Home
News

ஜியோ, ஏர்டெல்.. 90 நாட்கள் வேலிடிட்டி.. இந்த மேட்டர் தெரியாம ரீசார்ஜ் பண்ணாதீங்க.. ஏன்?

ஜியோ (jio), ஏர்டெல் (airtel) நிறுவனங்கள் போட்டிப்போட்டுக் கொண்டு அவ்வப்போது புதிய திட்டங்கள் மற்றும் சலுகைகள் வழங்கி வருகின்றன. குறிப்பாக இந்த இரண்டு நிறுவனங்களும் இந்தியாவில் கொண்டுவரும் திட்டங்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. அதேபோல் இந்த இரண்டு நிறுவனங்களும் விரைவில் ஒரு புதிய முயற்சியைச் செயல்படுத்த உள்ளன.

அதாவது ஜிஜியோ (jio) மற்றும் ஏர்டெல் (airtel) நிறுவனங்கள் ஸ்பேஸ்எக்ஸ் (SpaceX) நிறுவனத்துடன் இணைந்து ஸ்டார்லிங்க் (Starlink) செயற்கைக்கோள் இணையச் சேவைகளை இந்தியாவுக்கு அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்தியாவில் செயற்கைக்கோள் இணையச் சேவை அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

ஜியோ, ஏர்டெல்.. இந்த மேட்டர் தெரியாம ரீசார்ஜ் பண்ணாதீங்க.. ஏன்?

சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுங்கள் 90 நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டங்களை வைத்துள்ளன. இதில் எது அதிக சலுகைகள் வழங்குகிறது மற்றும் எந்த நிறுவனத்தின் திட்டத்தைத் தேர்வு செய்வது என்பதை இங்கே பார்க்கலாம்.

ஏர்டெல் ரூ.929 ப்ரீபெய்ட் திட்டம் (airtel rs 929 plan) திட்டம் ஆனது 90 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கிறது. குறிப்பாக இந்த திட்டத்தில் தினமும் 1.5ஜிபி டேட்டா கிடைக்கும். எனவே ஏர்டெல் ரூ.929 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 135ஜிபி டேட்டா கிடைக்கும். மேலும் இந்த திட்டத்தில் தினசரி 1.5ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64கேபிபிஎஸ் ஆக குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.

அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) & ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) நன்மையை வழங்குகிறது ஏர்டெல் ரூ.929 ப்ரீபெய்ட் திட்டம். மேலும் தினமும் 100 எஸ்எம்எஸ், அப்பல்லோ 24/7 சர்க்கிள் (apollo 24/7 circle, ஹலோ டியூன்ஸ் (Hello Tunes) உள்ளிட்ட நன்மைகள் இதில் உள்ளன.

ஜியோ நிறுவனத்தின் ரூ.899 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 899 prepaid plan) ஆனது தினசரி 2ஜிபி டேட்டா வழங்குகிறது. அதுவும் 90 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது இந்த ஜியோ திட்டம். அதேபோல் 20ஜிபி இலவச டேட்டாவும் இந்த திட்டத்தில் கிடைக்கும். எனவே நீங்கள் இந்த திட்டத்தைத் தேர்வு செய்தால் மொத்தம் 200ஜிபி டேட்டா கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை வழங்குகிறது இந்த ஜியோ ரூ.899 ப்ரீபெய்ட் திட்டம்.குறிப்பாக தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்குகிறது இந்த திட்டம். இதுதவிர பல்வேறு சலுகைகள் இதில் உள்ளன.

அதாவது ஜியோ டிவி (JioTV), ஜியோ கிளவுட் (JioCloud) போன்றவற்றை இந்த ஜியோ ரூ.899 ப்ரீபெய்ட் திட்டம் மூலம் பயன்படுத்திக்கொள்ள முடியும். குறிப்பாக அன்லிமிடெட் 5ஜி டேட்டா வழங்குகிறது இந்த திட்டம். இந்த திட்டத்தில் தினமும் 2ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64கேபிபிஎஸ் ஆக குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.

எது சிறந்தது? ஏர்டெல் ரூ.929 ப்ரீபெய்ட் திட்டத்தை விட ஜியோ ரூ.899 ப்ரீபெய்ட் திட்டம் அதிக டேட்டா மற்றும் கூடுதல் நன்மைகளை வழங்குகிறது. அதுவும் ஏர்டெல் நிறுவனத்தை விட குறைந்த விலையில் ஜியோ திட்டம் கூடுதல் நன்மைகளை வழங்குகிறது. எனவே ஜியோ திட்டத்தை தேர்வு செய்வது நல்லது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Airtel Rs 929 Plan Vs Jio Rs 899 Plan With Unlimited Voice Calls 90 days validity Check Best Plan
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X