Home
News

கேபிள் TV கதை காலி.. 350+ டிவி சேனல்கள்.. HD சேனல்கள்.. Airtel டிஜிட்டல் டிவிக்கு ரூ.350 விலையில் லைவ் சேனல்!

கேபிள் டிவி சேவை இல்லாமலேயே ஏர்டெல் (Airtel) நிறுவனத்தின் பிளாக் திட்டம் (Black Plan) வழியாக லைவ் டிவி சேனல்களின் சந்தா கஸ்டமர்களுக்கு கொடுக்கப்படுகிறது. இந்த ஏர்டெல் பிராட்பேண்ட் திட்டத்தின் (Airtel Broadband Plan) முழு சலுகைகளை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

ஏர்டெல் நிறுவனம் டிடிஎச் வழியாக எச்டி சேனல்கள் (HD Channels) உள்பட 350+ லைவ் டிவி சேனல்களை கொடுக்கிறது. இந்த சேனல்களை பெறுவதற்கு ஏர்டெல் பிளாக் திட்டங்களை பெற வேண்டும். இதில் டிவி சேனல்கள் போக ஓடிடி சந்தா, வை-பை டேட்டா, லேண்ட்லைன் வாய்ஸ் கால்கள் உள்ளிட்ட சலுகைகள் கிடைக்கின்றன.

கேபிள் TV கதை காலி.. 350+ டிவி சேனல்கள்.. HD சேனல்கள்.. Airtel பிளான்!

ஏர்டெல் ரூ. 899 திட்ட விவரங்கள் (Airtel Rs 899 Plan Details): இந்த வை-பை மற்றும் டிவி திட்டத்துக்கு 1 மாத வேலிடிட்டி கிடைக்கிறது. இந்த விலையில் ஜிஎஸ்எடி கட்டணம் கூடுதலாக இருக்கும். மேலும், வை-பை ரூட்டர், 4K செட்-டாப் பாக்ஸ் போன்றவற்றுக்கு இன்ஸ்டாலேஷன் கட்டணம் இருக்கும். இந்த கட்டணங்களுடன் பெற்று கொள்ளலாம்.

100 எம்பிபிஎஸ் வேகத்தில் வை-பை டேட்டா கொடுக்கப்படும். அன்லிமிடெட் டேட்டா (Unlimited Data) சலுகையில் இதை பயன்படுத்தி கொள்ளலாம். எச்டி சேனல்கள் உள்பட 350+ லைவ் டிவி சேனல்களை பார்த்து கொள்ளலாம். ரூ.350 மதிப்புள்ள சேனல்கள் கிடைக்கிறது. வை-பை மட்டுமல்லாமல், லேண்ட்லைன் வாய்ஸ் கால்கள் சலுகையும் இந்த வை-பை திட்டத்தில் கிடைக்கிறது.

இதில் அன்லிமிடெட் லோக்கல் & எஸ்டிடி கால்களை (Unlimited local & STD Calls) கஸ்டமர்கள் செய்து கொள்ளலாம். மேலும், கூகுள் ஒன் (Google One) கிளவுட் ஸ்டோரேஜ் கொடுக்கப்படும். 100 ஜிபிக்கு இந்த ஸ்டோரேஜ் கிடைக்கும். ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar) ஓடிடி சந்தா கொடுக்கப்படும். இதையும் செட்-பாக்ஸ் வழியாக பயன்படுத்தி கொள்ளலாம்.

மேலும், ஜீ5 பிரீமியம் (ZEE5 Premium) சந்தா கிடைக்கிறது. ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் (Airtel Xstream) சந்தாவில் கூடுதல் ஓடிடி சந்தா கொடுக்கப்படுகிறது. பெர்ப்லெக்ஸிடி ப்ரோ ஏஐ சந்தா கிடைக்கிறது. இந்த சலுகைகளை ஏர்டெல் ரூ. 899 திட்டம் கொடுத்துள்ளது. இந்த திட்டத்தை விட மலிவான விலைக்கு ஏர்டெல் ரூ. 599 பிளாக் திட்டம் கிடைக்கிறது.

ஏர்டெல் ரூ. 599 திட்ட விவரங்கள் (Airtel Rs 599 Plan Details): இந்த திட்டத்துக்கும் 18 சதவீத ஜிஎஸ்டி கட்டணம், இன்ஸ்டாலேஷன் கட்டணம் கூடுதலாக இருக்கும். இந்த கட்டணங்களுடன் திட்டத்தை பெற்றுவிட்டால், 30 எம்பிபிஎஸ் வேகத்தில் அன்லிமிடெட் வை-பை டேட்டா சலுகை கொடுக்கப்படும். இந்த திட்டத்துக்கும் 1 மாத வேலிடிட்டி வருகிறது.

மேலும், வேலிடிட்டி முழுவதும் அன்லிமிடெட் லோக்கல் & எஸ்டிடி வாய்ஸ் கால்களை செய்து கொள்ளலாம். லேண்ட்லைன் வழியாக இந்த கால்களை செய்து கொள்ளலாம். இதிலும் எச்டி சேனல்கள் உள்பட 350+ லைவ் டிவி சேனல்களின் சலுகை கொடுக்கப்படுகிறது. மேலும், ஜியோஹாட்ஸ்டார், ஜீ5 பிரீமியம் ஓடிடி ஆப்களின் சந்தா கிடைத்துள்ளது.

ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் சந்தாவுடன் கூடுதல் ஓடிடி ஆப்கள் இதில் கிடைக்கின்றன. பெர்ப்லெக்ஸிடி ப்ரோ ஏஐ சந்தா கொடுக்கப்படுகிறது. கூகுள் ஒன் சந்தாவில் 100 ஜிபிக்கான கிளவுட் ஸ்டோரேஜ் (100 GB Cloud Storage) இதில் கிடைக்கிறது. இந்த வை-பை மற்றும் டிவி சேனல் திட்டங்கள் ஒரே பில்லில் டேட்டா, லைவ் டிவி சேனல்கள், ஓடிடி சந்தா போன்ற ஒட்டுமொத்த சலுகைகளையும் கொடுக்கின்றன.

More from GizBot

Best Mobiles in India

English summary
Airtel Rs 899 Black Plan 350 Digital TV Channels HD Channels Included Check Airtel Broadband Plan
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X