அறக்க பறக்க ரீசார்ஜ்.. 56 நாட்களுக்கு வாரி வழங்கிய ஏர்டெல்.. வாய்ஸ் கால்கள்.. 3 ஜிபி டேட்டா.. 20+ ஓடிடி சந்தா!
ஏர்டெல் (Airtel) நிறுவனத்தில் 56 நாட்கள் வேலிடிட்டி கொண்ட ப்ரீபெய்ட் திட்டத்தில் வாய்ஸ் கால்கள், டேட்டா, ஓடிடி போன்ற ஒட்டுமொத்த சலுகைகளும் அதிகபட்சமாக கொடுக்கப்பட்டு இருக்கிறது. இதுபோக கூடுதல் சலுகைகள் ஏராளமாக கிடைக்கின்றன. இந்த திட்டத்தில் அப்படியென்ன சலுகைகள் கிடைக்கின்றன? முழு விவரங்களையும் இப்போது தெரிந்து கொள்ளலாம்.
ஏர்டெல் ப்ரீபெய்ட் கஸ்டமர்களுக்கு என்டர்டெயின்மெண்ட் திட்டங்கள் (Entertainment Plans) தனியாக கிடைக்கின்றன. இதில் பிரீமியம் ஓடிடி போக கூடுதல் ஓடிடி ஆப்களுடன் (OTT Apps) ஒரு சில திட்டங்கள் மட்டுமே இருக்கின்றன. அதாவது, ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பிளே பிரீமியம் (Airtel Xstream Play Premium) சந்தா அதுபோன்ற திட்டங்களில் கூடுதலாக கிடைக்கும். இந்த திட்டத்திலும் அந்த சந்தா கொடுக்கப்படுகிறது.

ஏர்டெல் ரூ 838 ப்ரீபெய்ட் திட்டம் (Airtel Rs 838 Prepaid Plan): இந்த திட்டத்துக்கு கிடைக்கும் ஓடிடி சலுகைகளை முதலில் பார்த்துவிடலாம். இதை ரீசார்ஜ் செய்த பிறகு அமேசான் பிரைம் லைட் (Amazon Prime Lite) சந்தா கிடைக்கும். இந்த திட்டத்துக்கு 56 நாட்கள் வேலிடிட்டி கிடைப்பதால், இந்த சந்தாவையும் 56 நாட்கள் பயன்படுத்தி கொள்ளலாம். இதுபோக 20+ ஓடிடிகள் கிடைக்கும்.
அதாவது, முன்பே சொன்னதை போல ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பிளே பிரீமியம் சந்தா இதில் கொடுக்கப்படுகிறது. சோனிலிவ் (SonyLIV), லயன்ஸ்கேட்பிளே (Lionsgate Play), சன்நெக்ஸ்ட் (SunNxt), ஆஹா (Aha), சாவ்பால் (Chaupal) மற்றும் ஹோய்சோய் (HoiChoi) ஆகிய உள்ளிட்ட 20+ ஓடிடி ஆப்களின் சந்தா கிடைக்கிறது. ஆனால், இதை தனித்தனியாக பயன்படுத்த முடியாது. ஒரே ஆப் மூலம் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
ஆகவே, ஒரே என்டர்டெயின்மெண்ட் திட்டத்தில் 20+ ஓடிடி ஆப்களை பயன்படுத்த முடிகிறது. இவ்வளவு ஓடிடி ஆப்கள் கிடைப்பதால், டேட்டா அதிகமாக தேவைப்படும். அதையும் இந்த திட்டம் கொடுக்கிறது. அதாவது, நாளொன்றுக்கு 3 ஜிபி டேட்டாவை கொடுத்துள்ளது. இந்த டேட்டாவுக்கு பிறகு 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா மட்டுமல்லாமல், அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) கிடைக்கிறது.
தினசரி டேட்டாவே அதிகமாக இருக்கிறது. கூடவே அன்லிமிடெட் 5ஜி டேட்டா கிடைப்பதால், ஓடிடி ஆப்களை தாராளமாக பயன்படுத்தி கொள்ளலாம். இப்போது மற்ற சலுகைகளுக்கு வருவோம். இந்த ஓடிடி சலுகைகள் மட்டுமல்லாமல், அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் கால்கள் (Roaming Calls) சலுகை கொடுக்கப்பட்டு இருக்கிறது.
இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கு நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ் சலுகையும் கிடைக்கும். இந்த சலுகைகளுக்கு அடுத்து ஏர்டெல்லில் மட்டுமே பிரத்யேகமாக கொடுக்கப்படும், பெர்ப்லெக்ஸிடி ப்ரோ ஏஐ (Perplexity Pro AI) சந்தா கொடுக்கப்படுகிறது. இந்த திட்டத்துக்கு கிடைக்கும் 56 நாட்கள் வேலிடிட்டியில் வரையில் மட்டுமே இந்த ஏஐ சந்தா கிடைக்கும் என்று நினைக்க வேண்டாம்.
12 மாதங்களுக்கு கொடுக்கப்படுகிறது. ஆகவே, திட்டத்தின் வேலிடிட்டி முடிந்த உடனேயே அடுத்த ரீசார்ஜ் திட்டத்துக்கு செல்லுங்கள். அப்படி செய்தால் தொடர்ந்து, பெர்ப்லெக்ஸிடி ப்ரோ ஏஐ சந்தாவை பயன்படுத்தி கொள்ளலாம். இந்த சந்தாவுக்கு பிறகு வழக்கமாக கிடைக்கும் ஸ்பேம் அலெர்ட் கொடுக்கப்படுகிறது. வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ்களில் இதை பயன்படுத்தலாம்.
அதாவது, ஏர்டெல் கஸ்டமர்களுக்கு வரும் இன்கம்மிங் வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ்களில் ஏதேனும் ஸ்பேம்கள் இருந்தால், அதை லைவ்வாக அலெர்ட் செய்து கொடுக்கும். மேலும், ப்ரீ ஹலோ டியூன்ஸ் சலுகையை இந்த திட்டத்தில் பெற்று கொள்ளலாம். இப்படி ஒரே திட்டத்தில் ஏராளமான சலுகைகள் வாரி வழங்கப்பட்டு இருக்கின்றன. இதுவொரு என்டர்டெயின்மெண்ட் திட்டமாகும்.


Click it and Unblock the Notifications








