அடுத்த 90 நாட்கள்.. Airtel சிம் கார்டு இருந்தா உடனே இதை பண்ணிடுங்க.. வாய்ஸ் கால்கள், டேட்டா, எஸ்எம்எஸ்!
புது வருடம் பிறந்து விட்டது, இந்த நாளில் டெலிகாம் கஸ்டமர்கள் அடுத்த ரீசார்ஜ் பற்றி யோசிக்க தொடங்கிவிட்டர். இவர்களில் ஏர்டெல் கஸ்டமர்களுக்கு அடுத்த 90 நாட்கள் கவலையின்றி வாய்ஸ் கால்கள், டேட்டா மற்றும் எஸ்எம்எஸ்களை மலிவாக விலைக்கு இந்த ப்ரீபெய்ட் திட்டம் கொடுக்கிறது. இந்த மூன்று மாத திட்டத்தின் முழு சலுகைகளை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
ஏர்டெல் (Airtel) நிறுவனத்தில் 84 நாட்கள் வேலிடிட்டியுடன் ஏகப்பட்ட திட்டங்கள் இருக்கின்றன. ஆனால், 90 நாட்கள் வேலிடிட்டியில் பெரிதாக திட்டங்கள் கிடையாது. ஆனால், இப்போது பார்க்க இருக்கும் திட்டத்தில் 90 நாட்களுக்கு வேலிடிட்டி கிடைக்கிறது. அதிலும் மலிவான விலைக்கு வாய்ஸ் கால்கள், டேட்டா, எஸ்எம்எஸ் மட்டுமல்லாமல் கூடுதல் சலுகைகளையும் கொடுத்துள்ளது.

ஏர்டெல் ரூ. 929 திட்ட விவரங்கள் (Airtel Rs 929 Plan Details): இந்த திட்டத்துக்கு நாளொன்றுக்கு 1.5 ஜிபி டேட்டா கொடுக்கப்படுகிறது. இந்த டேட்டா தீர்ந்து போன பிறகு 64 கேபிபிஎஸ் வேகத்தில் கிடைக்கும் போஸ்ட் டேட்டா கொடுக்கப்படும். இந்த திட்டத்தின் விலை மலிவாக இருப்பதால், அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) சலுகை இதற்கு கொடுக்கப்படாது.
ஆகவே, 4ஜி வேகத்தில் கிடைக்கும் 1.5 ஜிபி டேட்டா திட்டத்தை மட்டுமே பயன்படுத்தி கொள்ள வேண்டும். வாய்ஸ் கால்களுக்கு இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் குறை இருக்காது. ஏனென்றால், 90 நாட்கள் வேலிடிட்டி முழுவதும் அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி, ரோமிங் கால்களை (Unlimited Local STD Roaming Calls) கஸ்டமர்கள் செய்து கொள்ளலாம். மேலும், எஸ்எம்எஸ் சலுகை உள்ளது.
இதை நாளொன்றுக்கு 100 கணக்கில் கஸ்டமர்கள் அனுப்பி கொள்ளலாம். கூடுதல் சலுகைகளை பொறுத்தவரையில், இன்கம்மிங் வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ்கள் லைவ் ஸ்பேம் அலெர்ட் (Live Spam Alert) கொடுக்கப்படுகிறது. 30 நாட்களுக்கு ஒரு டியூனை மாற்றி கொள்ளும்படி ப்ரீ ஹலோ டியூன்ஸ் (Free Hello Tunes) கொடுக்கப்படுகிறது. இதுபோக பெர்ப்லெக்ஸிடி ஏஐ ப்ரோ கிடைக்கிறது.
இந்த சலுகைகள் மட்டுமே இந்த திட்டத்துக்கு கிடைக்கிறது. 3 மாதங்களுக்கு மலிவான விலை கொண்ட திட்டமாக இது இருக்கிறது. இந்த டேட்டா போதாது, அதேபோல ஓடிடி சந்தாவும் வேண்டும் என்று கேட்கும் கஸ்டமர்களுக்கு ஏர்டெல் ரூ. 979 ப்ரீபெய்ட் திட்டம் இருக்கிறது. இதில் அன்லிமிடெட் 5ஜி டேட்டாவும் கிடைக்கும். மேலும், ஓடிடி ஆப்களின் சந்தாவும் கொடுக்கப்படும்.
ஏர்டெல் ரூ. 979 திட்ட விவரங்கள் (Airtel Rs 979 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கு டேட்டா அதிகமாக கிடைப்பதால் வேலிடிட்டி குறைவாக இருக்கிறது. அதாவது, முந்தைய திட்டத்தில் தினசரிக்கு 1.5 ஜிபி டேட்டாவுடன் 90 நாட்கள் வேலிடிட்டி கிடைத்தது. ஆனால், இதில் தினசரிக்கு 2 ஜிபி டேட்டாவுடன் 84 நாட்கள் மட்டுமே வேலிடிட்டி கிடைக்கிறது.
இருப்பினும், 2 ஜிபி டேட்டா மட்டுமல்லாமல், கூடுதலாக அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை இந்த திட்டம் கொடுத்துள்ளது. ஆகவே, வேலிடிட்டி முழுவதும் இலவமாக அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை பயன்படுத்தி கொள்ளலாம். 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டாவும் இந்த திட்டத்துக்கு பொருந்தும். வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ் சலுகைள் ஒரே மாதிரியாகவே இருக்கிறது.
அதேபோல கூடுதல் சலுகைகளும் முந்தைய திட்டத்தை போலவே கிடைக்கின்றன. ஓடிடி சலுகையை பார்க்கையில், சோனிலிவ், லையன்ஸ்கேட் பிளே, ஆஹா, சாவ்பால், ஹோய்சோய் மற்றும் சன்நெக்ஸ்ட் உள்ளிட்ட 20+ ஆப்கள் கிடைக்கின்றன. இதை ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பிளே பிரீமியம் சலுகை வழியாக பெற்று கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications








