ஏர்டெல் நெருங்கிருச்சு.. மாதம் ரூ.289 போதும்.. 84 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் வாய்ஸ்.. ஓடிடி சந்தா!
ஜியோ கஸ்டமர்களே வியக்கும் விதமாக ஏர்டெல் (Airtel) நிறுவனம் மாதத்துக்கு வெறும் ரூ.289 செலவில் 84 நாட்கள் வேலிடிட்டி 2 ஜிபி தினசரி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மட்டுமல்லாமல் 3 மாதங்களுக்கான ஓடிடி சப்ஸ்கிரிப்ஷனை வழங்குகிறது. இதுகுறித்த விவரம் இதோ.
ஜியோவுக்கு நிகராக ஏர்டெல் நிறுவனம் ஒருசில திட்டங்களை வைத்திருக்கிறது. அந்த வரிசையில், ஓடிடி பிரியர்களையும், டேட்டா பிரியர்களையும் தட்டித்தூக்கும் விதமாக 2 திட்டங்களை வைத்திருக்கிறது. ஒரு திட்டத்தில் 2 ஜிபி டேட்டாவுடன் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் சப்ஸ்கிரிப்ஷனும், மற்றொரு திட்டத்தில் 3 ஜிபி டேட்டாவுடன் நெட்பிளிக்ஸ் சப்ஸ்கிரிப்ஷனும் கிடைக்கிறது.

ஏர்டெல் ரூ 869 திட்ட விவரங்கள் (Airtel Rs 869 Plan Details): இந்த ஏர்டெல் ப்ரீபெய்ட் திட்டத்தை (Airtel Prepaid Plan) ரீசார்ஜ் செய்தால், உங்களுக்கு டேட்டா, வாய்ஸ் கால் மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகளோடு ஓடிடி சப்ஸ்கிரிப்ஷனும் கொடுக்கப்படுகிறது. ஆகவே, நாள்தோறும் 2 ஜிபி டேட்டா வீதம் மொத்தமாக 168 ஜிபி டேட்டாவை பயன்படுத்தலாம்.
இந்த 2 ஜிபி டேட்டாவுக்கு பிறகு 64 கேபிபிஎஸ் வேகத்தில் ஃபேர் யூசேஜ் பாலிசி டேட்டா கொடுக்கப்படுகிறது. அதோடு அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால் சலுகை வழங்கப்படுகிறது. அதேபோல நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்கள் வீதம் 3 மாதங்களுக்கு அனுப்பி கொள்ளலாம். அப்பல்லோ 24|7 சர்கிள் (Apollo 24|7 Circle) சலுகை கிடைக்கிறது.
அதுமட்டுமல்லாமல், ப்ரீ ஹெலோடியூன்ஸ் (Free Hellotunes), விங்க் மியூசிக் (Wynk Music) மற்றும் ரிவார்ட்ஸ்மினி (RewardsMini) ஆகியவற்றை பயன்படுத்தலாம். அதேபோல ஏர்டெல் 5ஜி நெட்வொர்க் ஏரியாக்களில் அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Airtel Unlimited 5G Data) சலுகை கொடுக்கப்படுகிறது. இந்த சலுகைகள் போக ரூ 149 மதிப்பிலான டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மொபைல் (Disney+ Hotstar Mobile) சப்ஸ்கிரிப்ஷன் வழங்கப்படுகிறது.
இந்த சப்ஸ்கிரிப்ஷனை மூன்று மாதங்களுக்கு பயன்படுத்தி கொள்ள முடியும். இந்த திட்டத்துக்கு 84 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. ஒருவேளை உங்களுக்கு இதே வேலிடிட்டியுடன் நெட்பிளிக்ஸ் சப்ஸ்கிரிப்ஷன் வேண்டுமானால், ரூ 1499 விலையில் கிடைக்கும் ப்ரீபெய்ட் திட்டத்தை தேர்வு செய்து கொள்ளுங்கள். இதன் முழு விவரங்களை இப்போது பார்ப்போம்.
ஏர்டெல் ரூ 1499 திட்ட விவரங்கள் (Airtel Rs 1499 Plan Details): இந்த திட்டத்திலும் டேட்டா, வாய்ஸ் கால், எஸ்எம்எஸ் மற்றும் ஓடிடி சலுகைகள் வழங்கப்படுகிறது. இந்த ப்ரீபெய்ட் திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்கள் தினசரி 3 ஜிபி டேட்டா வீதம் மொத்தமாக 252 ஜிபி டேட்டாவை பயன்படுத்தி கொள்ள முடியும். இந்த 2ஜிபிக்கு பின் 64 கேபிபிஎஸ் வேக டேட்டா கிடைக்கிறது.

அதேபோல அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால் சலுகை மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் சலுகை வழங்கப்படுகிறது. முந்தைய திட்டத்தை போலவே ஏர்டெல் அன்லிமிடெட் 5ஜி டேட்டா சலுகையை பெற்று கொள்ள முடியும். அதேபோல அப்பல்லோ 24|7 சர்க்கிள், ப்ரீ ஹாலோடியூன்ஸ் மற்றும் விங்க் மியூசிக் ஆகியவற்றை பயன்படுத்தலாம்.
இந்த சலுகைகள் போக ரூ 199 மதிப்பிலான நெட்பிளிக்ஸ் (Netflix) பேஸிக் சப்ஸ்கிரிப்ஷன் இலவசமாக வழங்கப்படுகிறது. இந்த திட்டத்துக்கும் 84 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது. இந்த 2 திட்டங்களும் ஜியோ திட்டங்களுக்கு நெருங்கிய சலுகைகள் கொண்டதாகவே இருக்கின்றன. ஏனென்றால், ஓடிடியோடு 2 ஜிபி, 3 ஜிபி தினசரி டேட்டா சலுகைகளை கொண்டிருக்கின்றன.


Click it and Unblock the Notifications








