Home
News

ஏர்டெல் கொல மாஸ்.. 2GB டெய்லி டேட்டா.. OTT சந்தா.. 3 மாதம் வேலிடிட்டி.. அன்லிமிடெட் 5G.. ரூ.839 போதும்!

ஏர்டெல் (Airtel) கஸ்டமர்களுக்கு டேட்டா, வாய்ஸ், ஓடிடி மட்டுமல்லாமல் அன்லிமிடெட் 5ஜி டேட்டா சலுகையையும் ரூ 839 விலையில் கிடைக்கும் ப்ரீபெய்ட் திட்டம் வழங்குகிறது. அதே போல 30 நாட்களுக்கும் மலிவான விலையில் மற்றொரு திட்டம் இருக்கிறது. இதுகுறித்த விவரங்கள் இதோ.

ஏர்டெல் ரூ 839 திட்ட விவரங்கள் (Airtel Rs 839 Plan Details): இந்த திட்டத்தில் டேட்டா (Data), அன்லிமிடெட் வாய்ஸ் (Unlimited Voice), எஸ்எம்எஸ் (SMS) மட்டுமல்லாமல், ஓடிடி (OTT) சலுகைகளும் கிடைக்கின்றன. இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்தால், நாளொன்றுக்கு 2 ஜிபி வீதம் மொத்தமாக 168 ஜிபி டேட்டா ஒதுக்கப்படும்.

 ரூ.839 போதும்! 2GB டேட்டா.. வாய்ஸ்..  OTT சந்தா.. 3 மாதம் வேலிடிட்டி!

இந்த தினசரி டேட்டாவை முழுமையாக பயன்படுத்திவிட்டாலும், 64 கேபிபிஎஸ் வேகத்தில் அன்லிமிடெட் டேட்டாவை (Unlimited Data) பயன்படுத்திக் கொள்ளலாம். அதோடு அன்லிமிடெட் லோக்கல் (Local Call) மற்றும் எஸ்டிடி கால் (STD Call) சலுகைகள் வழங்கப்படும். அதுமட்டுமல்லாமல், ஏர்டெல் தேங்க்ஸ் (Airtel Thanks) சலுகைகளும் இந்த திட்டத்துக்கு பொருந்தும்.

ஆகவே, அன்லிமிடெட் 5ஜி டேட்டா ( Unlimited 5G Data) சலுகையும், இந்த திட்டத்தில் வழங்கப்படுகிறது. இந்த 5ஜி சலுகை ஏர்டெல் 5ஜி சேவை கிடைக்கும் பகுதிகளுக்கு மட்டுமே பொருந்தும். இந்த சலுகைகள் போக ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பிளோ (Airtel Xstream Play) உடன் 15க்கும் மேற்பட்ட ஓடிடி தளங்களின் சந்தா கிடைக்கிறது.

அந்த வகையில், மூன்று மாதத்துக்கான டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மொபைல் (Disney plus Hotstar Mobile) சந்தா கொடுக்கப்படும். அதோடு சோனிலிவ் (Sony LIV), லயன்ஸ்கேட் பிளே (Lionsgate Play), ஈராஸ் நவ் (Eros Now), மனோரமா மேக்ஸ் (ManoramaMAX) உள்ளிட்ட பல தளங்களின் சலுகைகளையும் பெற்றுக்கொள்ள முடியும்.

அதோடு ரிவார்ட்ஸ்மினி (RewardsMini) சந்தா மூலம் ரூ.80 மதிப்பில் கேஷ் பேக் கிடைக்கிறது. மேலும், மூன்று மாதத்துக்கான அப்பல்லோ 24/7 சர்க்கிள் மெம்பர்ஷிப் ( Apollo 24|7 Circle Membership), விங்க் மியூசிக் (Wynk Music), ப்ரீ ஹாலோடியூன்ஸ் (Free Hellotunes) சலுகைகளும் கிடைக்கிறது.

இந்த திட்டத்துக்கு 84 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது. இதே போல சலுகைகள், உங்களுக்கு 30 நாட்களுக்கு மட்டும் போதும் என்றால், ரூ 359 விலையில் கிடைக்கும் ஏர்டெல்லின் மற்றொரு ப்ரீபெய்ட் திட்டத்தை கஸ்டமர்கள் தேர்வு செய்யலாம். இது திட்டத்தின் முழு விவரங்களை இப்போது காண்போம்.

ஏர்டெல் ரூ 359 பிளான் விவரங்கள் (Airtel Rs 359 Plan Details): இந்த திட்டத்திலும் நாளொன்றுக்கு 2 ஜிபி வீதம் மொத்தமாக 60 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இந்த தினசரி டேட்டாவை முழுமையாக பயன்படுத்திய பின்பு 64 கேபிபிஎஸ் வேகத்தில் அன்லிமிடெட் டேட்டா சேவை தொடர்ந்து வழங்கப்படும்.

அதோடு அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் கால்களை செய்துகொள்ள முடியும். நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்களை அனுப்பிக் கொள்ளலாம். மேலும், ரூ 5 டால்க்டைம் கொடுக்கப்படுகிறது. இந்த திட்டத்துக்கும் ஏர்டெல் 5ஜி சேவை கிடைக்கும் பகுதிகளில் உள்ள கஸ்டமர்களுக்கு அன்லிமிடெட் 5ஜி டேட்டா சலுகை பொருந்தும்.

அதேபோல ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் சலுகையின் கீழ் 15க்கும் மேற்பட்ட ஓடிடி சலுகைகள் கிடைக்கிறது. ஆகவே, சோனிலிவ், லயன்ஸ்கேட் பிளே, பேன்கோட், ஈராஸ் நவ், மனோரமா மேக்ஸ் உள்ளிட்ட ஓடிடி தளங்களை இலவசமாக பார்த்துக்கொள்ளலாம். முந்தைய திட்டத்தைபோல மூன்று மாதத்துக்கான அப்பல்லோ 24/7 சர்க்கிள் மெம்பர்ஷிப் கொடுக்கப்படுகிறது.

மேலும், வின்க் மியூசிக் ப்ரீ மற்றும் ப்ரீ ஹலோ டியூன்ஸ் சலுகை கிடைக்கிறது. இந்த இரண்டு திட்டங்களிலும் 100 எஸ்எம்எஸ்களுக்கு மேல் அனுப்பினால், லோக்கலுக்கு 1 ரூபாயும், எஸ்டிடிக்கு 1.5 ரூபாயும் வசூலிக்கப்படும். ஓடிடி தளங்களை விரும்பும் ஏர்டெல் கஸ்டமர்களுக்கு இந்த திட்டங்கள் நல்ல தேர்வாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

More from GizBot

Best Mobiles in India

English summary
Airtel Rs 839 Plan Offers 2GB Daily Data, Unlimited Voice, 84 days Validity OTT Benefits Full Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X