Home
News

அம்பானியே இத பண்ணல.. அப்பவே டவுட் ஆச்சு.. Airtel கஸ்டமர்களே உஷார்.. 9 ரூபாய் திட்டத்தில் உள்ள ஓட்டை!

வழக்கமாக.. முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) நிறுவனத்தின் திட்டங்களை தான் மற்ற டெலிகாம் நிறுவனங்கள் "காப்பி" அடிக்கும். ஆனால் ஜியோவே கொடுக்காத ஒரு வகையான திட்டத்தை ஏர்டெல் (Airtel) நிறுவனம் அறிமுகம் செய்து இருந்தது சற்றே ஆச்சரியமாகவும் மற்றும் சுவாரசியமாகவும் இருந்தது. அது ஏர்டெல்லின் ரூ.9 திட்டமாகும். இதுவொரு டேட்டா வவுச்சர் ஆகும். அதாவது உங்களிடம் இருக்கும் மெயின் ரீசார்ஜ்ஜின் வழியாக கிடைக்கும் டேட்டா நன்மை போதவில்லை என்றால்.. இது கூடுதல் டேட்டாவை வழங்கும் ஒரு திட்டமாகும்.

ரிலையன்ஸ் ஜியோவிடமும் கூட இதுபோன்ற டேட்டா வவுச்சர் திட்டங்கள் உள்ளன. ஆனால் அவைகள் எதுவுமே ரூ.10 க்குள் இல்லை. ஜியோவின் டேட்டா வவுச்சர்கள் ரூ.15 முதல் தொடங்குகிறது மற்றும் இது 1ஜிபி டேட்டாவை மட்டுமே வழங்குகிறது. ஆனால் ஏர்டெல்லின் ரூ.9 திட்டம் 10ஜிபி டேட்டாவை வழங்குகிறது.

Airtel கஸ்டமர்களே உஷார்.. 9 ரூபாய் திட்டத்தில் உள்ள ஓட்டை!

மேலோட்டமாக பார்த்தல்.. "அட அம்பானிகிட்டயே இப்படி ஒரு பிளான் இல்லையே!" என்று ஆச்சரியப்பட தோன்றும் தான். ஆனால் உண்மையில் இந்த திட்டத்தில் ஒரு சிக்கல் இருக்கிறது. அதுதான் வேலிடிட்டி. ஜியோவின் ரூ.15 திட்டம் வெறும் 1ஜிபி டேட்டாவை மட்டுமே வழங்கினாலும் கூட, அதன் வேலிடிட்டி ஆனது மெயின் ரீசார்ஜ்ஜின் வேலிடிட்டி உடன் ஒற்றுப்போகும்.

அதாவது உங்களுடைய மெயின் ரீசார்ஜ்ஜின் வேலிடிட்டி அடுத்த 25 நாட்களுக்கும் முடிவடைந்து விடும் என்றால்.. ரூ.15 வழியாக உங்களுக்கு கிடைத்த 1ஜிபி டேட்டாவில் உள்ள மீதமுள்ள டேட்டாவானதும் கூட அடுத்த 25 நாட்களுக்கு நீடிக்கும். ஆனால் ஏர்டெல்லின் ரூ.9 திட்டத்தின் கீழ் கிடைக்கும் 10ஜிபி டேட்டாவின் வேலிடிட்டி வெறும் 1 மணி நேர வேலிடிட்டி உடன் வருகிறது.

Airtel கஸ்டமர்களே உஷார்.. 9 ரூபாய் திட்டத்தில் உள்ள ஓட்டை!

அதாவது ரூ.9-ஐ ரீசார்ஜ் செய்த 60 நிமிடங்களுக்குள் உங்களால் எவ்வளவு டேட்டா முடியுமே அவ்வளவு டேட்டாவை தீர்க்க வேண்டும். ஒருவேளை நீங்கள் 10ஜிபி டேட்டாவை 1 மணி நேரத்திற்குள் காலி செய்துவிட்டால், அதன் பிறகான இண்டர்நெட் ஸ்பீட் 64கேபிபிஎஸ் ஆக குறைக்கப்படும்.

இப்படிப்பட்ட ஒரு திட்டத்தின் தேவை, பயனர்களின் மத்தியில் மிகவும் குறைவாகவே இருக்கும். இதை பலரும் வேடிக்கையாக ரீசார்ஜ் செய்து பார்க்கவே வாய்ப்புகள் அதிகம். அதாவது 1 மணி நேரத்திற்குள் 10ஜிபி டேட்டாவை காலி செய்ய முடியுமா என்று வாடிக்கையாளர்கள் வேடிக்கையாக முயற்சி செய்து பார்க்கலாம். இதுவொரு மிகவும் அத்தியாவசமான ஒரு திட்டமாக இருக்க வாய்ப்பில்லை!

Airtel கஸ்டமர்களே உஷார்.. 9 ரூபாய் திட்டத்தில் உள்ள ஓட்டை!

இன்னொரு 'மேட்டர்' என்னவென்றால்.. ரூ.9 என்பது ஏர்டெல்லின் சொந்த வியாபார யுத்தியில்.. சொந்த மூளையில் உருவான திட்டம் அல்ல. இது வோடாபோன் ஐடியாவிடம் (Vodafone Idea - VI) இருந்து "காப்பி" அடிக்கப்பட்ட ஒரு ரீசார்ஜ் ஆகும். அது ரூ.24 டேட்டா வவுச்சர் ஆகும். இதுவும் 1 மணிநேர வேலிடிட்டியுடன் வருகிறது. ஆனால் இது வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிடெட் டேட்டா வழங்குகிறது.

அதாவது வோடாபோன் ரூ.24-க்கு எஃப்யுபி (FUP) என்று சுருக்கமாக அழைக்கப்படும் ஃபேர் யூசேஜ் பாலிசி வரம்பு இல்லை. எனவே பயனர்கள் ரீசார்ஜ் செய்த 1 மணி நேரத்திற்குள் எவ்வளவு டேட்டாவை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். ஆகமொத்தம் ஏர்டெல்லின் ரூ.9 திட்டம் மலிவானதாக இருக்கலாம், ஆனால் அது அனைவருக்கும் பொருந்தாது. மறுகையில் உள்ள வோடாபோன் ஐடியாவின் ரூ.24 திட்டமானது - கொடுக்குற காசுக்கு.. டேட்டாவை அள்ளி கொடுக்குது!

இந்த இடத்தில்.. ஏர்டெல்லின் ரூ.9-ஐ போலவே வோடாபோனின் ரூ.24 திட்டமும் கூட ஆக்டிவ் ஆக உள்ள மெயின் ரீசார்ஜ்ஜின் வேலிடிட்டி உடன் ஒற்றுப்போகாது என்பதையும் நாம் கவனிக்க வேண்டும். அதாவது ஏர்டெல் உடன் ஒப்பிடும் போது 'பெட்டர்' ஆக இருக்கிறதே தவிர, வோடாபோனின் ரூ.24 திட்டத்தின் தேவை கூட பயனர்களின் மத்தியில் மிகவும் குறைவாகவே இருக்கும்!

வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரிய அளவிலான தேவைகள் இருக்காது; இதுபோன்ற திட்டங்கள் எல்லாம் ஒருவகையான விளம்பரங்களுக்கு மட்டுமே வேலைக்கு ஆகும் என்பதை நன்கு அறிந்த காரணத்தினால் தான் என்னவோ.. முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோவிடம் இதுபோன்ற திட்டங்கள் இல்லை. ஆனால் ஜியோவிடம் ரூ.25 க்கு ஒரு டேட்டா வவுச்சர் உள்ளது. இது 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது மற்றும் இதன் வேலிடிட்டி ஆக்டிவ் ரீசார்ஜ்ஜின் வேலிடிட்டியோடு ஒற்றுப்போகும்.

Best Mobiles in India

English summary
Airtel Rs 9 Vs Vodafone Idea Rs 24 Vs Jio Rs 15 Which one is best Data Voucher in All Angles
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X