தூக்கி சாப்பிட்ட ஏர்டெல்.. அன்லிமிடெட் வாய்ஸ்.. 3 ஜிபி டேட்டா.. பிரைம் வீடியோ சந்தா.. இந்த விலைக்கு வேற இல்ல!
ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) மற்றும் வோடபோன் ஐடியா (Vodafone Idea) போன்ற போட்டி நிறுவனங்கள் கொடுக்க முடியாத விலைக்கு பார்தி ஏர்டெல் (Bharti Airtel) ஆனது 3 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், 100 எஸ்எம்எஸ் சலுகைகள் மட்டுமல்லாமல், அமேசான் பிரைம் வீடியோ உள்ளிட்ட 22-க்கும் மேற்பட்ட ஓடிடி ஆப்களின் சாந்தா, அப்பல்லோ 24|7 சர்க்கிள் மெம்பர்ஷிப் போன்ற கூடுதல் சலுகைகளையும் கொடுத்துள்ளது. இந்த ஏர்டெல் ப்ரீபெய்ட் திட்டம் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.
ஏர்டெல் ரூ 838 திட்ட விவரங்கள் (Airtel Rs 838 Plan Details): ஜியோ, வோடபோன் ஐடியா நிறுவனங்களை ஒப்பிடுகையில், இந்த திட்டத்தில் மட்டுமே அடிமட்ட விலைக்கு அமேசான் பிரைம் வீடியோ (Amazon Prime Video) சந்தா கொடுக்கப்படுகிறது. இந்த சலுகை மட்டுமல்லாமல், ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் பிளே (Airtel Xstream Play) மூலம் கூடுதல் ஓடிடி ஆப்களின் சந்தாவையும் கொடுக்கிறது.

ஆகவே, அமேசான் பிரைம் வீடியோ மட்டுமல்லாமல், சோனிலிவ் (SonyLIV), ஈராஸ் நவ் (Eros Now), மனோரமா மேக்ஸ் (Manorama Max), ஷார்ட்ஸ் டிவி (Shorts TV), எபிக் ஆன் (Epic On), ஃபேன் கோட் (Fan Code), லயன்ஸ்கேட் பிளே (Lionsgate Play), நம்ம ஃபிளிக்ஸ் (Namma Flix), டாலிவுட்பிளே (Dollywood Play), சோஷியல் ஸ்வாக் (Social Swag) மற்றும் ஷீமாரூமீ (Shemaroome) ஆப்களின் சந்தா கிடைக்கிறது.
மேலும், ராஜ் டிஜிட்டல் டிவி (Raj Digital TV), கிளிக் (Klikk), அல்ட்ரா (Ultra), ஹோய்சோய் (HoiChoi),ஹங்கமா (Hungama), கான்ச்சா லங்கா (Kanccha Lanka), டாகுபே (Docubay), சாவ்பால் (Chaupal) மற்றும் டிவோ (DIVO) ஆகிய ஆப்களின் சந்தாவையும் பயன்படுத்தி கொள்ள முடியும். 3 மாதங்களுக்கு அப்பல்லோ 24|7 சர்க்கிள் (Apollo 24|7 Circle) மெம்பர்ஷிப் கிடைக்கிறது.
மேலும், ப்ரீ-ஹலோ டியூன்ஸ் (Hellotunes) மற்றும் விங்க் மியூசிக் (Wynk Music) சலுகைகளை பெற்று கொள்ள முடியும். இந்த சலுகைகள் போக முக்கியமான சலுகைகளை பார்க்கையில், அன்லிமிடெட், லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை கிடைக்கிறது. நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்களை கஸ்டமர்கள் செய்து கொள்ளலாம்.
டேட்டாவும் வாரி வழங்கப்பட்டுள்ளது. அதாவது, தினசரிக்கு 3 ஜிபி டேட்டாவை பயன்படுத்தலாம். இந்த 3 ஜிபிக்கு பிறகு 64 கேபிபிஎஸ் வேகத்தில் போஸ்ட் டேட்டா வருகிறது. இதுபோக ஏர்டெல் 5ஜி சேவை கிடைக்கும் பகுதிகளில் இருக்கும் கஸ்டமர்களுக்கு அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) சலுகை கொடுக்கப்படுகிறது. 56 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது.
ஆகவே, ஓடிடி ஆப்களை 2 மாதங்களுக்கு பயன்படுத்தி கொள்ள முடியும். இதேபோல மற்றொரு திட்டத்திலும் அமேசான் பிரைம் வீடியோ சந்தா கொடுக்கப்படுகிறது. ஆனால், ரூ 1199ஆ இருக்கிறது. இருப்பினும், விலைக்கு ஏற்ப வேலிடிட்டி அதிகமாக கிடைக்கிறது. ஆனால், டேட்டா சலுகை சற்று குறைவாக கிடைக்கிறது. ஆனால், கூடுதல் வேலிடிட்டி அதை சரி செய்து விடுகிறது.
இந்த ப்ரீபெய்ட் திட்டத்தின் சலுகைகளை பார்க்கையில், முந்தைய திட்டத்தில் வந்த ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் பிளே சந்தா மற்றும் அமேசான் பிரைம் வீடியோ சாந்தா கிடைக்கிறது. ஆனால், அவற்றை 84 நாட்களுக்கு பயன்படுத்தி கொள்ளலாம். அதேபோல அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் கிடைக்கிறது. 100 எஸ்எம்எஸ்கள் வருகிறது. தினசரிக்கு 2.5 ஜிபி டேட்டாவை 84 நாட்களுக்கு பயன்படுத்தலாம்.


Click it and Unblock the Notifications








