Airtel கதையே வேற.. இனி ரூ.899-க்கு வாய்ஸ் கால்.. 350+ டிவி சேனல்கள்.. 12+ ஓடிடி சந்தா.. 100எம்பிபிஎஸ் டேட்டா!
ஏர்டெல் கஸ்டமர்கள் துள்ளிக் குதிக்கும் படியான சலுகைகள் வெறும் ரூ.899 மதிப்பிலான ஏர்டெல் பிளாக் திட்டத்தில் வருகிறது. இந்த விலைக்கு 100 எம்பிபிஎஸ் வேகத்தில் ஃபைபர் டேட்டா சலுகை மட்டுமல்லாமல், லைவ் டிவி சேனல்கள் மற்றும் முன்னணி ஓடிடி ஆப்களின் சந்தாவையும் பேக் செய்துள்ளது. இந்த ஏர்டெல் பிளாக் திட்டம் குறித்த முழு விவரங்களையும் இப்போது தெரிந்து கொள்ளலாம்.
ஏர்டெல் ரூ 899 திட்ட விவரங்கள் (Airtel Rs 899 Plan Details): மலிவான விலைக்கு ஃபைபர் டேட்டா (Fiber Data) மற்றும் டிடிஎச் (DTH) சேவைகளை இந்த ஏர்டெல் பிளாக் திட்டம் (Airtel Black Plan) வழங்குகிறது. கூடவே, ஓடிடி (OTT) பிரியர்களுக்கு ஏற்ப பல்வேறு ஆப்களின் சந்தாவும் கிடைக்கிறது. இதுபோக லேண்ட்லைன் மூலம் வாய்ஸ் கால்களையும் கொடுக்கிறது.

ஆகவே, இந்த பிளாக் திட்டத்தை பெறும் கஸ்டமர்களுக்கு 100 எம்பிபிஎஸ் வேகத்தில் அன்லிமிடெட் டேட்டா சலுகை கொடுக்கப்படுகிறது. மொபைல், டிவி, லேப்டாப் போன்ற மல்டிபிள் டிவைஸ்களின் கனெக்ட் செய்து பயன்படுத்தி கொள்ளலாம். லேண்ட்லைன் டிவைஸ் மூலம் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி வாய்ஸ் கால்களை (STD Voice Calls) செய்து கொள்ளலாம்.
இந்த சலுகைகள் போக டிடிஎச் மற்றும் ஓடிடி ஆப்களின் சலுகை கிடைக்கிறது. அதாவது, ரூ.350 மதிப்பிலான லைவ் டிவி சேனல்களை இந்த ஏர்டெல் பிளாக் திட்டத்தில் பெற்று கொள்ளலாம். அதேபோல ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் பிளே (Airtel Xstream Play) சந்தாவும் கிடைக்கிறது. இந்த சந்தா மூலம் சோனிலிவ் (SonyLIV), லயன்ஸ்கேட் பிளே (Lions Gate Play) சந்தா வருகிறது.
இதேபோல மொத்தம் 12+ ஓடிடி ஆப்களின் சந்தாவை பெற்று கொள்ள முடியும். ஆகவே, மனோரமா மேக்ஸ் (Manorama Max), எபிக் ஆன் (Epic On), ஈராஸ் நவ் (Eros Now), அல்ட்ரா (Ultra), ஷீமாரூமீ (Shemaroome), ஃபேன் கோட் (Fan Code), கிளிக் (Klikk), ஹங்கமா (Hungama), சோஷியல் ஸ்வாக் (Social Swag), ராஜ் டிஜிட்டல் டிவி (Raj Digital TV) மற்றும் டாகுபே (Docubay) ஓடிடி ஆப்களின் சலுகை கிடைக்கிறது.
மேலும், ஹோய்சோய் (HoiChoi), சாவ்பால் (Chaupal), ஷார்ட்ஸ் டிவி (Shorts TV), கான்ச்சா லங்கா (Kanccha Lanka), டிவோ (DIVO), டாலிவுட்பிளே (Dollywood Play) மற்றும் நம்ம ஃபிளிக்ஸ் (Namma Flix) உள்ளிட்ட ஆப்களின் சந்தாவையும் பெற்று கொள்ளலாம். இதுபோக டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் (Disney+ Hotstar) சந்தாவையும் இந்த ஏர்டெல் பிளாக் திட்டம் பேக் செய்து கொடுக்கிறது.
ஆகவே, ஒரே திட்டத்தில் டிடிஎச் மூலம் டிவி சேனல்கள், ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் பிளே மூலம் ஓடிடி சேனல்கள் மற்றும் ஃபைபர் மூலம் வை-பை டேட்டா சலுகையை பெற்று கொள்ளலாம். இதைவிட மலிவான விலையில் திட்டம் வேண்டுமானால், ரூ.699 மதிப்பில் கிடைக்கும் மற்றொரு பிளாக் திட்டம் சரியாக இருக்கும். இந்த திட்டத்தில் டேட்டா வேகம் மட்டுமே குறைவாக இருக்கும்.
ஏர்டெல் ரூ 699 திட்ட விவரங்கள் (Airtel Rs 699 Plan Details): இந்த ஏர்டெல் பிளாக் திட்டத்திலும் ஃபைபர் மற்றும் லேண்ட்லைன் சலுகை கிடைக்கிறது. ஆகவே, 40 எம்பிபிஎஸ் வேகத்தில் அன்லிமிடெட் டேட்டா சலுகையை பயன்படுத்தலாம். அதேபோல லேண்ட்லைன் வாய்ஸ் கால்களை செய்து கொள்ளலாம். இதுபோக ரூ.350 மதிப்பிலான டிவி சேனல்களை பார்த்து கொள்ளலாம்.
முந்தைய திட்டத்தை போலவே டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் சந்தா கிடைக்கிறது. அதேபோல ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் பிளே சந்தாவின் கீழ் சோனிலிவ், லையன்ஸ்கேட் பிளே உள்ளிட்ட 12 ஓடிடி ஆப்களின் சந்தா கொடுக்கப்படுகிறது. டேட்டா வேகம் குறைவாக போதும், அதே நேரத்தில் ஓடிடி மற்றும் டிடிஎச் சேவைகள் வேண்டும் என்றால், இந்த திட்டத்தை தேர்ந்தெடுங்கள்.


Click it and Unblock the Notifications