Home
News

அடுத்த 90 நாட்களுக்கு கவலை இருக்காது.. அன்லிமிடெட் சலுகைகள்.. இந்த Airtel திட்டத்தை மிஸ் பண்ணாதீங்க..

ஜியோ நிறுவனத்துக்குப் போட்டி கொடுக்கும் வகையில் ஏர்டெல் (Airtel) நிறுவனம் தொடர்ந்து பட்ஜெட் விலையில் அதிக சலுகைகள் வழங்கு ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. அதுவும் ஏர்டெல் நிறுவனம் கம்மி பட்ஜெட்டில் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு திட்டங்களுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது.

சரி இப்போது விஷயத்து வருவோம். அதாவது பட்ஜெட் விலையில் 90 நாட்கள் வேலிடிட்டி ப்ரீபெய்ட் திட்டம் ஒன்றை வைத்துள்ளது ஏர்டெல். இங்கே அந்த திட்டத்தின் நன்மைகளைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.929 ப்ரீபெய்ட் திட்டம் (Airtel Rs 929 prepaid plan) தான் 90 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தில் தினமும் 1.5ஜிபி டேட்டா கிடைக்கும். எனவே நீங்கள் ஏர்டெல் ரூ.929 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 135ஜிபி டேட்டா கிடைக்கும். மேலும் இந்த ஏர்டெல் திட்டத்தில் தினசரி 1.5ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 16கேபிபிஎஸ் ஆக குறையும்.

90 நாட்களுக்கு கவலை இருக்காது.. இந்த Airtel திட்டத்தை மிஸ் பண்ணாதீங்க

குறிப்பாக அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) & ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) நன்மையை வழங்குகிறது ஏர்டெல் ரூ.929 ப்ரீபெய்ட் திட்டம் மேலும் இந்த திட்டத்தில் தினமும் 100 எஸ்எம்எஸ் நன்மையும் வழங்கப்படுகிறது. இதுதவிர ஒரு அசத்தலான சலுகையும் இந்த திட்டத்தில் உள்ளன.

அதாவது பெர்ப்லெக்ஸிடி ப்ரோ ஏஐ (Perplexity Pro AI) நன்மை இந்த திட்டத்தில் வழங்கப்படுகிறது. குறிப்பாக இந்த சலுகை மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும். அதேபோல் 90 நாட்கள் வேலிடிட்டி மற்றும் அன்லிமிடெட் அழைப்பு நன்மைகள் மட்டும் எதிர்பார்க்கும் பயனர்கள் இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்வது நல்லது. ஒருவேளை அதிக டேட்டா மற்றும் ஓடிடி சந்தா தேவைப்படும் பயனர்கள் ஏர்டெல் ரூ.838 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்வது நல்லது. இப்போது இந்த திட்டத்தின் நன்மைகளைப் பார்க்கலாம்.

ஏர்டெல் ரூ.838 ப்ரீபெய்ட் திட்டம் (Airtel Rs 838 prepaid Plan) ஆனது தினமும் 3ஜிபி டேட்டாவை வழங்குகிறது. அதேபோல் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 56 நாட்கள் ஆகும். ஆகவே நீங்கள் இந்த ஏர்டெல் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 168ஜிபி டேட்டா கிடைக்கும். இந்த ஏர்டெல் திட்டத்தில் தினசரி 3ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64கேபிபிஎஸ் ஆக குறையும்.

90 நாட்களுக்கு கவலை இருக்காது.. இந்த Airtel திட்டத்தை மிஸ் பண்ணாதீங்க

56 நாட்களுக்கு அமேசான் பிரைம் மெம்பர்ஷிப் (amazon prime membership) சந்தா வழங்கும் ரூ.838 திட்டம். இதுதவிர ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே (Airtel Xstream Play) சந்தாவும் இந்த திட்டத்தில் உள்ளது. குறிப்பாக இந்த எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே சந்தா மூலம் 22 ஓடிடி ஆப்ஸ்களை பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை ஏர்டெல் ரூ.838 திட்டத்தில் வழங்கப்படுகிறது. தினமும் 100 எஸ்எம்எஸ், அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data), ப்ரீ ஹாலோடியூன்ஸ் (Free Hellotunes), பெர்ப்லெக்ஸிடி ப்ரோ ஏஐ (Perplexity Pro AI) உள்ளிட்ட நன்மைகள் இதில் வழங்கப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Airtel Rs.929 prepaid plan offers 90 days of validity and unlimited calls: check details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X