Home
News

கேபிள் TV-க்கு ஒரே போடு.. 350+ டிவி சேனல்கள்.. 100Mbps ஸ்பீடு டேட்டா.. அன்லிமிடெட் வாய்ஸ்.. ஓடிடி சந்தா!

கேபிள் டிவிக்கு நிகராக 350+ லைவ் டிவி சேனல்களை கொடுப்பது மட்டுமல்லாமல், 100 எம்பிபிஎஸ் வேகத்தில் டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் பிரீமியம் ஓடிடி ஆப்களுடன் பார்தி ஏர்டெல் (Airtel) நிறுவனம் ஒரு பிராட்பேண்ட் திட்டத்தை (Broadband Plan) கொடுக்கிறது. இந்த பிராட்பேண்ட் திட்டத்தில் முழு சலுகை விவரங்களை பார்க்கலாம்.

ஏர்டெல் ரூ.899 திட்ட விவரங்கள் (Airtel Rs.899 Plan Details): இந்த பிராட்பேண்ட் திட்டத்துக்கு 100 எம்பிபிஎஸ் வேகத்தில் அன்லிமிடெட் டேட்டா கிடைக்கும். பிராட்பேண்ட் டேட்டாவை கொடுப்பதால், அன்லிமிடெட் வாய்ஸ் கால்களையும் (Unlimited Voice Calls) கஸ்டமர்கள் செய்து கொள்ளலாம். ஆகவே, அன்லிமிடெட் சலுகையில் வாய்ஸ் கால்கள், டேட்டா கிடைக்கிறது.

கேபிள் TV-க்கு ஒரே போடு.. 350+ டிவி சேனல்கள்.. 100Mbps ஸ்பீடு டேட்டா!

350+ லைவ் டிவி சேனல்களையும் (TV Channels) கஸ்டமர்கள் பெற்று கொள்ளலாம். இதில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் (Star Sports), ஜீ5 டிவி (ZEE TV), சோனி சாப் (Sony Sab), சோனி என்டர்டெயின்மென்ட் (Sony Entertainment), ஸ்டார் உட்சவ் (Star Utsav), நிக் (Nick), பிபிசி நியூஸ் (BBC News), நியூஸ் 18 (News 18) உள்ளிட்ட சேனல்களும் கிடைக்கின்றன. ஆகவே, இதற்கான செட்-டாப் பாக்ஸ் கொடுக்கப்படும்.

இதிலேயே ஓடிடி ஆப்களையும் கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ள முடியும். பிரீமியம் ஓடிடி ஆப்களை இந்த பிராட்பேண்ட் திட்டம் கொடுத்துள்ளது. ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar), ஜீ5 பிரீமியம் சந்தா (ZEE5 Premium Subscription) கிடைக்கிறது. மேலும், ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் (Airtel Xstream) சந்தாவை இந்த பிராட்பேண்ட் திட்டம் கொடுக்கிறது. இதில் கூடுதலாக ஓடிடி ஆப்கள் கிடைக்கும்.

மேலும், கூடுதல் சலுகைகளை பார்க்கையில், கூகுள் ஒன் (Google One) கிடைக்கிறது. இதில் 100 ஜிபிக்கு கிளவுட் ஸ்டோரேஜ் (Cloud Storage) கிடைக்கும். அடோப் எக்ஸ்பிரஸ் பீரமியம் (Adobe Express Premium) சந்தாவும் இந்த பிராட்பேண்ட் திட்டத்தில் கொடுக்கப்பட்டு இருக்கிறது. கூடுதல் ஓடிடி ஆப்கள் வேண்டுமானால், மற்றொரு பிராட்பேண்ட் திட்டம் சரியாக இருக்கும்.

ஏர்டெல் ரூ.999 திட்ட விவரங்கள் (Airtel Rs.999 Plan Details): இந்த திட்டத்தும் 100 எம்பிபிஎஸ் வேகத்தில் டேட்டா கொடுக்கப்படுகிறது. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஆகவே, டேட்டா மற்றும் வாய்ஸ் கால்களில் எந்த மாற்றமும் கிடையாது. ஆனால், இதில் லைவ் டிவி சேனல்களின் சந்தா கிடைக்காது. அதற்கு பதிலாக பிரீமியம் ஓடிடி ஆப்கள் கிடைக்கின்றன.

அதாவது, முந்தைய திட்டத்தில் ஜியோஹாட்ஸ்டார் மற்றும் ஜீ5 பிரீமியம் சந்தா மட்டுமே கிடைத்தது. ஆனால், இந்த பிராட்பேண்ட் திட்டத்தில் நெட்பிளிக்ஸ் பேசிக் (Netflix Basic), அமேசான் பிரைம் வீடியோ (Amazon Prime Video), ஆப்பிள் டிவி (Apple TV), ஜியோஹாட்ஸ்டார் சூப்பர் (JioHotstar Super) மற்றும் ஜீ5 (ZEE5) ஆகிய ஓடிடி ஆப்களின் சந்தா கொடுக்கப்பட்டு இருக்கிறது.

ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பிரீமியம் (Airtel Xstream Premium) சந்தாவும் கொடுக்கப்பட்டு இருக்கிறது. மற்ற சலுகைகள் ஒரே மாதிரியாகவே இருக்கின்றன. ஆகவே, அடோப் எக்ஸ்பிரஸ் பிரீமியம் (Adobe Express Premium) மற்றும் கூகுள் ஒன் (Google One) கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஏர்டெல் ஃபைபர் மற்றும் ஏர்ஃபைபர் கஸ்டமர்களுக்கு இந்த திட்டங்கள் கிடைக்கும்.

இந்த திட்டங்களின் விலையில் இருந்து கூடுதலாக ஜிஎஸ்டி கட்டணம் விதிக்கப்படும். அதேபோல புதிய கஸ்டமர்கள் 3 மாதங்கள், 6 மாதங்கள் அல்லது 12 மாதங்கள் வேலிடிட்டியை தேர்ந்தெடுக்க வேண்டும். மாதாந்திர வேலிடிட்டியை மட்டுமே தேர்ந்தெடுத்தால், ரூட்டர், செட்-டாப் பாக்ஸ் மற்றும் இன்ஸ்டலேஷன் போன்ற கூடுதல் செலவுகள் இருக்கும்.

Best Mobiles in India

English summary
Airtel Rs 899 Plan With 350 TV Channels Including Star Sports ZEE TV Sony Sab 100 Mbps Speed Data
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X