு செக்.. லடாக்கில் 135 கி.மீட்டருக்கு சாலைகள்.. இந்தியா பக்கா பிளான்
- Automobiles
ஹோண்டா ஆக்டிவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை இவ்ளோதானா! எப்புட்றா என மண்டையை சொறியும் போட்டி நிறுவனங்கள்!
- Finance
வருமான வரியை குறைக்க டிப்ஸ்.. கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்..!
- Lifestyle
எடையை வேகமாக குறைக்க பழச்சாறு குடிப்பவரா நீங்கள்? இனிமே அந்த தப்ப பண்ணாதீங்க...!
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
ஏர்டெல் ரூ.93/- பேக்: இனி 28 நாட்களுக்கு காம்போ (டேட்டா+வாய்ஸ்) நன்மைகளை வழங்கும்.!
கடந்த ஜனவரி 26 அன்று குடியரசு தின சலுகைகளின் ஒரு பகுதியாக முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ அதன் ரூ.98/- என்கிற ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கான திட்டத்தை அறிமுகம் செய்தது. அந்த அறிமுகமனது ஒரு மாத காலம் செல்லுபடியை கொண்டிருக்கும் மலிவான ரீசார்ஜ் திட்டங்கள் அதிக அளவில் வெளியாக வாவழிவகை செய்தது.

ஜியோவின் ரூ.98/- அறிமுகமான சில நாட்களுக்கு பின்னர், ஏர்டெல் அதன் ரூ.93/- திட்டத்தை திருத்தி ஜியோஇந்த 28 நாட்கள் என்ற செல்லுபடி மற்றும் அழைப்பு நன்மைகளை ஈடுகட்டியது. இப்போது இந்த திட்டம் மீண்டும் திருத்தியமைக்கப்பட்டுள்ளது. அதென்ன திருத்தம் என்பதை விரிவாக காண்போம்.

அழைப்பு நன்மைகளை விரும்பும் வாடிக்கையாளர்கள்
சமீபத்தில், ஏர்டெல் நிறுவனம் ஒரு நாளைக்கு 1ஜிபி அளவிலான தரவை மொத்தம் 28 நாட்களுக்கு வழங்கும் ரூ.149/- ரீசார்ஜ் பேக்கை அறிவித்து ஜியோவிற்கு பதிலடி கொடுத்ததும், இந்த இரண்டு திட்டங்களுமே - ஜியோ ரூ.98 மற்றும் ஏர்டெல் ரூ.93 - கணிசமாக தரவு நுகர்வு குறைக்கின்ற அழைப்பு நன்மைகளை விரும்பும் வாடிக்கையாளர்களை நோக்கமாக கொண்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

மொத்தமாக 1ஜிபி அளவிலான 3ஜி/4ஜி டேட்டா
ஏர்டெல் இப்போது அதன் ரூ.93/- ரீசார்ஜின் கீழ் அதன் வாடிக்கையாளர்களுக்கு 'வரம்பற்ற' உள்ளூர் மற்றும் எஸ்டிடி அழைப்புகளை வழங்குகிறது அதாவது ரோமிங் உட்பட இலவச அழைப்புகள், ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் செல்லுபடியாகும் காலத்திற்கும் மொத்தமாக 1ஜிபி அளவிலான 3ஜி/4ஜி டேட்டா வழங்கும்.

நிமிடத்திற்கு 10 பைசா வசூலிக்கப்படும்.!
'வரம்பற்ற' அழைப்பு நன்மையை பொறுத்தமட்டில், நாள் ஒன்றுக்கு 250 நிமிடங்கள் மற்றும் வாரத்திற்கு 1,000 நிமிடங்கள் மட்டுமே இருக்கும். தினசரி அல்லது வாராந்த வரம்புகள் தீர்ந்துவிட்டால், வாடிக்கையாளர்களிடம் இருந்து நிமிடத்திற்கு 10 பைசா வசூலிக்கப்படும்.

7-நாள் காலப்பகுதியில் அதிகபட்சமாக 100 எண்கள்.!
மேலும் பயனர்கள் ஒரு 7-நாள் காலப்பகுதியில் அதிகபட்சமாக 100 தனித்தனி இலக்கங்களை அழைக்க முடியும். இந்த வரம்பை மீறினாலும் நிமிடத்திற்கு 10 பைசாக்கள் வசூலிக்கக்ப்படும்.

அறிமுகமான போது 10 நாட்கள் என்கிற செல்லுபடி.!
ஏர்டெல் ரூ.93/- ஆனது அறிமுகமான போது 10 நாட்கள் என்கிற செல்லுபடியை கொண்டிருந்ததும், இப்போது 28 நாள் செல்லுபடியாகும் வண்ணம் கணிசமான அதிகரிப்பை பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது. நன்மைகளில் எந்த மாற்றமும் இல்லை, முன்பிருந்ததைப் போலவே இருக்கின்றன.


1ஜிபி கூடுதல் டேட்டா.!
மறுகையில் உள்ள முகேஷ் அம்பானியின் ஜியோ ரூ.98/- ஆனது 2ஜிபி அளவிலான 4ஜி டேட்டாவை, அதாவது நாட்டின் மிகப்பெரிய ஆபரேட்டர் ஆன ஏர்டெல் நிறுவனத்தை விட 1ஜிபி கூடுதல் டேட்டா வழங்குகிறது. இருப்பினும் ஜியோ ரீசார்ஜ் ஆனது வெறும் 300 தொகுக்கப்பட்ட எஸ்எம்எஸ்களை மட்டுமே வழங்க, ஏர்டெல் தினம் 100 எஸ்எம்எஸ்களை அதாவது மொத்தம் 2,800 எஸ்எம்எஸ்களை வழங்குகிறது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470