Home
News

Airtel சிம் இருக்கா.. 56 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் வாய்ஸ்.. 3 ஜிபி டேட்டா.. பிரைம் வீடியோ லைட் சந்தா!

ஏர்டெல் (Airtel) கஸ்டமர்களுக்கு அமேசான் பிரைம் வீடியோ லைட் சந்தாவுடன் (Amazon Prime Lite Subscription) கிடைக்கும் 2 ப்ரீபெய்ட் திட்டங்களை பற்றி இங்கே தெரிந்து கொள்ளலாம். இதில் அதிகப்படியான டேட்டா சலுகை மட்டுமல்லாமல், அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் சலுகையும் கிடைக்கிறது. தினசரிக்கு 3 ஜிபி டேட்டாவுடன் கிடைப்பதால், ஓடிடி சந்தாவுக்கு ஏற்ற திட்டமாகவும் இருக்கிறது. இந்த ஏர்டெல் திட்டங்கள் (Airtel Plan) குறித்த விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

ஏர்டெல் ரூ 838 திட்ட விவரங்கள் (Airtel Rs 838 Plan Details): அமேசான் பிரைம் வீடியோ லைட் சந்தாவுடன் தொடங்கும் முதலாவது திட்டம் இதுவாகும். இதில் அதிகப்படியான டேட்டா கிடைக்கிறது. ஏனென்றால், நாளொன்றுக்கு 3 ஜிபி டேட்டாவை பயன்படுத்தி கொள்ள முடியும். இதுபோக அன்லிமிடெட் 5ஜி டேட்டாவும் (Unlimited 5G Data) கிடைக்கிறது. ஓடிடிக்கு ஏற்ப டேட்டா கிடைக்கிறது.

Airtel சிம் இருக்கா.. 56 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் வாய்ஸ்!

இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கு 56 நாட்கள் வேலிடிட்டி கிடைப்பதால், 168 ஜிபி டேட்டாவை மொத்தமாக பயன்படுத்தி கொள்ளலாம். இந்த தினசரி டேட்டா 3 ஜிபிக்கு பிறகு 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டாவானது கஸ்டமர்களுக்கு கொடுக்கப்படுகிறது. அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை போலவே அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) கால்கள் கிடைக்கின்றன.

அதே நேரத்தில் ரோமிங் கால்கள் (Roaming Calls) சலுகையும் வருகின்றன. நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ் சலுகைகளும் கிடைக்கின்றன. இப்போது, ஓடிடி சலுகைகளுக்கு வருவோம். முன்பே சொன்னதை போல இந்த திட்டத்துக்கு அமேசான் பிரைம் வீடியோ லைட் சந்தா கொடுக்கப்படுகிறது. இதை 56 நாட்களுக்கு பயன்படுத்தி கொள்ளலாம்.

இந்த பிரீமியம் ஓடிடி ஆப் போக ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பிளே பிரீமியம் சந்தாவும் இந்த திட்டத்துக்கு கிடைக்கிறது. இந்த எக்ஸ்ட்ரீம் பிளே சந்தாவில் 22-க்கும் மேற்பட்ட ஓடிடி ஆப்கள் அணுக கிடைக்கிறது. ஆகவே, இந்த ஒரே சந்தாவின் கீழ் சோனிலிவ் (SonyLIV), லயன்ஸ்கேட்பிளே (Lionsgate Play), ஆஹா (Aha), சாவ்பால் (Chaupal) போன்ற ஓடிடிகள் கிடைக்கிறது.

Airtel சிம் இருக்கா.. 56 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் வாய்ஸ்!

அதேபோல சன்நெக்ஸ்ட் (SunNxt), ஹோய்சோய் (HoiChoi) போன்ற ஓடிடி ஆப்களும் இதில் அடங்கும். ஆகவே, ஒரேவொரு திட்டத்தில் அன்லிமிடெட் 5ஜி டேட்டா, நாளொன்றுக்கு 3 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மட்டுமல்லாமல், ஒரு பிரீமியம் ஓடிடி மற்றும் 22-க்கும் மேற்பட்ட வழக்கமான ஓடிடி ஆப்களின் சந்தாவையும் பெற்று கொள்ளலாம்.

ஏர்டெல் ரூ 1199 திட்ட விவரங்கள் (Airtel Rs 1199 Plan Details): இந்த ஏர்டெல் திட்டத்துக்கும் முந்தைய திட்டத்தில் கிடைத்த அனைத்து ஓடிடி ஆப்களின் சந்தாவும் கிடைக்கிறது. ஆனால், தினசரி டேட்டா குறைவாக கிடைக்கிறது. அதே நேரத்தில் வேலிடிட்டி கூடுதலாக கிடைக்கிறது. ஆகவே, இந்த திட்டத்தை பெறும் கஸ்டமர்களுக்கு நாளொன்றுக்கு 2.5 ஜிபி டேட்டா கிடைக்கிறது.

இந்த டேட்டா போக 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா மற்றும் முந்தைய திட்டத்தில் பார்த்த அன்லிமிடெட் 5ஜி டேட்டா கிடைக்கிறது. இந்த திட்டத்துக்கு 84 நாட்கள் வேலிடிட்டி கிடைப்பதால், நாளொன்றுக்கு 2.5 ஜிபி வீதம் 210 ஜிபி டேட்டாவை பெற்று கொள்ளலாம். இது முந்தைய திட்டத்தைவிட அதிகமாகும். மற்ற சலுகைகள் ஒரே மாதிரியாகவே இருக்கின்றன.

ஆகவே, அமேசான் பிரைம் வீடியோ லைட் சந்தா மற்றும் ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பிளே பிரீமியம் சந்தா வருகிறது. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், 100 எஸ்எம்எஸ்கள் (தினசரி) சலுகைகள் உள்ளது. இந்த 2 திட்டங்களுக்கும் ஸ்பேம் அலெர்ட் சலுகை மற்றும் ப்ரீ ஹலோ டியூன்ஸ் சலுகை கிடைக்கிறது. இதில் உங்களுக்கு பிடித்த திட்டத்தை கமெண்ட்டில் சொல்லுங்கள்.

Best Mobiles in India

English summary
Airtel Rs 838 Plan With 3GB Data Unlimited Voice Calls Check Amazon Prime Lite Subscription Plans
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X