தினமும் 2ஜிபி டேட்டா.. ஓடிடி.. அன்லிமிடெட் சலுகைகள் உடன் புதிய ஏர்டெல் திட்டம் அறிமுகம்.. என்ன விலை?
ஏர்டெல் நிறுவனம் தொடர்ந்து புதிய புதிய ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்வதில் அதிக ஆர்வம் காட்டுகிறது. குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு ப்ரீபெய்ட் திட்டமும் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும். இந்நிலையில் ஏர்டெல் (Airtel) நிறுவனம் புதிய ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
அதாவது தற்போது ஏர்டெல் நிறுவனம் ரூ.869 ப்ரீபெய்ட் திட்டத்தைத் தான் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த ஏர்டெல் ரூ.869 ப்ரீபெய்ட் திட்டத்தில் மூன்று மாதங்களுக்கு டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சந்தா வழங்கப்படுகிறது. பின்பு இந்த புதிய திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா நன்மை வழங்கப்படுகிறது. மேலும் 84 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது ரூ.869 திட்டம்.

வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் நன்மைகள் ஏர்டெல் ரூ.869 ப்ரீபெய்ட் (Airtel Rs 869 Plan) திட்டத்தில் கிடைக்கும். இதுதவிர RewardsMini சந்தா, அப்பல்லோ 24/7 சர்க்கிள், இலவச ஹெலோட்யூன்ஸ், விங்க் மியூசிக், அன்லிமிடெட் 5ஜி டேட்டா உள்ளிட்ட பல சிறப்பான சலுகைகளை வழங்குகிறது இந்த ஏர்டெல் ரூ.869 ப்ரீபெய்ட் திட்டம்.
அதேபோல் ஏர்டெல் ரூ.839 ப்ரீபெய்ட் திட்டத்தில் உள்ள நன்மைகளை தான் இந்த ரூ.869 ப்ரீபெய்ட் திட்டம் வழங்குகிறது. ஆனால் ஏர்டெல் ரூ.839 ப்ரீபெய்ட் திட்டத்தில் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சந்தா மட்டும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது ஏர்டெல் ரூ.839 ப்ரீபெய்ட் திட்டத்தின் நன்மைகளைப் பார்ப்போம்.
அதாவது ஏர்டெல் ரூ.839 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. பின்பு வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எம்எஸ்எஸ், அப்பல்லோ 24/7 சர்க்கிள், இலவச ஹெலோட்யூன்ஸ், விங்க் மியூசிக், அன்லிமிடெட் 5ஜி டேட்டா, எக்ஸ்ட்ரீம் பிளே(Xstream Play), 84 நாட்கள் வேலிடிட்டி உள்ளிட்ட நன்மைகள் ரூ.839 ப்ரீபெய்ட் திட்டத்தில் கிடைக்கிறது. மேலும் ஏர்டெல் வழங்கும் சில அசத்தலான ப்ரீபெய்ட் திட்டங்களை இப்போது பார்ப்போம்.
ஏர்டெல் ரூ.319 ப்ரீபெய்ட் திட்டம் தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. அதேபோல் வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட நன்மைகளும் இந்த திட்டத்தில் கிடைக்கும். மேலும் ஏர்டெல் ரூ.319 ப்ரீபெய்ட் திட்டத்தில் அப்பல்லோ 24/7 சர்க்கிள், விங்க் மியூசிக் பிரீமியம், இலவச ஹெலோட்யூன்ஸ் உள்ளிட்ட பல நன்மைகள் கிடைக்கிறது. குறிப்பாக ஏர்டெல் ரூ.319 ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டி ஒரு மாதம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏர்டெல் ரூ.359 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 2.5ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட நன்மைகளும் இந்த திட்டத்தில் கிடைக்கும். ஏர்டெல் ரூ.359 ப்ரீபெய்ட் திட்டத்தில் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் பிளே அணுகல், அப்பல்லோ 24/7 சர்க்கிள், விங்க் மியூசிக் பிரீமியம், இலவச ஹெலோட்யூன்ஸ் உள்ளிட்ட பல நன்மைகள் கிடைக்கிறது. குறிப்பாக ஏர்டெல் ரூ.359 ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டி ஒரு மாதம் ஆகும்
ஏர்டெல் ரூ.299 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 1.5ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட பல அசத்தலான நன்மைகளை வழங்குகிறது இந்த ஏர்டெல் திட்டம். மேலும் அப்பல்லோ 24/7 சர்க்கிள், விங்க் மியூசிக் பிரீமியம், இலவச ஹெலோட்யூன்ஸ் உள்ளிட்ட பல நன்மைகள் வழங்குகிறது இந்த ஏர்டெல் ரூ.299 ப்ரீபெய்ட் திட்டம்.


Click it and Unblock the Notifications








