Home
News

இறங்கி அடித்த ஏர்டெல்.. மாதாந்திரம் ரூ.309 போதும்.. 90 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் வாய்ஸ்.. 135GB டேட்டா!

ஏர்டெல் (Airtel) கஸ்டமர்கள் கண்ணை மூடிக்கொண்டு ரீசார்ஜ் செய்யும்படியான விலைக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், 135 ஜிபி டேட்டா, 100 எஸ்எம்எஸ்கள் மட்டுமல்லாமல், ஓடிடி சந்தா மற்றும் ஸ்பேம் ஃபில்டர் போன்ற சலுகைகளுடன் 90 நாட்கள் வேலிடிட்டி கொண்ட ப்ரீபெய்ட் திட்டம் (Prepaid Plan) கிடைக்கிறது. மூன்று மாதத்துக்கு பட்டையை கிளப்பும் திட்டத்தை தேடிக் கொண்டிருந்தால், இந்த திட்டத்தின் முழு சலுகைகளை பார்த்துவிட்டு ரீசார்ஜ் செய்து கொள்ளுங்கள். இந்த 90 நாட்கள் திட்டத்தின் முழு விவரங்கள் இதோ.

ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களை பொறுத்தவரையில், அதிக வேலிடிட்டி கொண்ட திட்டங்களை ரீசார்ஜ் செய்யும்போது, அதற்கான மாதாந்திர செலவு குறைவாக இருக்கிறது. இப்படி மாதத்துக்கு ரூ.309 செலவில் மூன்று மாதங்களுக்கான சலுகைகளை ஏர்டெல் ரூ 929 திட்டம் கொடுக்கிறது. வாய்ஸ், டேட்டா, ஓடிடி போன்ற ஒட்டுமொத்த பண்டில் சலுகையாக வந்திருக்கிறது.

இறங்கி அடித்த ஏர்டெல்.. மாதாந்திரம் ரூ.309 போதும்.. 90 நாட்கள் சலுகை!

ஏர்டெல் ரூ 929 திட்ட விவரங்கள் (Airtel Rs 929 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் முன்பே சொன்னதை போல 90 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. ஆகவே, மூன்று மாதங்களிலும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை கிடைக்கிறது. ஆகவே, வாய்ஸ் கால்களுக்கு கொஞ்சமும் குறை இருக்காது.

இந்த ப்ரீபெய்ட் திட்டத்தின் டேட்டா சலுகைகளை பார்க்கையில், நாளொன்றுக்கு 1.5 ஜிபி டேட்டா மற்றும் 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா (64 Kbps Post Data) சலுகைகளை கொடுக்கப்படுகிறது. ஆகவே, 2 ஜிபிக்கு பிறகு போஸ்ட் டேட்டாவை பயன்படுத்தலாம். 90 நாட்கள் வேலிடிட்டியில் மொத்தமாக 135 ஜிபி டேட்டாவை இந்த திட்டத்தில் பெற்று கொள்ளலாம்.

எஸ்எம்எஸ் சலுகைகள் வழக்கம் போலவே, நாளொன்றுக்கு 100 வீதம் கஸ்டமர்களுக்கு கிடைக்கிறது. இந்த மூன்று சலுகைகளும் பட்ஜெட்டுக்கு ஏற்ப இருக்கின்றன. ஆனால், இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் கூடுதலாக பல்வேறு சலுகைகள் இருக்கின்றன. முதலில் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் (Airtel Xstream) சந்தாவை பெற்று கொள்ளலாம். பிரீமியம் சலுகைகள் இதில் இல்லை.

இருப்பினும், குறிப்பிட்ட மூவிக்கள், ஷோக்கள் மற்றும் சேனல்களை பார்த்து கொள்ளலாம். விங்க் மியூசிக் (Wynk Music) ஆப் மூலம் ப்ரீ ஹலோ டியூன்ஸ் (Free Hello Tunes) சலுகை கிடைக்கிறது. இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் கிடைக்கும் 90 நாட்கள் வேலிடிட்டியை போலவே மூன்று மாதங்களுக்கு அப்பல்லோ 24/7 சர்க்கிள் (Apollo 24/7 Circle) மெம்பர்ஷிப் பெற்று கொள்ளலாம்.

மேலும், ஸ்மேப் ஃபில்டர் சலுகை கிடைக்கிறது. அதாவது, ஸ்பேம் வாய்ஸ் கால்கள் மற்றும் ஸ்பேம் எஸ்எம்எஸ்களை எந்தவித கூடுதல் கட்டணமும் இல்லாமல் ஃபில்டர் செய்து, உங்களுக்கு அலெர்ட் செய்கிறது. இப்படியான சலுகைகளை இந்த திட்டம் கொடுக்கிறது. மூன்று மாதங்களுக்கான திட்டங்களில் இந்த திட்டத்தை டாப் ஆப்ஷனில் எடுத்து கொள்ளலாம்.

இதே சலுகைகள் 2 மாதங்களுக்கு வேண்டுமானால், ரூ.300 கம்மி விலையில் மற்றொரு ப்ரீபெய்ட் திட்டம் இருக்கிறது. இந்த திட்டத்தின் சலுகைகள் அப்படியே மேலே பார்த்த திட்டத்தை போலவே இருக்கிறது. ஆகவே, 2 மாதங்களுக்கான திட்டத்தில் ஏதாவது ஆப்ஷன் இருக்கிறதா என்றால், இந்த திட்டத்தின் சலுகைகளை முதலில் பார்த்துவிட்டு எடுத்து கொள்ளுங்கள்.

ஏர்டெல் ரூ 619 திட்ட விவரங்கள் (Airtel Rs 619 Plan Details): இந்த திட்டத்தில் 60 நாட்கள் வேலிடிட்டி வருகிறது. இந்த 2 மாதங்களில் முந்தைய திட்டத்தை போல 1.5 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் 100 எஸ்எம்எஸ்களை பெறலாம். மேலும், ஸ்பேம் ஃபில்டர், எக்ஸ்ஸ்ட்ரீம் சந்தா, அப்பல்லோ 24/7 சர்க்கிள் மற்றும் விங்க் மியூசிக் சலுகைகள் கிடைக்கின்றன.

More from GizBot

Best Mobiles in India

English summary
Airtel Rs 929 Plan With 90 Days Validity Unlimited Voice Calls 135GB Data Check Three Months Plan
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X