ஏர்டெலுக்கு கும்பிடு.. மாதாந்திரம் ரூ.279 போதும்.. 84 நாட்கள் வேலிடிட்டி.. 20 ஓடிடி சந்தா.. வாய்ஸ் கால்கள்!
ஏர்டெல் கஸ்டமர்களுக்கு மாதாந்திரம் ரூ.279 செலவில் 20 ஓடிடி ஆப்களின் சந்தா மட்டுமல்லாமல், 5ஜி டேட்டா, வாய்ஸ் கால்கள், தினசரி டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகள் கிடைக்கிறது. 2 ஜிபி டேட்டா மற்றும் ஓடிடி சலுகையில் தட்டித்தூக்கும் 2 திட்டங்கள் இதோ.
ஏர்டெல் ரூ 839 திட்ட விவரங்கள் (Airtel Rs 839 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் (Prepaid Plan) தினசரி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ், ஓடிடி மற்றும் கூடுதல் சலுகைகள் கிடைக்கிறது. ஆகவே, இந்த திட்டத்தை பெற்றால், தினசரி 2 ஜிபி டேட்டாவை பயன்படுத்தலாம். 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா மற்றும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா கிடைக்கிறது.

ஆகவே, இந்த திட்டத்தில் 168 ஜிபி டேட்டாவையும், 5ஜி சலுகையில் கீழ் அன்லிமிடெட் டேட்டாவையும் பயன்படுத்தலாம். இந்த ஏர்டெல் ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரிக்கு 100 எஸ்எம்எஸ்கள் மற்றும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice Call) சலுகை கிடைக்கிறது.
இந்த சலுகைகள் போக ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பிளே (Airtel Xstream Play) சலுகையில் 20+ ஓடிடி ஆப்களின் சந்தா கிடைக்கிறது. சோனிலிவ் (Sony LIV), ஃபேன்கோட் (FanCode), சன்நெக்ஸ்ட் (Sun NXT), லயன்ஸ்கேட் பிளே (Lionsgate Play), ஹோய்சோய் (Hoichoi), எபிக்ஆன் (EPICon), சாவ்பால் (Chaupal) மற்றும் ஈராஸ் நவ் (ErosNow) ஆப்கள் வருகிறது.
ஷீமாரூமீ (ShemarooMe), ஆல்ட்பாலாஜி (Alt Balaji), மனோரமா மேக்ஸ் (ManoramaMax), டாகுபோ (Docubay), கிளிக் (Klikk), பிளேஃபிளிக்ஸ் (Playflix), அல்ட்ரா (Ultra), ஆஹா (Aha), கன்ச்சா லன்ங்கா (Kanccha Lannka), ஷார்ட்ஸ்டிவி (Shorts TV), நம்மஃபிளிக்ஸ் (Namma Flix), ஸ்டேஜ் (Stage) மற்றும் ஹங்கமா (Hungama) ஆகிய ஆப்களையும் பயன்படுத்தி கொள்ளலாம்.
மேலும், ராஜ் டிஜிட்டல் (Raj Digital) மற்றும் டாலிவுட் பிளே (Dollywood Play) ஆப்களின் சந்தாவும் கிடைக்கிறது. இதுபோக ரிவார்ட்ஸ் மினி சந்தா (RewardsMini Subscription), 3 மாதங்களுக்கான அப்பல்லோ 24|7 சர்க்கிள் (Apollo 24|7 Circle) சந்தா, ப்ரீ ஹாலேடியூன்ஸ் (Free Hellotunes) மற்றும் விங்க் மியூசிக் (Wynk Music) சலுகைகளை பெற்று கொள்ளலாம்.
இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கு 84 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது. ஆகவே, ஓடிடி ஆப்களையும் 3 மாதங்களுக்கு பயன்படுத்தி கொள்ளலாம். இதேபோல 2 ஜிபி டேட்டாவுடன் டிஸ்னிபிளஸ் ஹாட்ஸ்டார் சந்தா கொண்ட மற்றொரு ப்ரீபெய்ட் திட்டம் இருக்கிறது. இந்த திட்டத்தின் முழு சலுகைகளை இப்போது பார்க்கலாம்.
ஏர்டெல் ரூ 869 திட்ட விவரங்கள் (Airtel Rs 869 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்திலும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா முதல் ஓடிடி சந்தா வரையில் அனைத்து சலுகைகளும் கிடைக்கின்றன. இந்த திட்டத்தில் தினசரிக்கு 2 ஜிபி டேட்டா சலுகை கொடுக்கப்படுகிறது. முந்தைய திட்டத்தை போல 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா வருகிறது.
அதேபோல அன்லிமிடெட் 5ஜி டேட்டா சலுகை இந்த திட்டத்துக்கும் கிடைக்கிறது. மேலும், அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால் சலுகைள் மற்றும் தினசரிக்கு 100 எஸ்எம்எஸ்கள் சலுகைகளை பெற்று கொள்ளலாம். இதுபோக ஓடிடி சலுகையும் இதில் வருகிறது. ஆனால், முந்தைய திட்டத்தை போலல்லாமல் கொடுக்கப்பட்டுள்ளது.
அதாவது, டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் (Disney+Hotstar) சலுகை மட்டுமே வருகிறது. இதுபோக முந்தைய திட்டத்தில் கிடைத்த 3 மாதங்களுக்கான அப்பல்லோ 24|7 சர்க்கிள், வின்க் மியூசிக், ப்ரீ ஹெலோ டியூன்ஸ் மற்றும் ரிவார்ட்ஸ்மினி சந்தா கிடைக்கிறது. ஆகவே, 2 ஜிபி திட்டங்களில் இந்த 2 திட்டங்களே நல்ல சலுகைகளை கொடுக்கின்றன.


Click it and Unblock the Notifications