Home
News

இறங்கி அடித்த ஏர்டெல்.. மாதாந்திரம் ரூ.309-க்கு 90 நாட்கள்.. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள்.. 1.5 ஜிபி டேட்டா!

ஏர்டெல் (Airtel) கஸ்டமர்களுக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் (Unlimited Voice Calls), தினசரி டேட்டா (Daily Data), தினசரி எஸ்எம்எஸ் (Daily SMS) மட்டுமல்லாமல், 12 மாதங்களுக்கான பெர்ப்லெக்ஸிடி ப்ரோ ஏஐ சந்தாவும் இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் (Prepaid Plan) கிடைக்கிறது. 90 நாட்கள் வேலிடிட்டி கொண்ட இந்த திட்டத்தின் முழு சலுகைகளை இப்போது தெரிந்து கொள்ளலாம். அதேபோல இதே விலைக்கு அன்லிமிடெட் 5ஜி டேட்டாவுடன் கிடைக்கும் மற்றொரு ஏர்டெல் ப்ரீபெய்ட் திட்டத்தை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

ஏர்டெல் ரூ 929 திட்ட விவரங்கள் (Airtel Rs 929 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டம் மலிவான விலைக்கு 90 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கிறது. ஆகவே, தினசரி டேட்டா மட்டுமே கிடைக்கிறது. அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) கொடுக்கப்படவில்லை. நாளொன்றுக்கு 1.5 ஜிபி டேட்டாவை கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ள முடியும்.

இறங்கி அடித்த ஏர்டெல்.. மாதாந்திரம் ரூ.309-க்கு 90 நாட்கள்.. 1.5 ஜிபி!

90 நாட்களுக்கு மொத்தமாக 135 ஜிபி டேட்டாவை பெற்று கொள்ளலாம். மேலும், 1.5 ஜிபி டேட்டாவுக்கு பிறகும் 64 கேபிபிஎஸ் வேகத்தில் போஸ்ட் டேட்டா தொடர்ந்து கொடுக்கப்படுகிறது. இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கு அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்களின் (Roaming Voice Calls) சலுகை கொடுக்கப்படுகிறது.

இந்த சலுகைகள் போக நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்களை அனுப்பி கொள்ளலாம். கூடுதல் சலுகைகளை பார்க்கையில், ப்ரீ ஹலோ டியூன்ஸ் (Free Hello Tunes) கிடைக்கிறது. ஆனால், 30 நாட்களுக்கு ஒரு டியூனை மட்டுமே பயன்படுத்த முடியும். மேலும், பெர்ப்லெக்ஸிடி ப்ரோ ஏஐ (Perplexity Pro AI) சந்தா கொடுக்கப்படுகிறது. இது 12 மாதங்களுக்கு கிடைக்கிறது.

ஸ்பேம் வாய்ஸ் கால்கள் மற்றும் ஸ்பேம் எஸ்எம்எஸ்களுக்கு டிடெக்ட் செய்து கொள்ளும்படி லைவ் அலெர்ட் சலுகை கொடுக்கப்படுகிறது. இந்த சலுகைகளை 90 நாட்களுக்கு கொடுக்கிறது. ஆகவே, மூன்று மாதங்களுக்கு ரீசார்ஜ் செய்ய வேண்டுமானால், இந்த திட்டத்துக்கு செல்லலாம். இதற்கான மாத செலவை கணக்கிட்டால் ரூ.309ஆக மட்டுமே இருக்கிறது.

ஒருவேளை இதே வேலிடிட்டியில் அன்லிமிடெட் 5ஜி டேட்டா மற்றும் ஓடிடி சலுகைகளும் வேண்டுமானால், ரூ.979 விலைக்கு மற்றொரு ஏர்டெல் திட்டம் இருக்கிறது. இந்த திட்டத்தில் 20+ ஓடிடி சலுகைகளை ஏர்டெல் கஸ்டமர்கள் பெற்று கொள்ளலாம். அதேபோல கூடுதல் சலுகைகள் முந்தைய திட்டத்தைவிட அதிகமாக கிடைக்கின்றன.

ஏர்டெல் ரூ 979 திட்ட விவரங்கள் (Airtel Rs 979 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் விலை கூடுதலாக இருக்கிறது. அதேபோல முந்தைய திட்டத்தைவிட வேலிடிட்டி குறைவாக கிடைக்கிறது. அதாவது, முந்தைய திட்டத்தில் 90 நாட்கள் வேலிடிட்டி கிடைத்தது. ஆனால், இதில் 84 நாட்களுக்கு மட்டுமே வேலிடிட்டி கிடைக்கிறது.

இருப்பினும், 84 நாட்கள் முழுவதும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா கிடைக்கிறது. அதேபோல நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா கொடுக்கப்படுகிறது. ஆகவே, 168 ஜிபி டேட்டாவை பெற்று கொள்ளலாம். இது முந்தைய திட்டத்தைவிட அதிக டேட்டா சலுகையாகும். அதேபோல இதில் ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பிளே பிரீமியம் சந்தா கொடுக்கப்பட்டு இருக்கிறது.

இந்த சந்தா மூலம் 20+ ஓடிடி ஆப்களை ஏர்டெல் கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். இந்த ஓடிடி ஆப்களுக்கும் 84 நாட்கள் மட்டுமே சந்தா கிடைக்கிறது. இதில் சோனிலிவ் (SonyLiv), லயன்ஸ்கேட் பிளே (Liongate Play), ஆஹா (Aha), சன்நெக்ஸ்ட் (SunNxt) போன்ற ஓடிடி ஆப்களின் சந்தாவும் கிடைக்கிறது. ரிவார்ஸ்ட் மினி சலுகைகளை இந்த திட்டம் கொடுக்கிறது.

மற்ற சலுகைகள் ஒரே மாதிரியாகவே இருக்கின்றன. ஆகவே, அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி, ரோமிங் வாய்ஸ் கால்கள், நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்கள், 12 மாதங்களுக்கு பெர்ப்லெக்ஸிடி ப்ரோ ஏஐ சந்தா மற்றும் ஸ்பேம் அலெர்ட் சலுகை கிடைக்கிறது. இந்த ப்ரீபெய்ட் திட்டங்கள் டேட்டா மற்றும் வேலிடிட்டி அடிப்படையில் மாறுபடுகின்றன.

More from GizBot

Best Mobiles in India

English summary
Airtel Rs 929 Plan With 90 Days Validity Unlimited Voice Calls Check 3 Months Recharge Plan
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X