Home
News

Airtel சிம் இருக்கா.. அடுத்த 90 நாட்கள் வேலிடிட்டி.. வாய்ஸ் கால்கள்.. 1.5ஜிபி டேட்டா.. எக்ஸ்ட்ரீம் பிளே சந்தா!

ஏர்டெல் சிம் கார்டு வைத்து இருக்கும் கஸ்டமர்களுக்கு 3 மாதங்களுக்கு பக்காவான சலுகைகள் வேண்டுமானால், இப்போது பார்க்க இருக்கும் திட்டத்தை கண்ணை மூடிக்கொண்டு ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். புதிதாக சேர்க்கப்பட்ட 12 மாதங்களுக்கான அடோப் எக்ஸ்பிரஸ் பிரீமியம் சந்தாவும் இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கு கிடைக்கும். மேலும், ஓடிடி சந்தா கொடுக்கப்படும். இந்த திட்டத்தின் முழு சலுகை விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், தினசரி டேட்டா, எஸ்எம்எஸ் மட்டுமல்லாமல் ஓடிடி சந்தாவை ஏர்டெல் ரூ.929 திட்டம் கொடுக்கிறது. மூன்று மாதங்களுக்கு இந்த சலுகைகள் கிடைக்கிறது. ஆகவே, மலிவான விலைக்கு ஓடிடியுடன் மூன்று மாதங்களுக்கு திட்டம் வேண்டுமானால், இதை ஆப்ஷனில் எடுக்கலாம். அதிக டேட்டாவுக்கு மற்றொரு திட்டம் உள்ளது.

Airtel சிம் இருக்கா.. அடுத்த 90 நாட்கள் வேலிடிட்டி.. வாய்ஸ் கால்கள்!

ஏர்டெல் ரூ. 929 திட்ட விவரங்கள் (Airtel Rs 929 Plan Details): 90 நாட்களுக்கு வேலிடிட்டி கொடுக்கிறது. இந்த நாட்களில் அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி,ரோமிங் கால்களை (Unlimited Local STD Roaming Calls) செய்து கொள்ளலாம். நாளொன்றுக்கு 100 எம்எஸ்கள் மற்றும் 1.5 ஜிபி டேட்டா கிடைக்கும். இந்த 1.5 ஜிபிக்கு பிறகும் 64 கேபிபிஎஸ் வேகத்தில் போஸ்ட் டேட்டா கிடைக்கும்.

1.5 ஜிபி டேட்டா தினசரிக்கு கிடைப்பதால், 90 நாட்களுக்கு மொத்தமாக 135 ஜிபி டேட்டாவை பயன்படுத்தி கொள்ளலாம். இந்த டேட்டா சலுகை மட்டுமே கிடைக்கும். அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கு கிடைக்காது. இந்த டேட்டா, வாய்ஸ், எஸ்எம்எஸ் சலுகைகள் போக கூடுதலாக நான்கு சலுகைகளை பெற்று கொள்ளலாம்.

முதலாவது சலுகையாக அடோப் எக்ஸ்பிரஸ் பிரீமியம் சந்தா கிடைக்கிறது. இது அண்மையில் சேர்க்கப்பட்ட சலுகையாக இருக்கிறது. முன்னதாக பெர்ப்லெக்ஸிடி ஏஐ ப்ரோ சந்தா கிடைத்தது. இப்போது நீக்கம் செய்யப்பட்டுவிட்டது. ஆகவே, அதற்கு மாற்றாக இந்த அடோப் எக்ஸ்பிரஸ் பிரீமியம் (Adobe Express Premium) சந்தா கிடைக்கிறது. இதை 12 மாதங்களுக்கு பயன்படுத்தலாம்.

இந்த சந்தாவின் மதிப்பு ரூ.4000 ஆக இருக்கிறது. சொல்லப்போனால், ரூ.199 விலைக்கு கொண்ட திட்டத்தில் இருந்து இந்த அடோப் எக்ஸ்பிரஸ் பிரீமியம் கொடுக்கப்படுகிறது. இந்த சலுகைக்கு அடுத்து ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பிளே (Airtel Xstream Play) சந்தா கொடுக்கப்படுகிறது. இது ப்ரீமியம் சந்தாவாக இருக்காது. இருப்பினும், சோனிலிவ் ப்ரீ வெர்ஷன் (SonyLIV Free Version) வருகிறது.

மேலும், அமேசான் எம்எக்ஸ் பிளேயர் (Amazon MX Player), விரோட் (Vrott), சன்னா ஜோர் (Channa Jor), ரன் டிவி (Runn TV), டிஸ்ட்ரோ டிவி (Distro TV) ஆகிய ஓடிடி ஆப்களையும் இதில் பயன்படுத்தி கொள்ளலாம். அடுத்து ப்ரீ ஹலோ டியூன்ஸ் மற்றும் ஸ்பேம் அலெர்ட் சலுகையை இந்த ஏர்டெல் ரூ. 929 திட்டம் கொடுத்து உள்ளது. 5ஜி டேட்டாவுக்கு பின்வரும் திட்டம் சரியாக இருக்கும்.

ஏர்டெல் ரூ. 979 திட்ட விவரங்கள் (Airtel Rs 979 Plan Details): இந்த திட்டத்துக்கு 90 நாட்கள் வேலிடிட்டி கிடைக்காது. இருப்பினும், 84 நாட்களுக்கு வேலிடிட்டி கிடைக்கும். ஏனென்றால், இதில் தினசரிக்கு 2 ஜிபி டேட்டா கிடைக்கும். அதேபோல அன்லிமிடெட் 5ஜி டேட்டாவும் கொடுக்கப்படும். இது முந்தைய திட்டத்தைவிட அதிக டேட்டா சலுகையாக இருக்கிறது.

அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், 100 எஸ்எம்எஸ்கள், அடோப் எக்ஸ்பிரஸ் பிரீமியம் சந்தாவும் கிடைக்கும். இதிலும் ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பிளே சந்தா கிடைக்கிறது. ஆனால், இது ப்ரீ வெர்ஷன் கிடையாது. சோனிலிவ், லயன்ஸ்கேட் பிளே, ஆஹா, சாவ்பால், ஹோய்சோய், சன்நெக்ஸ்ட் உள்ளிட்ட சலுகைகள் கிடைக்கும். மற்ற சலுகைகள் ஒரே மாதிரியாகவே இருக்கின்றன.

More from GizBot

Best Mobiles in India

English summary
Airtel Rs 929 Plan 90 Days Validity Unlimited Local STD Roaming Calls 1.5GB Data Check 3 Months Plan
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X