Home
News

Airtel போட்ட போடு.. தினமும் 3GB டேட்டா.. 22+ OTT.. அமேசான் பிரைம் சந்தா..56 நாளுக்கு எந்த விலை திட்டம்..

ஏர்டெல் (Airtel) நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களை (best prepaid plan from Airtel) வழங்க துவங்கியுள்ளது. சமீபத்தில் ஏர்டெல் நிறுவனம் தினசரி 3GB டேட்டா நன்மையை (Airtel 3GB data plans) கிடைக்கும் ஹெவி டேட்டா ரீசார்ஜ் திட்டங்களை (heavy data recharge plans) அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டம் 56 நாட்களுக்கு செல்லுபடியாகும் வேலிடிட்டியுடன் (56 days validity) வருகிறது. இந்த திட்டத்தின் விலை என்ன? இந்த புதிய ப்ரீபெய்ட் திட்டத்துடன் நிறுவனம் என்னென்ன நன்மைகளை வாரி வழங்குகிறது என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.

ஏர்டெல் நிறுவனம் இந்தியாவின் இரண்டாவது முன்னணி தொலைத்தொடர்பு (Telecom) நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. இந்தியாவின் தலைசிறந்த டெலிகாம் நிறுவனமாக ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) திகழ்கிறது. இருப்பினும், ஜியோவிற்கு (Jio) நிகரான ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களை மக்களுக்கு வழங்கும் ஒரு சிறந்த டெலிகாம் நிறுவனமாக ஏர்டெல் மட்டுமே நீண்ட காலமாக செயல்பட்டு வருகிறது.

Airtel போட்ட போடு.. தினமும் 3GB டேட்டா.. 22+ OTT.. அமேசான் பிரைம்..

Airtel போட்ட போடு.. தினமும் 3GB டேட்டா.. 22+ OTT.. அமேசான் பிரைம் சந்தா:

ஏர்டெல் நிறுவனம் இந்தியாவில் பல விதமான நன்மைகளுடன், பல விலை பிரிவுகளில் பல்வேறு ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வருகிறது. இந்த வரிசையில், ஹெவி டேட்டா பயனர்களை (Best prepaid plan for heavy data users) குறிவைத்து நிறுவனம் அறிமுகம் செய்துள்ள ஒரு சிறந்த திட்டம் என்றால், அது ஏர்டெல் ரூ. 838 திட்டம் (Airtel Rs 838 Plan) தான் மக்களே.

ஏர்டெல் ரூ.838 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம் (Airtel Rs 838 Prepaid Recharge Plan) தினமும் 3GB டேட்டா நன்மையை வழங்குகிறது. இந்த திட்டத்தின் செல்லுபடியாகும் காலம் பற்றி பேசுகையில், இந்த ஏர்டெல் ப்ரீபெய்ட் பிளான் (Airtel prepaid plan) 56 நாட்கள் செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் வருகிறது. 56 நாட்களுக்கு தினமும் 3GB டேட்டா நன்மை என்று கணக்கிட்டால் இந்த திட்டம் மொத்தமாக 168GB டேட்டா நன்மையை வழங்குகிறது.

ஏர்டெல் ரூ.838 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம் (Airtel Rs 838 Prepaid Recharge Plan):

இந்த திட்டம் அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் நன்மையை 56 நாள் வேலிடிட்டியில் எந்தவித தடையுமின்றி வழங்குகிறது. இதில் அன்லிமிடெட் லோக்கல் வாய்ஸ் கால்ஸ், STD மற்றும் ரோமிங் அழைப்புகள் என்று எல்லாம் அடங்கும். இந்த திட்டம் தினசரி 100 இலவச எஸ்எம்எஸ் நன்மையையும் வழங்குகிறது. இந்த திட்டம் இது தவிர கூடுதல் நன்மைகளையும் சேர்த்து வழங்குகிறது.

இந்த ஏர்டெல் 838 திட்டம் 56 நாட்களுக்கு செல்லுபடியாகும் அமேசான் பிரைம் மெம்பர்ஷிப் (amazon prime membership) சந்தாவை சேர்த்து இலவசமாக வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இத்துடன், Airtel OTT தலமான ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே (Airtel Xstream Play) சந்தாவையும் இலவசமாக வழங்குகிறது. ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே சந்தா, 22 OTT சேனல்களின் உள்ளடக்கங்களை பார்வையிட அனுமதிக்கிறது.

கூடுதல் இலவச நன்மை:

இது தவிர இந்த திட்டம் அன்லிமிடெட் 5ஜி டேட்டா நன்மை (Unlimited 5G Data), விங்க் மியூசிக் ( Wynk Music), ப்ரீ ஹாலோடியூன்ஸ் (Free Hellotunes), அப்பல்லோ 24/7 சர்க்கிள் (apollo 24/7 circle) போன்ற ஏர்டெல் தேங்க்ஸ் (Airtel Thanks) நன்மைகளையும் இலவசமாக வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Airtel Rs 838 Plan With 3GB Daily Data Amazon Prime and 22 Plus OTT Benefit Plan For 56 Days
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X