Home
News

ஒரே Airtel ரீசார்ஜ்.. தினமும் 3ஜிபி டேட்டா.. அமேசான் பிரைம்.. வாய்ஸ் கால்கள்.. என்ன விலை?

ஜியோ (Jio) நிறுவனத்துக்குப் போட்டி கொடுக்கும் வகையில் அசத்தலான ப்ரீபெய்ட் திட்டங்கள் மற்றும் சலுகைகளை வழங்கி வருகிறது ஏர்டெல் (Airtel) நிறுவனம். குறிப்பாக ஏர்டெல் நிறுவனம் இப்போதும் சில பட்ஜெட் விலை திட்டங்களில் அதிக நன்மைகளை வழங்குகிறது. எனவே தான் ஜியோவை விட ஏர்டெல் திட்டங்களில் மக்கள் அதிக ரீசார்ஜ் செய்கின்றனர்.

அதுவும் ஏர்டெல் நிறுவனம் பட்ஜெட் விலையில் ஒடிடி நன்மை மற்றும் அதிக டேட்டா தரும் ஒரு அசத்தலான திட்டத்தை வைத்துள்ளது. அதாவது ஏர்டெல் ரூ.838 ப்ரீபெய்ட் திட்டம் தான் அதிக நன்மைகளை வழங்குகிறது. இப்போது ஏர்டெல் ரூ.838 ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டி மற்றும் நன்மைகளை சற்று விரிவாகப் பார்க்கலாம்.

ஒரே Airtel ரீசார்ஜ்.. தினமும் 3ஜிபி டேட்டா..என்ன விலை?

ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.838 ப்ரீபெய்ட்திட்டம் (Airtel Rs 838 Plan Details) ஆனது தினசரி 3ஜிபி டேட்டாவை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 56 நாட்கள் ஆகும். எனவே நீங்கள் ஏர்டெல் ரூ.838 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 168ஜிபி டேட்டா கிடைக்கும் என்பதை நினைவில் கொள்க.

மேலும் 56 நாட்களுக்கு அமேசான் பிரைம் மெம்பர்ஷிப் (amazon prime membership) சந்தா வழங்கும் இந்த ரூ.838 திட்டம். குறிப்பாக இந்த பிரைம் சந்தா மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும். அதேபோல் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே (Airtel Xstream Play) சந்தாவும் இந்த திட்டத்தில் உள்ளது. குறிப்பாக இந்த எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே சந்தா மூலம் 22 ஓடிடி ஆப்ஸ்களை பயன்படுத்த முடியும்.

அதேபோல் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை ஏர்டெல் ரூ.838 திட்டத்தில் வழங்கப்படுகிறது. இதுதவிர தினமும் 100 எஸ்எம்எஸ், அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data), விங்க் மியூசிக் ( Wynk Music), ப்ரீ ஹாலோடியூன்ஸ் (Free Hellotunes), அப்பல்லோ 24/7 சர்க்கிள் (apollo 24/7 circle) உள்ளிட்ட
நன்மைகள் இதில் வழங்கப்படுகிறது.

ஒருவேளை பட்ஜெட் விலையில் அதிக நாள் வேலிடிட்டி தரும் திட்டங்கள் வேண்டும் என்று நினைக்கும் பயனர்கள் ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.979 ப்ரீபெய்ட் திட்டத்தை தேர்வு செய்வது மிகவும் நல்லது. இந்த திட்டத்தில் உள்ள நன்மைகளை இப்போது பார்க்கலாம்.

ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.979 ப்ரீபெய்ட் திட்டம் (Airtel Rs 979 Plan Details) ஆனது தினமும் 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். எனவே நீங்கள் இந்த ஏர்டெல் ரூ.979 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 168ஜிபி டேட்டா கிடைக்கும். அதேபோல் இந்த திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64கேபிபிஎஸ் ஆக குறையும்.

ஒரே Airtel ரீசார்ஜ்.. தினமும் 3ஜிபி டேட்டா..என்ன விலை?

ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே (Airtel Xstream Play) சந்தா இந்த ரூ.979 திட்டத்தில் கிடைக்கிறது. அதுவும் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே ஆனது 22 ஓடிடி ஆப்களின் அனுகலை வழங்குகிறது. பின்பு அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) & ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை இதில் உள்ளது.

தினமும் 100 எஸ்எம்எஸ், அப்பல்லோ 24/7 சர்க்கிள் (apollo 24/7 circle), விங்க் மியூசிக் (Wynk Music), ஹலோ டியூன்ஸ் (Hello Tunes), அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) உள்ளிட்ட நன்மைகள் ஏர்டெல் ரூ.979 ப்ரீபெய்ட் திட்டத்தில் உள்ளது. மேலும் நெட்வொர்க் அடிப்படையிலான ஏஐ (AI) ஆற்றல் பெற்ற ஸ்பேம் கண்டறிதல் தீர்வை சமீபத்தில் ஏர்டெல் அறிமுகம் செய்தது. ஏர்டெல் பயனர்களுக்கு ஸ்பேம் அழைப்புகள் மற்றும் செய்திகளால் (எஸ்எம்எஸ்) ஏற்படும் சிக்கலைக் தடுக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

photo credit: Bloomberg, business-standard.com

More from GizBot

Best Mobiles in India

English summary
Airtel Rs 838 Plan With 56 Days Validity Unlimited Voice Calls 168GB Data Check 2 Month Plan
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X